(Reading time: 14 - 27 minutes)

“ஆனால் இன்றைக்கு மாலை, உன்னைத் தேடிய போது, நீ அத்தை வீட்டிற்குப் போயிருக்க என்றவுடன், முதலில் எனக்குப் பயம்தான் வந்தது. நீ இங்கே நடந்ததை அத்தைகிட்டே சொன்னால், என் அப்பா என்னை நிக்க வச்சி கேள்வி கேப்பறேன்னு பயந்துட்டே தான் அங்கே வரக் கிளம்பினேன். நீ அங்கே போகவில்லை என்றதும் அப்படியே ஆடிப் போயிட்டேன் ரித்து. கொஞ்ச நேரம் எதுவுமே ஓடலை. என் வாழ்நாளில் இப்படி ஒரு நிலை எனக்கு வந்தது இல்லை. இனியும் வரக் கூடாதுன்னு தான் வேண்டிட்டு இருக்கேன். மித்ரா. அப்படி ஒரு கொடுமையான நிமிடங்கள் அவை.” எனக் கூற, மித்ரா அவன் கையை அழுத்திக் கொடுத்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதை அப்படியேப் பிடித்து தன் கன்னத்தோடு வைத்தவன்,

“என்ன செய்வது என்று புரியாமல் தவித்த போது, நல்ல வேளையாக ஹாஸ்பிடலில் இருந்து போன் வரவும், நீ அங்கே போயிருப்பதைப் புரிந்து கொண்டேன். உடனே கிளம்பி நேராக அங்கே வந்தேன். வந்த இடத்தில் அந்த சரவணன் பேசியதைக் கேட்டு, அடித்து துவைக்க வெறி வந்தது. நீ அவனுக்குக் கொடுத்த நோஸ்கட்டில் தான் பேசாமல் விட்டேன். ஆனால் அங்கேயே உன்னை இப்படி அணைத்து சுற்ற வேண்டும் என்று எண்ணினேன். பொது இடம் என்பதால் அமைதியாகி விட்டேன். அதோடு வீட்டிலும் அத்தையைப் பார்த்ததும் மீண்டும் பிரச்சினையா என்று நினைத்தேன். அதை நாம் இருவரும் எப்படியோ சமாளித்து விட்டோம்”

“சரி.  என்னை எப்போலேர்ந்து உங்களுக்குப் பிடிச்சது?

“நீயே சொன்னமாதிரி சின்ன வயசுலேர்ந்தே பிடிக்கும் தான். ஆனால் நான் ஜெர்மனியில் இருந்த போது, உன் நிச்சயம் பற்றி ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய போது, எனக்கு ரொம்ப கஷ்டமாகி விட்டது. அச்சோ அதை இத்தனை நாட்கள் கழித்துக் கேட்கிறோமே. நீ என்ன மனநிலையில் இருக்கிறாயோ என்று எல்லாம் எண்ணித் தவித்தேன். ஆனால் உனக்கு நிச்சயம் நடக்கும் நேரத்தில் என் மனதில் ஒரு வேதனை உணர்ந்தேன். அதை சரியாக யோசிக்காமல், உன் கல்யாணத்திற்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு சரவணன் பற்றி அத்தனை திருப்தி இல்லை. அம்மாகிட்டே, அப்பா கிட்டே எல்லாம் பேசியபோது அவனுடைய ஒழுக்கம் பற்றி எல்லாம் விசாரித்து விட்டதாகச் சொன்னார்கள். இருந்தும் அவனால் நீ கஷ்டப் படுவாயோ என்ற எண்ணம் அடி மனதில் இருந்தது. அது உண்மையாகவே , கல்யாணத்திற்கு முதல் நாள் அவர்களால் வெளி வந்து விட்டது. அப்போதும் என்னை கல்யாணத்திற்கு சம்மதம் கேட்கவும், நான் யோசிக்கத் தான் செய்தேன். அப்போ தான் அம்மா சில விஷயங்கள் சொன்னார்கள்” என்று நிறுத்தினான்.

“அத்தை என்ன சொன்னங்க?” என்று மித்ரா ஆவலாகக் கேட்டாள்.

ஹாய் பிரெண்ட்ஸ்.. ஒரு வழியா கதை முடிவை நோக்கி போயிட்டு இருக்கு. தொடர்ந்து ஆதரவு அளித்த அத்தனை வாசகர்களுக்கும் மிக்க நன்றி.

சில்சீ டீமிற்கும், வாசகர்களுக்கும், சக எழுத்தாளர்களுக்கும்

“அட்வான்ஸ் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்”.

தொடரும்

Episode # 38

Episode # 40

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.