(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 40 - தேவி

Kaathalana nesamo

மித்ராவின் ஆவலான கேள்வியில், அவள் நெற்றியில் முட்டிய ஷ்யாம்,

“ஆமாம் மித்ரா. அம்மா தான் முதலில் கண்டுபிடிச்சாங்க. உன்னோட எண்ணம் முழுதும் நான் இருக்கேன் அப்படின்னு. உன்னோட செயல்கள் எல்லாமே நான் என்ன சொல்லுவேன், நான் இருந்தா உனக்கு எப்படி செலக்ட் செய்வேன், அப்படின்னு நீ பேசினதைப் பார்த்து அவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துருக்கு. ஒரு சில நேரங்களில் நீ சரவணனைப் பற்றிப் பேசியதை விட என்னைப் பற்றித் தான் அதிகம் பேசிருக்க. இதை கவனிச்சுட்டு அப்பா கிட்டக் கூட மித்ராக்கு ஷ்யாம பேசியிருக்கலாமோன்னு கேட்ருக்காங்க. அப்பா தான் இதை யோசிக்க வேண்டிய நேரம் இது இல்லை. அப்படின்னு சொல்லிட்டாங்க. இதை எங்கிட்ட சொன்ன அம்மா , ஷ்யாம் மித்ராக்கு உன்னைத் தவிர வேறே யாரும் வாழ்க்கைத் துணையா வர முடியாது. அப்படி வரவன்கிட்டே அவ உன்னோட அக்கறை , அன்பைத் தான் தேடுறா. அது அவளுக்கேத் தெரியலை. எனக்குத் தெரிய வந்தப்போ அவளுக்கு சரவணன் கூட நிச்சயம் ஆகி விட்டது. ஆனால் இப்போ அது நின்றும் விட்டது. இது உன் அத்தை மகளாக மித்ராவிற்கு கை கொடுக்கும் நேரம். யோசிச்சு முடிவு பண்ணுன்னு சொன்னாங்க” என்றான்.

மித்ரா “அத்தை இஸ் கிரேட் தான் அத்தான். நானே உணராத ஒரு விஷயத்தை அவங்க புரிஞ்சிகிட்டு எனக்காகப் பேசியது ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு” என்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹ்ம்ம். அது மட்டும் இல்லை ரித்து.. உன் மாமாவும் உனக்காக சப்போர்ட் செய்து பேசினார்.” என்றவன், ராம் கூறியதை அவளிடம் சொன்னான்.

“ஷ்யாம்.. அம்மா சொன்னது இருக்கட்டும். உன் மனசைக் கேட்டுப் பாரு. உனக்கு மித்ரா மனைவியா வரது எந்த அளவிற்குப் பிடிச்சுருக்குன்னு யோசி. இப்போ இந்தக் கல்யாணம் நின்னதுக்காகவோ, இல்லை மற்றவங்க சொல்றதுக்காகவோ நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. அவளை உனக்குப் பிடிச்சு நீ கல்யாணம் பண்ணிக்கணும். அதில் கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் நீ வெளிப்படையா எங்கிட்ட சொல்லு. இந்த விஷயத்தை இங்கேயே முடிச்சுக்கலாம். “

அப்படின்னு முழுக்க முழுக்க உனக்காகத் தான் பேசினார் எங்கப்பா” என்று கூற,

“அம்மாக்கு அடுத்து தாய் மாமான்னு சொல்லுவாங்க. எனக்கு அவங்களை விட ஒரு படி மேலேவே மாமா கிடைச்சுருக்கார். அவர் பெற்ற மகனான உங்களை விட எனக்காக யோசிச்சது ரொம்பவே கொடுத்து வச்சுருக்கணும். இவங்களோட மகனான நீங்க செய்யற எதுவும் தப்பாகாது ஷ்யாம்” என்று மித்ரா கூறினாள்.

“ஹ்ம்ம். “ என்று ஷ்யாம் சொல்ல, மித்ரா அவன் மார்பில் சாய்ந்தபடி

“அத்தான் , நான் கேட்டதுக்கு நீங்க நேரடியா பதில் சொல்லலை ?” என்று கேட்டாள்.

