(Reading time: 16 - 32 minutes)

“நம்ம எங்கடா வருத்தப்பட்டோம்..” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்ட பன்னீர்,

“ஆமாண்டா யது செல்லம், நீ எங்கப் போனன்னு தெரியாம, உன்னோட அம்மாவும் கூட இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? இனி உன்னை விட்டு என்னால இருக்க முடியாது.. என்னோட வீட்டுக்கு வந்திடும்மா..” என்று அவரும் தத்ரூபமாக நடித்து, யாதவியை அழைக்க,

“இல்லை நான் இங்க இருந்து எங்கேயும் வரமாட்டேன்.. என்னை எங்கேயும் கூப்பிடாதீங்க.. எனக்கு இவர் கூட இருக்க விருப்பமில்லை” என்று யாதவி தெளிவாக தன் முடிவை கூறினாள்.

“யாதவி.. அங்கிள் முன்ன மாதிரி இல்ல.. இப்போ அவர் ரொம்பவே மாறிட்டார். அதனால..” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இருக்கட்டும், ஆனா நான் இங்க தான் பாதுகாப்பா உணர்றேன்.. என்னோட அம்மா மாதிரி புவனா அம்மா என்னை நல்லா பார்த்துக்கிறாங்க.. எனக்கு ஒரு அண்ணன் இல்லைங்கிற குறையை பாலா அண்ணாவும், நல்ல சகோதரியா, ஒரு ப்ரண்டா மதுவும் இருக்காங்க.. இவங்களை விட்டு என்னால வர முடியாது..” என்றாள் அவள்,

“கண்ணு.. என்னடா இப்படி சொல்ற.. இந்த அப்பா முன்ன செஞ்சதெல்லாம் மன்னிச்சிடு டா.. இப்போ அப்பா கூட வந்து இருடா..” என்றவர்,

“அம்மா நீங்களாவது சொல்லக் கூடாதா?” என்று புவனாவை பார்த்துக் கூற, அவரோ யாதவியை பார்த்தார்.

அவளது முகத்தில் “என்னை அனுப்பி விடாதீர்கள்..” என்ற தவிப்பு அடங்கியிருக்க,

“இங்க பாருங்க.. தேவி உங்க பொண்ணு தான், ஆனா எத்தனையோ வருஷமா எங்கக் கூடவே இருந்துட்டா.. அவளுக்கா உங்க கூட வர விருப்பம் இருந்தா அது வேற, ஆனா அவளா விருப்பப்பாடாத பட்சத்துல, வீட்ல ஒரு பெண் துணையும் இல்லாம அவ உங்கக் கூட இருக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல..

அவ இங்கேயே இருக்கட்டும்.. எப்போ உங்களுக்கு பார்க்கணும்னாலும் இங்க வந்து அவளை பார்த்துட்டு போங்க.. அப்பாவா அவ மேல உங்களுக்கு எப்பவும் உரிமை இருக்கு, அதை நாங்க மறுக்கல.. ஆனா அவ இங்கேயே இருக்கட்டும்..” என்று புவனா சொல்லவும், யாதவி கண்களாலேயே அவருக்கு நன்றி கூறினாள்.

“யாதவியை நான் தனியா விட்ற மாட்டேன் ஆன்ட்டி.. அங்கிளும் அவளும் தனியா வீட்ல இருந்தாலும், அவங்களுக்கு என்னோட பாதுகாப்பு எப்போதும் இருக்கும்..” என்று சாத்விக் கூறினான்.

அதற்கு பாலாவோ, “சாத்விக் அது தான் தப்பா போயிடும்.. உங்களுக்கு கல்யாணம் ஆகப் போற இந்த சமயத்துல இதெல்லாம் வேண்டாம்.. அம்மா சொல்றது போல தேவி இங்கேயே இருக்கட்டும்..” என்று கூறினான்.

பன்னீருக்கோ, “என் பொண்ணை என்கூட அனுப்ப மாட்டேன்னு சொல்ல நீங்க யாருடா..” என்று உள்ளுக்குள் கோபம் கொந்தளித்துக் கொண்டு இருக்க, சாத்விக்கிற்காக அதை வெளிக்காட்டாமல் இருந்தார்.

இதற்கு மேலும் வற்புறுத்த முடியாது என்பதால், “அப்போ நாங்க வரோம்..” என்று சொல்லிய சாத்விக்,

“அங்கிள் நீங்க காரை எடுங்க..” என்று பன்னீரை அனுப்பிவிட்டு,

“ஒரு நிமிஷம் யாதவிக்கிட்ட பேசணும்..” என்று புவனாவிடமும் பாலாவிடமும் அனுமதி வாங்கியவன்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

கொஞ்சம் தள்ளிச் சென்று, “யாதவி.. ப்ளீஸ் என்னை மன்னிக்கணும்..” என்று அவளிடம் மன்னிப்புக் கேட்டான்.

“எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை சாத்விக்.. அதனால இந்த மன்னிப்புக்கோ இல்லை குற்ற உணர்வுக்கோ அவசியமில்லை. நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன்.. என்னைப்பத்தி கவலைப்பாடாதீங்க..” என்று அவனிடம் தெளிவாக உரைத்தவள்,

“ஆ அப்புறம், உங்க கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்..” என்று புன்னகை முகமாக அவனை வாழ்த்த,

“நம்ம கல்யாணத்துக்கு நீயே எனக்கு வாழ்த்து சொல்றியா யாதவி.. உன்னை பார்த்ததுக்கு பிறகும், நான் உன்னை எப்படி மிஸ் பண்ணுவேன்.. உன் கூட தான் என்னோட கல்யாணம் நடக்கும்னு நான் நேற்று உன்னை பார்த்ததும் முடிவு செஞ்சுட்டேன்..” என்று மனதில் சொல்லிக் கொண்டவன்,

“தேங்க்ஸ்..” என்று அவனும் புன்னகைத்தப்படியே விடை கொடுத்தான்.

மையல் தொடரும்..

Episode # 14

Episode # 16

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.