(Reading time: 22 - 43 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 41 - தேவி

Kaathalana nesamo

சுமித்ராவின் இன்டர்ன்ஷிப் முடிவடைந்து சில நாட்கள் ஆகியிருந்தது. அவளின் இன்டர்ன்ஷிப் ரிபோர்ட் பார்த்து அவளின் கிளாஸ்மேட்ஸ் மட்டும் இல்லாமல், ப்ரோபசர்ஸ் கூட ஆச்சர்யம் அடைந்து இருந்தனர். படிக்கும் போதே கான்பிரன்ஸ் அட்டென்ட் செய்ய வாய்ப்புக் கிடைப்பது எல்லாம் பெரிய விஷயம்.

சுமித்ராவிற்கு கிடைத்த அந்த வாய்ப்பை சரியாக உபயோகப்படுத்தி , சேகர் பெற்றோரிடம் பாராட்டு வாங்கியிருந்தாள். அதை அவர்கள் அவளின் இன்டர்ன்ஷிப் ரிபோர்டிலும் குறிப்பிட்டு இருக்க, மொத்தத்தில் அவள் கிளாசில் மகுடம் சூட்டப்படாத மகாராணி ஆகியிருந்தாள்.

அந்த பெருமையில் வீட்டிலும் அவளின் அலப்பறை அளவு கடந்து இருந்தது.

இந்த நேரத்தில் தான் சேகர் சுமித்ராவை சந்திக்க வேண்டும் என்றான். சுமித்ராவிற்கு யோசனை தான். ஆனால் இன்டர்ன்ஷிப் போது அவன் பழகிய விதத்தில் தேவை இல்லாமல் எதுவும் செய்பவன் இல்லை என்பதோடு அவன் அந்த கான்பெரென்ஸ் அழைத்த போது கூட, ஷ்யாமிடம் சொல்லியிருந்ததை வைத்து, அவன் மேல் நல்ல அபிப்ராயமே. சொல்லப் போனால் “ஓவர் பழம் பா” என்ற எண்ணம் தான்.

சேகரும் வெளியே எங்கோ எல்லாம் சந்திக்க வரச் சொல்லவில்லை. அவர்கள் ஹாஸ்பிடல் அருகில் உள்ள காபி ஷாப் தான்.

அவள் அங்கே வரும்போது சேகரும் வந்து இருக்கவே, நேராக அவன் இருப்பிடம் வந்து நின்றாள்.

“ஹலோ டாக்டர் சார்” என

“ஹாய் சுமித்ரா, தேங்க்ஸ் பார் கமிங். உட்கார்” என

“சொல்லுங்க டாக்டர், என்ன விஷயம்” என்றபடி அமர்ந்தாள்.  

“முதலில் என்ன சாப்பிடற?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“காபி ஷாப்லே கூல் ட்ரிங்க்சா குடிக்க முடியும்? காபி தான் ஆர்டர் பண்ணுங்க “

“ஒய்.. வந்தவுடனே ஆரம்பிச்சுட்டியா?

“அதெல்லாம் டிசைன் டாக்டரே.. நீங்க சகிச்சுத் தான் ஆகணும்”

“அந்த டிசைன் தானே எனக்குப் பிடிச்சு இருக்கு.” என்று சேகர் முணுமுணுக்க,

“என்ன ?” என்றாள் சுமித்ரா.

“ஒன்னும் இல்லை. இந்தா மெனு கார்டு. பார்த்து என்ன வேணும் சொல்லு?

“ஹ. ஹ.. எலி வான்டட்டா வந்து சிக்குதே?” என்று நினைத்தவள், மெனு கார்டில் இருந்ததில் காபி என்ற பெயரில் இருந்த அனைத்தையும் சொல்லவே, சேகர் முழி பிதுங்கினான்.

“சுமித்ரா , நீ இந்த காபி ஷாப்பிறகு போட்டியா எதுவும் ஆரம்பிக்கப் போறியா என்ன? அதுவும் அவன் கடை அயிட்டத்தை வாங்கியே?

“எனக்குத் தான் டாக்டர்ன்னு ஒரு பெரிய பொறுப்பை ஆண்டவன் கொடுத்து இருக்கானே. அதை செய்யவே எனக்கு டைம் போறாது. இதில் காபி ஷாப் எல்லாம் எங்கே ஆரம்பிக்கிறது. நீங்க தான் படிச்சு முடிச்சு ப்ரீயா இருக்கீங்களே. நீங்க வேணா ஆரம்பிக்கலாம்”

“நேரம் தான். என்ன சாப்பிடறன்னு கேட்டதுக்கு லீடிங் ஆர்த்தோ வேலைய விட்டு காபி கடை வைக்கச் சொல்றியே.. எனக்கு இதுவும் வேணும் . இன்னமும் வேணும். சுமித்ரா மகாராணி நீங்க எதுவும் ஆர்டர் பண்ண வேண்டாம். நானே ஆர்டர் பண்றேன். அதை தயவு செஞ்சு சாப்பிட்டு, நான் சொல்றத கேட்டு எனக்குப் பதில் சொல்லுங்க சரியா?

“ஹி..ஹி.. எல்லாம் ஒரு பொது நலம் தான் டாக்டரே, ஏதோ நீங்க கெஞ்சறதாலே சாப்பிடறேன்.”

“தன்யனானேன் .. “ என்றபடி சேகர் ஆர்டர் செய்தான். அவன் ஆர்டர் செய்த கபசினோ வரவும், இருவரும் அதை அருந்தினர்.

பாதி குடித்து முடிக்கும் போது,

“சுமித்ரா, எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு? நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? “ என்று கேட்டான்.

சுமித்ரா காபசினோவில் கவனமாக “ அதுக்கென்ன பண்ணிக்கலாமே” என, சேகர் வியப்போடு அவளைப் பார்த்தான். அதன் பிறகே தான் சொன்னதை உணர்ந்து திரு திருவென முழித்தாள்.

“நீங்க.. நான்.. என்ன சொன்னீங்க.. சொன்னேன்? “ என்று உளற, அவளின் முழியையும், உளறலையும் பார்த்த சேகர் வாய் விட்டுச் சிரித்தான். அவன் சிரிக்கவும், சுமித்ரா சிணுங்கலாக அவனைப் பார்த்தாள்.

அதில் அடங்கியவனாக அவளைப் பார்த்து, என்னவென்பது போல் கண்ணால் கேட்டான்.

“நீங்க சொன்னது ?” என்று இழுத்தாள்

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ? என்று மறுபடி கேட்டான்.

“என்ன திடீர்ன்னு ?

“ரொம்ப நாளா மனசுலே இருந்தது. இப்போ நேரிலே கேட்டேன்”

“இல்லை. எனக்கு மேலே படிக்கணும்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.