(Reading time: 9 - 17 minutes)

மாலை ஆறு மணிக்கு மேல் சுடர் வீட்டில் இல்லாதப்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென்று சுடர் அமுதனிடம் கூறினாள்.

கண்டிப்பாக இது சாத்தியமேயில்லை. அருள்மொழியாவது அப்படி உடனே அவன் அழைத்ததும் வந்துவிடுதாவது. அதனால் இந்த யோசனை வேண்டாம்  என்று சுடரிடம் அவன் மறுப்பு தெரிவித்தான்.

“ப்ளீஸ் சார்லி.. எனக்காக இதை செய்ய மாட்டியா?” என்று உருகி பேசியதும் அவனால் மறுக்க முடியாமல் போனது.

ஆனால் அருள்மொழியை எப்படி அழைத்து செல்வது? அத்தனை பேரோடு சென்ற போதே அவனை புறக்கணிப்பவள் தனியாக எப்படி வருவாள். அவனுக்குமே அவள் செய்வது கொஞ்சம் அதிகப்படியாக தோன்றுவதால், அவளை தனியாக ஒருமுறை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் ஏற்கனவே இருப்பது தான், ஆனால் அது கண்டிப்பாக நடக்காது என்று தான் அவன் நினைத்துக் கொண்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அப்படியிருக்க இப்போது எப்படி இதை நடைமுறைப்படுத்துவது என்பது அவனுக்கு புரியவில்லை. வீட்டுக்கு அருகில் இருக்கும் இடத்திற்கு அவளை அழைத்தாலே அவள் வருவது என்பது நடக்கவே நடக்காது. பின் அவளை மாலை ஆறுமணிக்கு மேல் அழைத்துச் செல்வதெல்லாம் கனவில் கூட நடக்காது என்று தான் அவனுக்கு நினைக்க தோன்றியது.

ஆனால் விதி ஒன்றை முடிவு செய்து வைத்திருக்கும் போது அதை அதுவே தானாக நடத்தி முடித்துவிடும். அதன் கைப்பாவையாக தான் நாம் அங்கே இருப்போம். அருள்மொழி, அமுதன் விஷயத்திலும் அதுதான் நடக்கப் போகிறது.

இலக்கியாவின் உதவியோடு அருளை வெளியே அழைத்துச் செல்லலாமா? என்று கூட அவன் நினைத்தான். ஆனால் அருளே பரவாயில்லை, இலக்கியாவோ அருள் பேச்சை மீறி நடப்பது கஷ்டம் தான், அதுவுமில்லாமல் இலக்கியாவிற்கும் விஷயம் தெரிந்து ஏதாவது பிரச்சனை ஆனால், அதில் பாதிக்கப்படுவது சுடராக தான் இருக்கும் என்று நினைத்தவன், பின் என்ன செய்யலாம் என்று வெகு நேரம் யோசித்தவனுக்கு நல்ல ஒரு யோசனை உருவானது. ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தான்.

அவனுக்கு வந்த யோசனை என்னவென்றால், அவன் இப்போது தான் லண்டனுக்கு சென்றவன் திரும்ப உடன் வந்தததற்கு காரணமே, ஒன்று சுடருக்காக, இன்னொன்று அவன் நண்பர்க்ளோஒடு ஆரம்பித்திருக்கும் தொழிலுக்காக, நடுவே நடுவே அதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். இப்போது அவர்களது நிறுவனத்திற்கு புதிதாக ஒரு வியாபார ஒப்பந்தம் அமைவதாக இருந்தது. அதற்கான சந்திப்பில் அவன் தான் கலந்துக் கொள்ள வேண்டும். இதுவரை அப்படி ஏதாவது என்றால், லண்டனில் இருந்தப்படியே பேசி தன் நண்பர்களையே ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொல்வான். ஆனால் இப்போது அவன் இந்தியாவில் இருப்பதால், அவனே அந்த வியாபரத்தில் இணைபவர்களை சந்திக்க வேண்டும், வியாபார ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அவன் நண்பர்கள் கூறினர். வரும் சனி அல்லது ஞாயிறு இந்த இரண்டு நாளில் ஏதாவது ஒரு நாளில் இந்த சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தான். இருந்தும் எந்த நாள் என்பதை இன்னும் அவன் முடிவு செய்யவில்லை.

இப்போதோ ஞாயிறன்று அந்த தொழில்முறை சந்திப்பு நடக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், அதற்கு அருள்மொழியையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தான்.

அருள்மொழிக்கு கணினி துறையில் அதிக ஆர்வம் இருப்பதை அவன் முன்பே அந்த பத்து நாட்கள் பயிற்சியில் அறிந்திருக்கிறான். அவள் படிப்பு முடிந்தால் பேசாமல் அவனது நிறுவனத்திலேயே அவளை வேலை செய்ய சொல்லலாம் என்று கூட அவன் நினைத்ததுண்டு, ஆனால் தனிப்பட்ட முறையில் அவள் காட்டிய ஒதுக்கம் அவளிடம் அடுத்து  பேசவோ பழகவோ  கூடாது என்ற முடிவை அவனை எடுக்க வைத்தது.

ஆனால் திரும்ப அருள்மொழியை சுடரின் உறவினராக பார்ப்பான். அவளோடு பழகும் சந்தர்ப்பம் அமையும் என்பதெல்லாம் அவன் முன்பு அறியாதது. இப்போது அதெல்லாம் நடக்கவே தான் திரும்ப இப்படி ஒரு யோசனை அவனுக்கு தோன்றியது, அவள் படிப்பு சம்பந்தமாக பேசினால் மட்டுமே தான் அவளை அணுக முடியும் என்று நினைத்தான். ஆனால் அது கூட ஒரு யூகம் தான், அதற்கும் அவள் வர முடியாது என்று சொன்னால் என்ன செய்வது? என்ற கேள்வியும் அவனுக்கு இருந்தது.

இருந்தும் ஒரு முறை முயற்சித்து பார்ப்போமே என்று அருள்மொழியை தொடர்புக் கொண்டு பேசினான். கண்டிப்பாக அவள் மறுப்பு தான் கூறுவாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ வருவதாக கூறவும் அவனுக்கே ஆச்சர்யம் தான், அவளது உடனடி சம்மதம் வேறு அவனுக்கு ஒரு குற்ற உணர்வையும் கொடுத்தது.

 தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். சின்ன கதையையே கொஞ்சம் கொஞ்சம் பக்கமா கொடுத்து உங்கள் பொறுமையை மிகவுமே சோதிக்கிறேன் தோழமைகளே, அதனால் இந்த பொங்கலில் இந்த கதைக்கும் வழி பிறந்து விரைவில் கதையை முடிக்க அருள்  கிடைக்கிறதா என்று பார்ப்போம்.. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

உறவு வளரும்...

Episode # 41

Episode # 43

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.