(Reading time: 16 - 32 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 15 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

விபாகரன் முகத்தில் அத்தனை கோபத்தை பார்த்ததும் அர்ச்சனா பதில் ஏதும் பேசாமல் “தேவி கிளம்பு..” என்று சொல்லி கீழே இறங்க, யாதவியும் அவள் பின்னால் இறங்கினாள். மஞ்சுளாவும் அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்தப்படி நின்றிருந்தார்.

கீழே இறங்கி வாசல் நோக்கிச் செல்ல, அதே நேரம் பாலாவும் வீட்டுக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும், “அண்ணா..” என்று யாதவி அவன் அருகில் சென்றாள். மேலிருந்து விபாகரன் அதை பார்த்தப்படி நின்றிருந்தான்.

யாதவி பாலாவிடம் பாசமாய் பாதுகாப்பு உணர்வோடு அடைக்கலம் நாடுவதை பார்த்து மகிழ்ந்தாலும், தன்னை பார்த்து அவள் பயந்ததை நினைத்து அவனுக்கு வருத்தமாகவே இருந்தது.

“அண்ணி சொன்னா உடனே இங்க கிளம்பி வந்துடுவியா?” என்று பாலா யாதவியை பார்த்து கோபமாக கேட்டான்.

அதற்கு பதில் ஏதும் பேசாமல் அவள் அமைதியாக நிற்க, மேலிருந்து விபா புன்னகைத்துக் கொண்டான். இப்படி பாசமான சகோதரன் ஒருவன் யாதவியோடு பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவன் அவர்கள் குடும்பத்தை நல்லவிதமாக வழி நடத்திச் சென்றிருப்பான் என்று அவனுக்கு தோன்றியது. சில பல விஷயங்கள் நடந்து முடிந்ததற்கு பிறகு இப்படி யோசிப்பது மூடத்தனம் என்று தன்னையே அவன் சமாதனப்படுத்திக் கொண்டான்.

“அர்ச்சனா.. தேவி எங்க வீட்ல வேலை செஞ்சவங்க பொண்ணா இருக்கலாம்.. ஆனா எங்க வீட்ல எல்லோரும் அவளை எங்க வீட்டு பொண்ணா தான் நினைக்கிறோம்.. ரூபினி இப்போ வந்தவ.. அவளுக்கு இதெல்லாம் புரியாது. அவ இவளை வேலைக்காரின்னு சொன்னதால நீ இவளை இங்க கூட்டிக்குட்டு வந்திருக்கக் கூடாது.. இன்னொரு முறை இந்த தப்பை செய்யாத..” என்று பாலா கூறவும்,

“ஓடிப் போனவ கெட்டு சீரழிஞ்சு போயிருப்பான்னு பார்த்தா, எப்படி தான் இவளுக்கு நல்லவங்க ஆதரவு கிடைக்குதோ தெரியல..” என்று மனதில் நினைத்துக் கொண்டு,

“இல்ல பாலா அண்ணா.. நான் சும்மா கூடமாட உதவிக்கு தான் அழைச்சுட்டு வந்தேன்.. வேற எதுவும் தப்பா இல்ல..” என்று பாலாவை பார்த்து கூறினாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அது கூட வேண்டாம்.. சரி நாங்க அப்போ கிளம்பறோம் ம்மா…” என்றான், அப்போது தான் மேலே நின்றிருந்த விபாகரனை கவனித்தவன்,

“தேவி நீ கார்ல உக்காரு.. இதோ வந்துட்றேன்..” என்று அவளை அனுப்பிவிட்டு,

“நான் விபாவை பார்த்துட்டு வரேன்..” என்று சொல்லி மேலே சென்றான்.

நேராக விபாகரன் முன் பாலா சென்று நிற்கவும், அவன் பாலாவை அமைதியாக பார்த்தப்படி நின்றிருந்தான்.

“என்னடா.. என்னோட மாமியார் தேவியை வேலைக்காரியா ட்ரீட் பண்ணாங்கன்னு அவங்களுக்கு தண்டனை கொடுக்க நினைச்ச, இப்போ உன்னோட தங்கை இப்படி செஞ்சிருக்காளே, அவளுக்கு  என்ன தண்டனை கொடுக்கப் போற?”

என்னோட மாமியார்க்கு தேவியை எங்க வீட்ல வேலை செய்தவங்களோட பொண்ணா தான் அறிமுகம், ஆனா அர்ச்சனாவுக்கு தேவி யார்னு தெரிஞ்சும் இப்படி செஞ்சிருக்கா.. அப்போ தப்பு யார் மேல அதிகம்?” என்று பாலா கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, விபாகரன் அமைதியாகவே நின்றிருந்தான்.

“இங்கப்பாரு உன்னோட தங்கையை தண்டிக்கணும்னு நான் சொல்ல வரல, அதேபோல என்னோட மாமியார் செஞ்சத நியாயப்படுத்தவும் நான் விரும்பல.. ஆனா உனக்கும் எனக்கும் தேவி முக்கியமானவளா இருக்கலாம், அவ கஷ்டப்பட்றத பார்க்க முடியாம இருக்கலாம்..

ஆனா எல்லோருக்கும் இப்படி மனசு இருக்காது.. இருக்கணும்னு நாம எதிர்பார்க்கவும் முடியாது.. சில பேரோட குணம் அதுதான், அவங்கக்கிட்ட தேவி காயப்படாம பார்த்துக்கணுமே தவிர, அவங்களை பழி வாங்கக் கூடாது.. அதை நல்லா புரிஞ்சிக்க முயற்சி பண்ணு..” என்று சொல்லியவன், விபாகரனின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்பிப் போக,

“பாலா..” என்று அழைத்து அவனை நிறுத்திய விபா,

“உங்க ஜிம்க்கு இனி எந்த ப்ராப்ளமும் வராது.. டென்ஷன் ஆகாத..” என்றான்.

“நீ சரி செய்யலன்னாலும் நானே செஞ்சுப்பேன்..” என்று முறைக்க முயற்சி செய்தவன், முடியாமல் புன்னகைக்க, விபாவும் புன்னகைத்துக் கொண்டான்.

பின் பாலா கார் எடுத்துக் கொண்டு சென்றதும், அதுவரை புன்னகை முகமாகவே இருந்தவன், பின் கோபமாக முகத்தை மாற்றிக் கொண்டு,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "நீயிருந்தால் நானிருப்பேன்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அர்ச்சனா..” என்று கத்திக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.

அவனது குரலில் அர்ச்சனா தன் உடல் நடுங்க நின்றிருந்தாள். மகனின் கத்தலில் மஞ்சுளாவும் அர்ச்சனாவின் அருகில் சென்று நின்றுக் கொண்டார்.

“உன்னோட மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க அர்ச்சனா.. எதுக்கு இப்போ யாதவியை இங்க கூட்டிட்டு வந்த..” அதே கோபத்தோடு கேட்டான்.

“அது.. அது ண்ணா.. வேலை செய்ய ஆள் வரல, அதைப்பத்தி ரூபினிக்கிட்ட சொன்னதும், அவங்க தான் ஷாப்பிங்கிற்கு கூட வந்த யாதவியை அனுப்பி வச்சாங்க..”

“தேவி.. யாதவி இல்ல, நீ தேவின்னு அவளை நினைச்சதால தானே அவளை இங்க கூட்டிட்டு வந்த.. யாதவியா நினைச்சிருந்தா இப்படி செஞ்சிருப்பியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.