இப்போது ஷ்யாம் “சரி மேடம். நீங்க செர்லாக் பேபி இல்லைனா, உங்களுக்கும் செவென் டாங்கி வயாசச்சுன்னு, உனக்கும் கல்யாணம் பண்ணிடலாமா?” என்று கேட்டான்.
“ஆத்தி. ஒரு பச்ச மண்ணை இப்படி எல்லாம் படுத்தறீங்களே. உங்களுக்கே நியாயமா இருக்கா? இப்போ என்ன நீ ஹனி மூன் போகணும் அவ்ளோ தானே. தாரளாம போ ராசா. அதுக்குன்னு என்னையும் அந்த சாகரதிற்குள் குதிக்கச் சொல்லாதே. எனக்கு நீச்சல் கூடத் தெரியாது” எனச் சொல்லிவிட்டு,
“உன்னைக் கலாயிக்க உட்கார்ந்ததுக்குப் பதில், என் பாஸ் அந்த சிடுமூஞ்சி கூட செமினாரே அட்டென்ட் பண்ணலாம். பாய்” என்றபடி ஓடி விட்டாள்.
அவள் கிளம்பவும் சிரித்தவன்,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“ரித்துமா, அப்பா சொல்ற மாதிரி எங்கியும் போயிட்டு வரலாமா?” என்றுக் கேட்க, மித்ரா எழுந்து ஓடி விட்டாள்.
அதைக் கண்டு மைதிலி ராம் இருவரும் சிரிக்க, ஷ்யாமும் லேசாகச் சிரித்தான்.
அவள் மேலே தங்கள் அறைக்குச் செல்லவும்,
ராம் “ஷ்யாம், அவளிடம் பேசி விட்டாயா?” என்று கேட்க, அவன் தலை அசைத்தான்.
“என்னிக்கும் ஒன்னு நியாபகம் வச்சிக்கோ. உன்னோட எல்லா இன்ப துன்பத்திலும் என்றைக்கும் கூட வருவது உன் மனைவி தான். அதனால் அவளுக்கு மறைத்தோ, ஒளித்தோ உன் வாழ்வில் எதுவும் கிடையாது. உன் எண்ணங்களை அவளை ஒத்துக் கொள்ளச் செய்யவேண்டுமே தவிர, அதற்காக எந்த விதத்திலும் அவளுக்கு தெரியாமல் செய்யாதே. உனக்கு மற்ற உறவுகள் எத்தனை முக்கியமோ , அதே அளவு முக்கியம் அவளுக்கும் கொடு. அந்த உறவுகளின் முக்கியத்துவத்தை அவளுக்கும் உணர்த்து. உன் வாழ்க்கை என்றைக்கும் பிரச்சினை இல்லாமல், சந்தோஷமாக இருக்கும்”
ராமின் அட்வைஸ் கேட்டவனுக்கு திருமணம் ஆனால் எல்லாப் பெற்றவர்களும், மனைவியின் பின்னாடி போய் விடாதே என்று அட்வைஸ் செய்வார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறான். ஆனால் மனைவியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி , அதே சமயம் தன் உறவுகளை அவளையும் முக்கியமாக உணரச் செய் என்று சொல்வது எல்லாம் தன் பெற்றோர்களால் மட்டுமே முடியும் என்று எண்ணினான்.
அவனும் சாப்பிட்டு முடித்தவன், தங்கள் அறைக்குச் சென்ற போது மித்ராப் பொய்க் கோபத்தோடு
“அத்தான். ஏன் சீண்டிகிட்டே இருக்கீங்க? என்று கேட்டாள்.
“உன்னைச் சீண்டாமல் வேறே யாரை சீண்டறது என் ரித்துக் குட்டி? எனக் கேட்டவன், பிறகு
“சரி, நாம் ரெண்டு பேரும் ஹனிமூன் போய்ட்டு வரலாமா? என்று கேட்டான்.
மித்ராவும் சரி எனவே, இருவருமாக பேசி, மணாலி போய் வரலாம் என்று முடிவு செய்தார்கள். அடுத்த இரண்டு நாளில், சபரி வீட்டிற்கும் சென்று வந்த பின், இருவருமாக ஹனி மூன் சென்றார்கள்.
அங்கே இருவரும் நினைத்த நேரம் , நினைத்ததைச் செய்து ஒருவாரம் சந்தோஷமாக இருந்துவிட்டு வந்தார்கள்.
மித்ரா வழக்கம் போல் அலுவலகம் சென்று வர, ஷ்யாம் தன் வேலையைப் பார்த்தான். மைதிலி அலுவலகத்தோடு ஒரு டூர்ஸ் & ட்ராவல்ஸ் ஆரம்பித்து அதை மித்ராவின் பொறுப்பில் விட்டார்கள் ராம் க்ரூப்ஸ் நிறுவனம்.
இதற்கு இடையே இரண்டு மாதங்கள் கழிந்து இருக்க, சுமித்ராவின் இன்டர்ன்ஷிப் நல்லபடியாக முடிந்து இருந்தது. அவளுக்கு ஹவுஸ் சர்ஜன் மட்டுமே என்ற நிலையில், சேகர், சுமித்ராவைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என்று கூறினான்.
ஹாய் பிரெண்ட்ஸ், காதலான நேசமோ பென் அல்டிமேட் அப்டேட் இது. கடைசி அத்தியாயம் அடுத்த வாரம்.. தேங்க்ஸ் பார் யுவர் சப்போர்ட்
தொடரும்
{kunena_discuss:1187}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.