(Reading time: 22 - 43 minutes)

“எஸ். உன்னோட ஹவுஸ் சர்ஜன் முடியப் போற நேரம் தானே இப்போ. முடிஞ்சதும் நிச்சயம் வச்சுக்கலாம். உன்னோட கார்டியாக் மேல் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம். “ என்று சொன்னவன், கடைசியில் “உனக்கு என்னைப் பிடிச்சு இருந்தாதான்” என்றும் சேர்த்து சொன்னான்.

“நான் கல்யாணத்தைப் பற்றி எல்லாம் இன்னும் யோசிக்கலை”

“எப்பிடியும் வீட்டில் கல்யாணம் பண்ணி வைப்பாங்க தானே. சோ என்னை உனக்குப் பிடிச்சு இருந்தா மேற்கொண்டு பேசலாம்”

“எனக்குன்னு தனிப்பட்டு எந்த விருப்பமும் கிடையாது. அம்மா, அப்பா , அண்ணா எல்லோரும் தான் முடிவு பண்ணனும். “

“கண்டிப்பா. ஆனால் உனக்கு என்னைப் பிடிச்சு இருந்தா, நானே ஷ்யாம் கிட்டே பேசி , எல்லோர் கிட்டேயும் பேசறேன். “

“எனக்கு ...” என்று தயங்கியவள் , “நான் என்ன சொல்லத் தெரியவில்லை”

“ஹ்ம்ம்.. அப்போ பிடிக்கலைன்னு நினைசுக்கவா?

“அப்படி இல்லை” என்று சுமித்ரா அவசரமாக மறுக்கவும், அதில் சிரித்தவனாக

“அப்போ ஷ்யாம் கிட்டே பேசவா?” என்றான் சேகர்.

சுமித்ரா பதில் சொல்ல முடியாமல் தவிக்க, சேகர் அவளின் கைகளைப் பிடித்து

“தரும்மா, உனக்கு என்ன தயக்கம்? “என்று கேட்க, அவனின் தரு என்ற அழைப்பில் அவளின் உள்ளே எதுவோ உருக, மெதுவாக அவளின் தலை மட்டுமே வேண்டாம் என்பது போல் அசைந்தது.

“உன் விருப்பம் என்னனு நீ சொல்லுடா. ? “ என்று மீண்டும் கேட்டான்.

“சரி டாக்டர் சார். ஷ்யாம் அண்ணா கிட்டே பேசுங்க. ஆனால் எல்லோர் சம்மதமும் எனக்கு வேணும். “

“ஹ்ம்ம்.. சரி. “ என்று சேகர் சொல்ல, சுமித்ரா அவனைப் பாவம் போல் பார்த்தாள்.

“என்ன சுமி?” சேகர் கேட்க,

“இல்லை. கபசினோ ஜில்லுன்னு குடிக்கணும் தான். ஆனால் அந்த சில்லிப்பும் போனதுக்கு அப்புறம் சுத்தமா குடிக்க முடியாது. அதனால் நான் அதை குடிச்சு முடிச்சிறவா? என்றாள் சுமித்ரா.

அவளின் கேள்வியில் தலையில் அடித்துக் கொண்ட சேகர்,

“அம்மா தாயே.. மகமாயி. கபசினோ ரொம்ப முக்கியம். சோ அந்த வேலைய முடி” என்றான்.

“தேங்க் யூ.. “ என்றபடி வேகமாக அதை முடித்து விட்டு எழுந்தாள்.

“ஹேய். என்ன அதுக்குள்ளே எழுந்துட்டே.. “ என்று சேகர் கேட்க,

‘ஐயோ.. இதுக்கு நான் பில் கொடுக்கனுமா? அது எல்லாம் முடியாது. நீங்க தானே என்னை பேசக் கூப்பிட்டீங்க.. நீங்க தான் கொடுக்கணும்” என

“ஐயோ. புத்திசாலி. என்னையே உனக்குக் கொடுக்கறேன். இந்த பில் கொடுக்க மாட்டேனா?” என்றான் சேகர்.

சுமித்ரா அசடு வழிந்தபடி “ஹி.ஹி. நான் பயந்துட்டேன். எங்கே பில் பே பண்ணனுமோன்னு. சரி அப்போ கிளம்பட்டுமா? ‘

“ஹேய். இரு. நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணிருக்கேன். நீ என்னடான்னு வந்ததே சாப்பிடத்தான்னு கிளம்பி போயிட்டே இருக்கே?

“வேறே என்ன பண்ணனுமாம்?

“கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே?

“டாக்டர் சார், இப்போதைக்கு உங்கள வீட்டுலே பேசறதுக்குத் தான் சம்மதம் சொல்லிருக்கேன். இன்னும் அவங்க சம்மதம் எல்லாம் கொடுக்கனும். சோ அதுவரை நோ மீட்டிங்”

“அது சரி. அதுக்குப் பிறகாவது மேடம் உங்க பொன்னான நேரத்தை என்கூடவும் ஷேர் பண்ணிப்பீங்களா?”

“அத அப்போ பார்த்துக்கலாம். பை சாரே “ என்றபடி கிளம்பிவிட்டாள்.

சேகரும் சிரித்தபடி அவளை அனுப்பி வைத்தவன், அடுத்து நேராகக் கிளம்பிச் சென்றது ஷ்யாம் அலுவலகத்திற்குத் தான்.

ஷ்யாம் அவனை வரவேற்று உபசரித்தப் பின்,

சேகர் “ஷ்யாம், எப்படி போயிட்டு இருக்கு லைப்” என்று வினவ,

“வெரி வெல் டா சேகர். தேங்க்ஸ் பார் யுவர் டைம்லி ஹெல்ப். “ என்று கூறினான்.

“இதுலே என்னடா இருக்கு? “ என்றவன்,

“நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என,

“ஆமாம், நீயே ஹாஸ்பிடல் விட்டு வந்துருக்கன்னா, முக்கியமான விஷயமா தான் இருக்கும். சொல்லு” என்றான் ஷ்யாம்.

“ம்.. “ என்று சற்றுத் தயங்கிவிட்டு “உன் தங்கைகக்கு கல்யாணத்திற்குப் பார்க்கறீங்களா?” என்று கேட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.