Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 09 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 09 - சசிரேகா

Kaanum idamellam neeye

மெல்ல கண்கள் திறந்து சுற்றி முற்றி பார்த்தான் ஈஸ்வரன். அவனது அறையில் படுத்திருந்தான். அவனைச் சுற்றிலும் அனைவரும் பயத்துடனும் கவலையுடனும் நின்றிருந்தார்கள்.

மெல்ல தலையை அசைத்து திரும்பினான், அவனுக்கு பக்கத்தில் நிரஞ்சன் கவலையாக இருந்தான். அவனுக்கு பின்புறம் குமரவேலும் அவருக்கு பின் அப்போதும் தலை குனிந்தபடி தோள் குலுங்க ஆனந்தி அழுதுக் கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.

”நிரஞ்சா” என ஈனஸ்வரத்தில் அழைத்தான் ஈஸ்வரன். அவனது அழைப்புக் கண்டு நிம்மதியடைந்த நிரஞ்சன்

”அண்ணா இப்ப எப்படியிருக்கீங்க”

“என்னாச்சி எனக்கு”

“பிபி அதிகமாகி மயக்கம் வந்திருக்கு”

”ஓ”

”என்ன அண்ணா இது ஒண்ணும் சாதாரணம் இல்லை, உங்க பிபியை செக் பண்ணேன் அதிகமா இருந்தது, வேலை பிசினஸ் அது இதுன்னு டென்ஷன்லயே பிபி அதிகமாகி இருக்கு, உங்களை கன்ட்ரோல் பண்ணிக்குங்க அண்ணா இல்லைன்னா பெரிய பிரச்சனையாயிடும்”

”எனக்கு ஒண்ணும் இல்லை மீனா எங்க” என அவன் கேட்டதும் நிரஞ்சனோ

”இப்ப அமைதியா ரெஸ்ட் எடுண்ணா, இந்த வேலை, டென்ஷன் எல்லாம் உனக்கு எதுக்கு, அமைதியா தூங்குண்ணா நான் உனக்கு இன்ஜக்ஷன் போட்டிருக்கேன் நீ நல்லா ரெஸ்ட் எடுத்தாதான் உடம்பு சரியாகும்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”சரி நான் ரெஸ்ட் எடுக்கறேன் மீனாவை கூப்பிடு நான் அவளை பார்க்கனும்” என அவன் சொல்ல நிரஞ்சனோ வெறுப்பானான்

”சொன்னா கேளுங்கண்ணா இப்ப நான் ஒரு டாக்டர், நீங்க பேஷன்ட் ரெஸ்ட் எடுங்கண்ணா” என கத்திவிட்டு எழுந்து நின்றான் நிரஞ்சன்

நிரஞ்சனின் இந்த புதிய கோபத்தை ஒரு நாளும் காணாத ஈஸ்வரனோ, ஏதோ பிரச்சனை நடந்துள்ளது என மட்டும் புரிந்துக் கொண்டான். அனைவரும் அங்கு இருப்பதால் நிரஞ்சன் அமைதியாக உள்ளான் என்பதை உணர்ந்தவன் மெல்ல கண்கள் மூடி உறங்குவது போல பாசாங்கு செய்தான்.

10 நிமிடம் கழித்து ஈஸ்வரன் உண்மையில் தூங்கிவிட்டதாக எண்ணிய நிரஞ்சனோ குமரவேலிடம்

”மாமா பார்த்தீங்களா அண்ணா மீனாவைதான் கேட்டாரு, இப்ப என்ன செய்றது அவர் உடம்பு சரியாகி எழுந்து மீனாவை பார்க்கனும்ன்னு கேட்டா என்ன செய்வீங்க மாமா, அவசரப்பட்டு அவளையும் அவள் அம்மாவையும் வீட்டை விட்டா விரட்டுவீங்க சே உங்க மனசுல இரக்கமே இல்லையா” என கோபமாக கேட்க அதற்கு குமரவேலோ

