அவளே அவன் பிடியிலிருந்து விடுபட முயல . . அங்கே வேலை செய்யும் பணியால் “அதான் இருமிட்டே இருக்கயே தாத்தா . .அவர்கிட்ட மருந்து இருக்குல சாப்பிடேன்” என சொல்லிக் கொண்டே படிகளில் இறங்கிப் போனான்.
இதற்கு மேல் எதையாவது செய்து பிரச்சனையாகிவிடக் கூடாதென அவன் அறைக்கு சென்றாள். ஆகாஷ் அறைக்குள் சென்று கதவை தாழிட்டதுமே அவளை கட்டிப் பிடித்தான்.
“இதுக்குதான் வர சொன்னியா?” என அவள் செல்லமாக கோப்ப பட
“அப்கோர்ஸ் பேபி” என கண்ணடித்தான்
அவள் இதழை முத்தமிட சென்றவான் “ஆஆ” என அலறியபடி “முதல்ல இந்த தாடி மீசைய எடு . .குத்துது” என்றபடி அவனே எடுக்க முயன்றான். சாரு “இதெல்லாம் ஹீரோயின் சொல்ல வேண்டிய டைலாக்டா ” என அவளே அதை கலைத்தாள்.
“இப்ப ரெடியா?” அவன் குழைவாக கேட்க
வெட்கம் பீறீட முகம் சிவந்தவள் அவனை வரவேற்றாள். அவனும் அவள் இதழை பதம் பார்க்க அத்தனை நாடகளுக்கான பிரிவை இருவருமே ஈடுசெய்தனர். குளிருக்கு இதமாக அந்த அணைப்பு அவளுக்கும் தேவையாகவே இருந்தது.
மௌனமாய் நிமிடங்கள் கலைய தன்னிலை பெற்றவளாக அவனை தள்ள முயற்சிக்க அவனோ அவன் கை வலைவிலேயே அவளை சிறைப்படுத்தியபடி இருந்தான்.
“இங்க என்ன நடக்குது தெரியுமா?” சாரு கேட்க
“மூலிகை ஸ்மக்கல் பண்றாங்க” என்றான்
“யாரு?“
“மொத்தமா ஐஞ்சு பேரு . .இதையெல்லாம் செய்யறது பெரிய தொழிலதிபர் அவனுக்கு ஒரு எக்ஸ் எம்.எல.ஏ சப்போர்ட்” என முடித்தான்
“பரவாயில்லயே இவ்வளோ கண்டுபிடிச்சிருக்க ஆகாஷ் குட் . . ரெண்டு பேரு இந்த ஆசரமத்துலயேதான் இருக்காங்க” என்றாள். அதற்கு ஆமென தலையசைத்தான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“இவங்கல என்ன செய்ய போற?”
சற்று சிந்திப்பதைப் போல பாவணை செய்தவன் “இவங்க அத்தனை பேருக்கும் சூன்யம் வெச்சிடலாமா?” எனக் கேட்டான் சிரித்தபடி
“ஐ“ம் சீரியஸ்” என்றாள் உஷ்ணமாக
“அப்ப கூல் பண்ணவா பேபி” என மீண்டும் அவளை முத்தமிட முனைந்தவனை
“போதும் . . ” என தள்ளிவிட்டாள்.
“அடிக்கடி காஸட்டுமை மாத்தாத . . வேற தாடி தாத்தவ கிஸ் பண்ணிட போறேன்” என குறும்பாக சொன்னதை ரசித்தவாறே
“எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும? . .அப்பாகூட ஊருக்கு போலியா இதெல்லாம் கேட்க மாட்டியா?” கடமை கண்ணியம் கட்டுபாடிலிருந்து பிறழாமல் கேள்வியை அடுக்கினாள்.
“மகாராணி கிளம்பும் போதே நீ ரிவால்வர் ரிட்டா வேல பாக்க ஆரம்பிச்சிட்டனு தெரியும் . . லியாவ பீட் பண்ணனும் அதானே?” அவனும் சளைக்காமல் கேட்டான்
“பின்ன என் லவ்வர் லியாவ புகழ்ந்தா கோவம் வராமயா இருக்கும். லியாவா நானா ஒருகை பாத்திடலாம்னுதான் அப்பாவ ஊருக்கு போக சொல்லிட்டு நான் இங்கயே இருந்து கண்டுபிடிச்சேன். ஆனா ஒரு விஷயம் நீ லியாவோட என்னை கம்பேர் பண்ணி பேசாம இருந்திருந்தா நான் நிச்சயம் அப்பாவோட அங்கயே அக்காவ நினைச்சி அழுதுட்டு இருந்திருப்பேன்” ரயில் வண்டியைப் போல தடதடவென பேசி முடித்தாள்.
“இவ்ளோ நாள் நீ பண்ணது பெரிசில்ல இனிமேதான் உனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்றான்
“என்ன செய்யணும்?” ஆர்வத்தோடு கேட்டவளிடம் தன் செல்போனில் சிலவற்றை காட்டினான். பின்பு அவள் செய்ய வேண்டியவற்றை நிதானமாக சொன்னான்.
“இதெல்லா நடக்குமா? . . பிராக்டிகலா யோசி ஆகாஷ் . . ” நம்பிக்கை அவளிடமிருந்து ஓட்ட பந்தயமாய் ஓடிவிட்டிருந்தது.
“நடக்கும் . . வைரத்த வைரத்தாலதான் வெட்டணும்” என்றான். அவன் பார்வை பல ஆயிரம் ஆர்த்தங்களை சொன்னது.
அவளிடம் நம்பிக்கை திரும்பவில்லை “நீ சொல்றத கண்டிப்பா செய்யறேன் . . ஆனா . .” அவள் உடல் மொழியில் நம்பிக்கை இல்லை என்பதை புரிந்துக் கொண்டான்.
எதையோ நினைத்தவனாய் “இன்னொரு விஷயம் சாரு . . வெரி சாரி டு சே திஸ் . . சுவாதி கோயிங் இன் எ ராங் வே . . ஐ காண்ட் ஹெல்ப் ஹெர் எனி மோர்” என தயங்கியபடி கூறினான்.
அவன் சொன்ன வார்த்தைகளால் வாட்டமடைந்தவள் கண்களில் நீர் துளிர்ந்தது. இதை எதிர்பார்த்தவன் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.
அவள் விழி நீரை துடைத்தவன் அவள் கண்ணோடு கண் பார்த்து. “இட்ஸ் ஓகே பேபி” என ஆறுதல் சொன்னான்.
“எனக்கும் சுவாதி மேல சந்தேகம் இருக்கு. அது உண்மையா இருந்தா நானே அவளை கொலை பண்ணிடுவேன்” என ஆக்ரோஷத்துடன் சொல்லி பதிலை எதிர்பார்க்காமல் அறையைவிட்டு வேமாக நீங்கினாள்.
தொடரும் . .
{kunena_discuss:1199}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.