(Reading time: 22 - 43 minutes)

ஷ்யாம் கூர்மையாகப் பார்க்க, சேகர் தயங்காமல் அவனைப் பார்த்தான். ஷ்யாமிற்குப் புரிந்தார் போல் இருந்தது. இருந்தாலும் அவன் வாயால் கேட்க எண்ணியவனாக,

“அவள் படிப்பு இன்னும் முடியவில்லையே. அதனால் இதுவரை இந்த பிளானும் இல்லை. நீ ஏன் திடீர்ன்னு கேட்கிறாய்?

“எனக்கு சுமித்ராவைப் பிடிச்சு இருக்கு. உனக்கும் உங்க வீட்டிலும் எல்லோரும் ஓகே சொன்னால், நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கறேன்”

ஷ்யாம் யோசனையோடு சேகரைப் பார்த்தான்.

“அவள் மேலே படிக்கணும்னு சொன்னாளே” என,

“எனக்கும் தெரியும். கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும். இல்லை இப்போ நிச்சயம் பண்ணிட்டு படிப்பு முடிஞ்ச பிறகு கல்யாணம்னாலும் ஓகே. “

“சுமித்ராவிற்கு விருப்பமான்னு முதலில் தெரியனும்”

“அவளைப் பொறுத்தவரை உங்க சம்மதம் தான் முக்கியம் அப்படின்னு சொல்லிட்டா” என்று கூற,

“ஒஹ்.. அவகிட்டே பேசிட்டியா?

“ஜஸ்ட் இப்போ தான் பேசிட்டு வரேன். ஒருவேளை அவளுக்கு என் மேல் விருப்பம் இல்லைனா யார் கிட்டேயும் இதைப் பற்றிப் பேச வேண்டாம்ன்னு தான் அவள் கிட்டே முதலில் பேசினேன்.”

“ஹ்ம்ம். சரிடா. நான் யோசிச்சு சொல்றேன்” என்று கூறினான் ஷ்யாம். அவனின் பதிலைக் கேட்ட சேகர்,

“சாரிடா ஷ்யாம். உனக்கு இதில் இஷ்டம் இல்லையா?

“ஏண்டா அப்படிக் கேட்கற?

“இல்லை. நான் சொன்னதும் சந்தோஷமா என்கிட்டப் பேசுவன்னு நினைச்சேன். ஆனால் நீ சாதாரணமா பேசற. ஒருவேளை உனக்கேப் பிடிக்கலைனா, நான் இதோட இந்த விஷயத்தை ட்ரோப் பண்ணிடறேன்”

“ஹேய்.. சேகர். என்னடா பேசற? உன்னை விட என் தங்கைக்குப் பொருத்தமான மாப்பிள்ளை எனக்கு யாரு கிடைப்பா? “ என்று அவனைக் கட்டிக் கொண்டான்.

அதன் பின்னரே சேகர் சற்றுத் தெளிவு பெற, “தேங்க்ஸ் டா.” என்று மட்டும் கூறினான்.

“ஒன்னும் ஒர்ரி பண்ணாத. சுமித்ரா கல்யாணம் என்ற விஷயம் இன்னும் யோசிக்கலையா. அதுதான் முதலில் என்ன சொல்றதுன்னு புரியாம தான் அப்படிப் பேசினேன். கண்டிப்பா அப்பா , அம்மா கிட்டே பேசி முடிவு பண்ணிடலாம். ஆனால் உங்க வீட்டிலே அப்பா, அம்மாவிற்கு சம்மதமா?

“அவங்க ஏற்கனவே எனக்குப் பிடிச்சவளையேக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டாங்க “ என,

“சரிடா. நான் அப்போ வீட்டில் பேசிட்டு உனக்குத் தகவல் சொல்றேன்” என்றான்.

அதற்குப் பின் நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினார்கள்.

அன்று இரவு இதை எப்படி ஆரம்பிப்பது என்ற எண்ணியபடி ஷ்யாம் வீட்டிற்குச் செல்ல, அங்கே அவனுக்கு மேலும் ஒரு சந்தோஷமான விஷயம் காத்துக் கொண்டு இருந்தது.

அவனுடைய வாரிசு ரித்துவின் வயிற்றில் வளர்ந்தது. அன்றைக்கு மாலை காபி குடித்துக் கொண்டு இருக்கும் போது மித்ரா வாந்தி எடுத்து மயங்கி விழ, வீட்டில் எல்லோரும் பரபரப்பாக டாக்டருக்கு போன் செய்யச் சென்றனர்.

அப்போதுதான் சுமித்ரா மித்ராவைத் தாங்கிப் பிடித்து , படுக்க வைத்து இருந்தாள்.

எல்லோரும் போன் நோக்கி ஓட, அவரவர் செல் போனிலும் முயற்சிக்க,

“ச்சே, மிகப் பெரிய இன்சல்ட். இங்கே இருக்கிற யாருக்குமே நானும் டாக்டர்க்குத் தான் படிக்கறேன்னு நியாபகம் இல்லையா?” என்று கேட்டாள்.

மைதிலியோ “ சுமி, உன்னோட மொக்கை எல்லாம் இப்போ யாரும் கேட்கிற நிலைமையில் இல்லை. எங்களை பேச விடு” என்றார்.

“மாதாஜி, நான் செக் பண்ணிட்டேன். ரொம்ப டென்ஷன் ஆக வேண்டாம்”

“நீ இன்னும் படிச்சு முடிக்கலை. அதுக்குள்ளே உனக்கு என்னனு பார்க்கத் தெரியுமா? என்னனு தெரிஞ்சும் மெடிசின் எதுவும் கொடுக்காமல் எங்கிட்ட வாயடிகிட்டே இருக்க?

“ஹையோ. உங்க புத்திசாலித்தனம் எல்லாம் உங்க மருமக விஷயத்தில் மட்டும் லீவ் எடுத்துடுமோ..”

“ஹேய். இப்போ என்னன்னு சொல்லப் போறியா ? இல்லையா?

“நீங்க பாட்டியாகப் போறீங்க. இப்போ சந்தோஷமா?

“ஹேய் சுமி, ரொம்ப சந்தோஷமா இருக்குடா. நீ சரியாப் பார்த்தியா? வெறுமே பல்ஸ் வச்சே சொல்றியே?”

“இல்லைமா. அண்ணிகிட்டே டிடைல்ஸ் கேட்டுட்டேன். அதோட பல்ஸ் & சிம்ப்டம் எல்லாம் வச்சிதான் சொல்றேன். அண்ணா வந்ததும் அவனோட போய் சேகர் சார் அம்மா கிட்டே பார்த்துட்டு வரட்டும்” என்றாள்.

“பரவாயில்லை போ. இப்போதான் உன்னை டாக்டர்க்கு படிக்க வச்சதுக்கு , நீ அதுதான் படிக்கிறன்னு நம்ப வச்சு இருக்க” என சுமியைக் கிண்டலடித்தாள்.

“பாருடா.. இந்த மைதிலி மேடம் பாட்டி ஆகிட்ட சந்தோஷத்தில் என்னையே கலாயிக்கிரங்களாமா? ஹ்ம்ம்ம்” என்று தன் பங்கிற்கு நக்கலடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.