(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 18 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

சுவாமிஜி வேடத்தில் இருந்த இளைஞனும் சுவாதியும் அறையைவிட்டு வெளியேறினார்கள். ஆகாஷ் சற்றே தடுமாறி மரத்திலிருந்து இறங்கி அவர்களை பின்தொடர்ந்தான்.

அவர்கள் காட்டுப் பாதையில் சென்றனர். பாதையில் முள் செடிகள் மற்றும் வேறு பல செடிகள் நெருக்கமாகவும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் வேகத்துக்கு அவனால் ஈடுக் கொடுக்க முடியவில்லை.

ஆகாஷின் ஓவ.வொரு அடியும் ஓசை எழுப்பி அவன் வருகையை பதிவு செய்தது. அது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் ஆதலால் அவனால் பின்தொடர் இயலவில்லை.

அவன் கண்கள் மட்டுமே அவர்களை சிறிது  பின்தொடர்ந்தது. இருட்டில் அவர்கள் மறைந்ததும் ஆசிரமத்துக்கு திரும்பிவிட்டான். தன் அறைக்கு சென்று நண்பனிடம் நடந்ததை கூறி அவனை தயார் செய்தான். பின் தேவையானவற்றை ஏற்பாடு செய்தான்.

இரவு தன் அறையைவிட்டு வெளிவந்தான். சுவாதி அங்கிருந்த இரண்டு வயதான பெண்மணிகளுக்கும் ஒரு தாடி தாத்தாவுக்கும்  உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். ஆகாஷ் மனம் அவளை கண்ட நொடி சீறிப் பாய்ந்தது. சாருவின் சகோதரி என்ற எண்ணமெல்லாம் கரைந்து வெறுப்பு மட்டுமே மிஞ்சி இருந்தது.

கீழே வந்தவனுக்கு சுவாதி உணவு எடுத்து வர சென்றாள். அவனுக்கோ பசி இல்லை. ஆனாலும் அவளோடு பேச வாய்ப்பு கிடைக்கும் என்பதால் உணவை மறுக்கவில்லை.

சுவாதி இரண்டு சப்பாத்தி கொண்டு வந்துக் கொடுத்தாள். சாப்பாட்டு அறையில் மெல்ல சாப்பிட்டவண்ணம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன தோன்றியதோ அவளும் அவன் பக்கம் திரும்பினாள். இருவரும் புன்னகையை விரயம் செய்தனர்.   

அறையில் இருந்த வயதானவர்கள் எழுந்துச் சென்றதும் சுவாதியும் சாப்பிட அமர்ந்தாள். அவள் அருகில் சென்று தன் தட்டோடு அமர்ந்தான். அவளுக்கு அது பிடிக்கவில்லை என்பதும் நன்றாகவே புரிந்தது.

“சுவாமிஜி ஆசிரமத்துலதானே இருக்கார்?” ஆகாஷ் கேட்க

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இன்னிக்கு சிவராத்திரி மலை மேல இருக்கிற சுந்திரமகாலிங்கம் கோயில் பூஜைக்கு போயிருக்காரு” என ஆகாஷ் எதிர்பார்த்த பதிலை கூறினாள்.

“இல்லயே கொஞ்சம் முன்னாடி அவரை பார்த்தனே” ஆகாஷ் கூற

அவள் விழிகள் அவன் பக்கம் திரும்பாமல் தட்டிலேயே கண் இருந்தது. ஒருசில நொடி அலைபாயந்த  கண்கள் பின் தெளிவுற்று தேவையில்லாமல் அவள் இதழ் புன்னகைத்து “உங்களுக்கு சுவாமிஜி மேல பிரியம் மரியாதை அதிகமா இருக்கு அதனாலதான் யார பார்த்தாலும் சுவாமிஜி மாதிரி தெரியுது” முடித்து நழுவப் பார்த்தாள்.

“சுவாமிஜி மேல தானே பக்தி ரொம்ப்ப்ப அதிகம்” என மைண்ட்வாய்சில் எரிச்சல்பட்டான் . . . விடாமல் “இல்ல சுவாதி நான் பார்த்தேன்” அழுத்தமாக கூறினான்.

“போய் ரெஸ்ட் எடுங்க ஆகாஷ் . . நல்ல தூங்கினா மனசுக்கும் உடம்புக்கும் நல்லது”

“அப்ப சுவாமிஜி இல்லனா அது யாரு? ஒருவேள டூப்ளிக்கேட் சுவாமிஜியா?” என சொல்லி பெரிய ஜோக்கை சொன்னது போல சிரித்தான். குழப்பமும் பயமுமாக மாறிய அவள் முக மாற்றத்தை அவன் கண்கள் பதிவு செய்தபடி இருந்தது.

அவளோ ஏறெடுத்து பார்க்காமல் நகர்ந்தாள். குற்றம் புரிபவர்களுக்கு நேருக்கு நேராக பார்க்க துணிவிருக்காது. கண்கள் உள்ளத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஆனால் சிலருக்கு மட்டுமே தங்கள் கண்களை நடிக்க வைக்க தெரியும். சுவாதிக்கு அது கைவரவில்லை.

“தண்ணி வேணும் சுவாதி”

ஆகாஷ் வேண்டுமென்றே இதெல்லாம் செய்கிறான் என்பது அவளுக்கு தெளிவாக புரிந்தது. அவன் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருந்த தண்ணீர் டம்பளரை அவனிடம் கொடுத்தாள்.

“இதுல பூச்சி விழுந்திருக்கு புதுசா கொண்டு வாங்க” என அந்த தண்ணீரை கீழே ஊற்றி கடுப்பேத்தினான்.

அவள் கோபத்தை அடக்கியபடி வேறு டம்பளரில் தண்ணீர் கொண்டுவந்தாள். அதிலிருந்து பாதி தண்ணீரை பழைய டம்பளரில் ஊற்றிக் கொண்டான். சுவாதி கண்முன்னேயே தண்ணீர் மாயமாய் மறைந்தது.

“குடிக்க தண்ணிக் தரமாட்டிங்களா என்ன அநியாயம்” என அவன்

மிச்சமிருந்த தண்ணீர் ஊற்ற அதுவும் மாயமாய் மறைந்தது.

“ஆகாஷ் என்ன நடக்கது” பயந்தேவிட்டாள் சுவாதி. கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

“ஏமாற்றாதே ஏமாற்றாதே . . ஏமாறாதே ஏமாறதே” என்ற பாடலை விசிலடித்தபடி கூலாக சென்றுவிட்டான்.

அவன் சென்ற சில நொடிகளுக்கு பிறகு தன்னை பயத்திலிருந்து சுதாரித்துக் கொண்டவள் மனது ஆகாஷ் என்ற புதிய எதிரியின் பெயரை எழுதுக் கொண்டது.

ஆகாஷ் தன் அறைக்கு சென்றவன் கதவை மூடி விளக்கை அணைத்தான். ஜன்னல் வழியே அவள் என்ன செய்கிறாள் என பார்த்தான். எந்த அசைவும் இல்லாமல் அவள் கீழிருந்து அவன் அறையை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒருசில நொடிகளுக்கு பிறகு அவள் உருவம் மறைந்துவிட்டது. ஆகாஷ் எதிர்பார்த்தவை நடக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.