“உன்னை எனக்கு எப்போவுமே பிடிக்கும் ரித்துக் குட்டி. நமக்கு கல்யாணம்ன்னு பேசினதும், முதலில் நான் செஞ்ச வேலை என்ன தெரியுமா? நீ விரும்பின லேஹாங்கா ஆர்டர் கொடுத்து வரவைச்சதுதான். சுமித்ரா கூட என்னைக் கிண்டல் செய்தாள். அந்த நிமிஷமே நீ எனக்குள்ளே என் மனைவியா பதிய ஆரம்பிச்சுட்டே. நான் ஜெர்மனிக்குப் போகும் முன், நீங்க எல்லோரும் பேர்வெல்க்கு புடவைக் கட்டிப் போட்டோ எடுத்து நம்ம குரூப்க்கு அனுப்பினீங்க இல்லியா? அத நான் அடிக்கடி எடுத்துப் பார்ப்பேன். அதை எல்லாம் ஈஸியா நான் எடுத்துட்டேன். கல்யாணம் என்ற விஷயத்தை நான் அதுவரை யோசிச்சேப் பார்க்கலை மித்ரா. என் கல்யாணம் மட்டும் இல்லை, உன் கல்யாணம் பற்றிக் கூட நான் நினைத்தது இல்லை. அதனால் தான் உன் நிச்சயம் பற்றி அறிந்ததும் எனக்குள் ஏதோ ஒரு வேதனை. ஆனால் எந்த நிமிஷம் உன் கழுத்தில் தாலி கட்டினேனோ அப்போது முதல் நான் உன்னை விரும்ப ஆரம்பிச்சுட்டேன். அன்றைக்கு இரவு நீ மிதமான அலங்காரத்துடன் உன் அறைக்குள் வந்தாயே, அப்போ நான் டோடல் அவுட். உன்னை என் மனசு மட்டுமில்லாமல் மொத்தமாவே தேட ஆரம்பிச்சுருச்சு. அதிலும் உன் வின்னிய கட்டிப் பிடிசுட்டுத் தூங்குவேன்னு சொன்னதும், எனக்கு பிரஷர் ஏறிடுச்சு. என்னைக் கட்டிக்க வேண்டிய நேரத்திலே அந்த பொம்மையான்னு செம காண்டு ஆயிடுச்சு. அதனால் தான் நமக்கு நடுவில் நோ வின்னின்னு சொல்லிட்டேன். ஆனால் உன் வாடின முகம் பார்த்ததும் என்னால் தாங்க முடியாமல் தான் அத்தை கிட்டே சொல்லி உன் சாமானோட வின்னியையும் எடுத்துட்டு வரச் சொன்னேன்.”

அவனின் பேச்சில் மித்ராவிற்கு சிரிப்பு வர கல கலவென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு ஷ்யாமைக் கவர ஆசையாய் பார்த்து இருந்தவன், மெதுவாக அவள் இதழ்களைத் தீண்டினான். அவனின் செய்கையில் தன்னை மறந்த மித்ரா, அவனே விடுவிக்கும் வரையில் இந்த உலகில் இல்லை. இருவரும் மீண்டும் சுயநினைவிற்கு வரவும் , ஷ்யாம்

“அன்றையத் தேதியில் நீ என்னைக் கணவனாகப் பார்க்கத் தொடங்கவில்லை என்று எனக்குப் புரிந்தது. சரி கொஞ்சம் நாள் போகட்டும் என்றுக் காத்து இருந்தேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மித்ரா இடையிட்டாள்.

“அத்தான், என்னை ஏன்  மற்றவங்க மாதிரி மாற்றனும்நு நினைச்சீங்க.. நான் அம்மா வீட்டிலே இருந்த மாதிரி இல்லாமல், ஆபீஸ் எல்லாம் போகணும்னு ஏன் நினைசீங்க? என்னை அப்படியே ஏத்துக்க உங்களால் முடியலையா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.