”தம்பி அப்படியில்லைப்பா திடீர்னு மாப்பிள்ளை மயக்கம் போட்டு விழுந்துட்டாரு, என்ன செய்றதுன்னு தெரியலை, நீங்க வேற அவரை பார்த்துட்டு கலவரமா இருந்தீங்க இப்ப கூட பாருங்க கண் விழிக்கறதுக்கே 5 மணிநேரம் ஆயிடுச்சி. 5 மணி நேரமா அவர் படுத்திருந்ததைப் பார்க்க எனக்கு கஷ்டமா இருக்காதா, இதுக்கெல்லாம் காரணம் யாரு அந்த மீனாதானே அதான் அவள் வரவும் அவளையும் அவள் அம்மாவையும் திட்டி விரட்டிட்டேன்”

“இந்த விசயம் எனக்கு கூட தெரியாம நீங்க செஞ்சிருக்கீங்க, நான் மீனாகூட ப்ரண்டா  பழகறவன், மீனாவும் தப்பா எதையும் பேசிடலையே, அண்ணா மயக்கம் போட்டு விழுந்ததுக்கு ஸ்ட்ரெஸ்தான் காரணமே தவிர மீனா கிடையாது. நான் இருந்தா அவளை விரட்டறது கஷ்டம்னு என்னை இந்த ரூமை விட்டே வெளியே வரவிடாம அவங்களை அனுப்பியிருக்கீங்க இது மோசம்” என நிரஞ்சன் திட்டியது ஈஸ்வரனின் காதில் தெளிவாகக் கேட்டது.

அதற்கு குமரவேலோ

”தம்பி நான் அவளை கேள்விதான் கேட்டேன் ஆனா, அவள் எதிர்த்து பேசினா அதனால கோபம் வந்து”

“அவளை விரட்டிட்டீங்கள்ல உங்களை என்ன சொல்றதுன்னே தெரியலை மாமா பாவம் மீனா எங்க போனாள்னு தெரியலை” என வருத்தப்பட்டவனிடம் வள்ளி வந்தார்

”இதப்பாருங்க தம்பி அவள் பண்ண தப்புக்கான தண்டனை இதுதான், இந்த வீட்டு மாப்பிள்ளைன்னு கூட பார்க்காம மாப்பிள்ளையை அப்படி திட்டிட்டாளே, அவளாலதானே மாப்பிள்ளைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுச்சி எப்படி அவளை இந்த வீட்ல வெச்சிக்கறது”

”நாளைக்கு நானும் அண்ணாவை திட்டினா என்னையும் விரட்டிடுவீங்களா, உங்களுக்குத் தேவை அண்ணாதானே, நான் எதுக்கு நாளைக்கு வரைக்கும் நான் ஏன் இங்க இருக்கனும், நானும் கிளம்பறேன், நீங்களே அண்ணாவோட இருந்து பிசினஸாவது பண்ணிக்குங்க இல்லை ஆனந்தியோட கல்யாணமாவது பண்ணிடுங்க எனக்கென்ன நான் கிளம்றேன்” என சொல்லவும் சட்டென ஈஸ்வரனது கை நிரஞ்சனது கையை பிடித்தது.

திரும்பிய நிரஞ்சன் கண்கள் மூடி படுத்திருந்த ஈஸ்வரனைப் பார்த்ததும் மனம் கலங்கினான்.

”அண்ணாவை இப்படியே விட்டு போகவும் முடியலை பாவம் மீனா, அவளையும் விட முடியலை நான் என்ன செய்வேன்” என புலம்பியவனிடம் வந்தாள் ஆனந்தி

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Aazhiyin kadhaliAazhiyin kadhali
  • En idhayam kavarntha thamaraiyeEn idhayam kavarntha thamaraiye
  • Idho oru kadhal kathai Pagam 1Idho oru kadhal kathai Pagam 1
  • Kadhal CircusKadhal Circus
  • MashaMasha
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 09 - சசிரேகாmahinagaraj 2019-01-10 12:29
ரொம்ப நல்லா இருக்கு மேம்.... :clap: 👏👏
இரண்டும் வேற வேற கதை களம்..👌👏👌
ரெண்டும் சூப்பர்...
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 09 - சசிரேகாmadhumathi9 2019-01-10 07:26
:clap: nice epi.interesting aaga poguthu.egarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :clap: :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 09 - சசிரேகாAdharvJo 2019-01-09 20:03
Indha uncle Ena ippadi silly ya irukaru facepalm anyway eshwar Oda understanding to be appreciated apro meen's Oda self esteem kuda 👌👏👏 nice update ma'am 👏👏 look forward to see what happens next. Thank you.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top