(Reading time: 12 - 24 minutes)

ஒரு சதவிகிதம் கூட நம்பவே முடியவில்லை வெற்றியால்..!!

“இவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்கள்..?? சான்ஸே இல்லை.. எதையோ அறைகுறையாத் தெரிஞ்சிட்டு இரெண்டும் உளருதுங்க..!!”, இப்படித்தான் அச்சமயம் நினைக்கத்தோன்றியது வெற்றிக்கு..!!

“நீ..ங்க.. தெரியாம ஏதோ சொல்றீங்கன்னு நினைக்கறேன் மா..மா..”, என்றவனின் குரலில் சிறு நடுக்கம் வேறு..

“இல்லை வெற்றி.. நம்ம தரண் ஒரு திருநங்கை..”, இன்னும் அழுத்தமாக அவர் உரைத்திட.. உறைந்துதான் போனான் அவன்..!!

வார்த்தைகள் எதுவும் கோர்த்திட முடியாமல் ஒருவித அலைபுருதலும் நீங்கள் சொல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதாய் வெற்றியின் உடல்மொழியிருக்க.. லேசாய் அசைந்தது தாரிகையின் விழிகள்..!!

யார் அதை கவனித்தார்களோ இல்லையோ தாரிகையின் அசைவுகள் யாவும் நிஷாவிற்குத் தெரிந்திட அக்கா என்றிருந்தாள் சத்தமாய்..

இன்னும் இன்னும் வேகமாய் தனது விழிகளைத் திறக்க முயற்சித்தாள் தாரிகை.. அக்கா என்ற நிஷாவின் அழைப்பு அவளை எதுவோ செய்தது என்றே சொல்லலாம்..!!

“த..ர..ண்.. இங்க பாருடா..”, லேசாக தாரிகையின் கன்னங்களில் தட்டினான் வெற்றி..

“அக்காவைத் தட்டாதீங்க.. வலிக்கும்..”, வெற்றியின் கைகளை நிஷா விலக்கிட.. அப்படியொரு கோபம் வெற்றிக்குள்..!!

“ஹே.. ப்போ..”, கத்தியே விட்டான் அவன்..!!

என்னவோ அப்படியொரு கோபம் நிஷாவின் மீது..!! நடந்துகொண்டிருக்கும் எல்லாவற்றிற்கும் காரணம் அவளே என்று தீர்மானித்திருந்தது அவனது மனம்..!!

“வெற்றீ.. அவ குழந்தைடா..”, அவசரமாய் நிஷாவை பரத்வாஜ் ஆதரவாய்ப் பிடித்துக்கொள்ள.. ஆர்ப்பரிக்கும் கடலாய் சுழற்றி அடித்துக்கொண்டிருக்கும் தன்னைத் தானே நிதானப்படுத்திக்கொள்ள சற்று பிடித்தது வெற்றிக்கு..!!

தலையை அழுந்தக்கோதிக் கொண்டவன் தன்னைத் தானே நிதானப்படுத்த முயல, “அக்காக்கு வலிக்கும்னுதான் உங்களைத் தட்ட வேணாம்னு சொன்னேன்.. சாரி அங்கிள்..”, நிஷாவின் கரங்கள் அவனது தோளைத் தொட்டிட..!!

அந்த நொடியில் தான் செய்த செய்கையில் தன்னைத் தானே வெறுத்திருந்தான் என்றே சொல்லலாம்..!!

“பாப்..பா.. நான்.. நான் தான் தப்பு.. சாரி..”, திக்கித்திணறினாலும் நிஷாவிடம் மன்னிப்பை யாசித்திருந்தான் வெற்றி..!!

“அச்சோ பரவாயில்லை அங்கிள்.. நீங்க ஏதோ கோபத்துல தெரியாமத்தானே.. பரவாயில்லை..”, தன்னை அவன் திட்டியதெல்லாம் மறந்து புன்னகை முகமாய் உரைத்திட.. முகத்தை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வதென்றே தெரியவில்லை அவனுக்கு..!!

தன்னை நினைத்து ஒருபுறம் வெட்கமாகவும் மறுபுறம் கேவலமாகவும் தோன்றியது அவனுக்கு..!! ஏனோ குனிந்த தலையை நிமிர்த்தி யாரையும் பார்க்கும் துணிவும் பிறக்கவில்லை..!!

மன்னிக்கவே முடியாத செயலைச் செய்துவிட்டதுபோல் மனமானது சாடிக்கொண்டிருந்தது..!!

“அங்கி..ள்.. அதான் பரவாயில்லை சொல்லிட்டேன்ல.. இன்னும் என்ன பண்ணனும்..??”, அவனை உலுக்கியே இருந்தாள் நிஷா.. என்னவோ தாரிகையைப் போலவே பரத்வாஜையும் வெற்றியையும் கண்டவுடனே பிடித்திருந்தது அவளுக்கு..!!

“ப்ச்.. ஒன்னும் பண்ண வேண்டாம்டா..”, இடம் வலமாய் தலையசைத்தவன்.. நிஷாவின் தோளைப் பிடித்து தாரிகையின் அருகே நிற்கவைத்து, “உன் அக்காவை நீயே பார்த்துக்கோ..”, என்றிருந்தான் சட்டென்று..!!

அவளது கண்கள் எல்லாம் பெரிதாகிப்போக தலையசைத்தவள் தாரிகையில் விரல்களைத் தொட்டிட.. அதில் விரிந்துதான்போனது தாரிகையில் விழிகள்..!!

“அக்கா.. நான் பயந்தே போயிட்டேன்.. ஒண்ணுமில்லையே உங்களுக்கு..?? அப்புறம் இவிங்கதான் வந்து உங்களை இங்கக் கூட்டிட்டு வந்து சேர்த்தாங்க..”, தாரிகை விழித்தத்தில் தானாகவே ஒரு உற்சாகம் மேலோங்க.. காயங்களை நினைத்து சிறிது பயம் எழுந்திட.. ஒரு அவியலாகவே அனைத்தையும் ஆதி முதல் அந்தம்வரை படபடவென சொல்லி முடித்திருந்தாள் அவள்..!!

அனைத்திற்கும் ஒரு பார்வை மட்டும் தாரிகையிடமிருந்து பதிலாய்..!!

“தரண்..யா..”, என்று ஆரம்பித்த பரத்வாஜிற்கு என்ன தோன்றியதோ, “தாரூ.. வலி எதுவும் இல்லையே உனக்கு..??”, என்று கேட்டிட..

“ப்பா.. உங்க..ளு..க்கு..??”, என்றவளின் குரலில் தந்தைக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துகொண்டதில் அதிர்ச்சியா.. தெரிந்துகொண்டும் தன்னை ஏற்றுக்கொண்டதில் ஆச்சர்யமா.. கண்டுகொள்ளமுடியவில்லை..!!

“தெரியும் தாரூ.. எனக்கு வருத்தமெல்லாம் இல்லை..”, சமாதானமாய்..

“நி..ஜ..மா..வா..??”, நம்பிடவே முடிந்திருக்கவில்லை தாரிகையால்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.