(Reading time: 12 - 24 minutes)

ஒருவேளை சுவாதிதான் கூட்டத்தின் தலைவியோ என நினைக்கவும் அவளுக்கு சுவாதியின் நினைப்பே கசப்பாய் மாறியது. எத்தனையோ தருணங்களில் தன் அக்காவிற்காக தான் சிந்திய கண்ணீர் இதற்குதானா என நினைக்கையில் மனம் துவண்டுப் போனது.

இவற்றை தன் பெற்றோர் அறிந்தால் அவர்கள் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இப்படி எண்ணங்களின் பிடியில் சிக்கியவளாய் சாரு மறைவிடத்தில் நின்றிருந்தாள்.

மூவர் சென்றதும் சுவாதி திரும்புகையில் . . சாரு அவள் முன் போய் நின்றாள்.

“துரோகி” என்ற வார்த்தையில் சாரு அத்தனை வெறுப்பையும் ஒன்று சேர உமிழ்ந்தாள். 

எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் சுவாதி அருகில் வந்தாள். சாரு கன்னத்தில் ஓங்கி ஒரு அரைவிட்டாள் சுவாதி. இதை சற்றும் எதிர்பார்க்காத சாரு நிலைதடுமாறினாள். சுவாதி எதையே சாருவின் நாசியில் வைக்க அதை சுவாசித்த சாரு மயங்கினாள்.

ஆகாஷ் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. புது நம்பரை கண்டவன் எடுத்துப் பேசினான். அவன் கேட்ட செய்தியால் சக்தி மொத்தமும் வடிந்ததுப் போல அயர்ச்சி ஏற்பட்டது.

“என்னோட வா ஆகாஷ் என்றான் ஒருவன்” முகத்தில் கருணை நட்பு போன்ற அம்சங்கள் துளிக் கூட இல்லை. சிகரெட்டினால் தடித்த கருத்த அவன் உதடுகள் இதுவரை புன்னகை பூத்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

“யார் நீ?” ஆகாஷ் சந்தேகம் தீவிரமானது

“கூட்டியார சொன்னாங்க போவணும்னா  என்னோட வா . . இல்லனா வுடு” எனச் சொல்லி பதிலுக்கு காத்திராமல் தன் ஜீப்பை அடைந்து ஸ்டார்ட் செய்தான்.

ஆகாஷ் அவனை நம்புவதைத் தவிர வேறு வழி இல்லாமல் ஜீப்பில் ஏறினான். போனில் அவ்வாறுதான் கட்டளையிடப் பட்டிருந்தது.

“சாரு எங்க இருக்கா? எப்படி இருக்கா?”

“என்ன பண்ணிங்க அவள?” இதைக் கேட்கும் பொழுது அழுதே விட்டான்.

“நீங்களாம் யாரு?”

இன்னும் இன்னும் ஆகாஷின் விடையில்லா பல வினாக்கள் விரையம் ஆகின.

அதன்பின் சுமார் நாற்பதைந்து நிமிடங்கள் மௌன பயணம். சாருவின் நினைவில் அமிழ்ந்து முழ்கி போனான்.

குறிப்பிட்ட இடத்திறக்கு சென்றதும் ஜீப் நின்றது. அடுக்கி வைத்த தீப்பெட்டிகள் போல வீடுகள். அக்கம்பக்கத்தில்  கடைகள் என அந்த தெரு ஜே ஜேவென இருந்தது.

அங்கிருந்துத்தான் பேருந்துகள் கிளம்புவதால் அவ்வப் பொழுது ஹாரன் ஒலித்து இம்சித்தது. வானத்தில் நிலவு தொங்கிக் கொண்டிருந்தது.

தீப்பெட்டி வீடுகளில் இரட்டை இலக்குக் கொண்ட ஒரு வீட்டின் கதவை தட்டினான் ஜீப்பை செலுத்தியவன். சாருவிற்க்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என இறைவனிடம் பிச்சை எடுத்தான். “எல்லாம் விதி” என்ற வார்த்தையில் இறைவன் தப்பித்துக் கொள்வான் என மூளை இதயத்திடம் கேலி செய்தது.

தான் ஏன் இப்படியெல்லாம் சிந்திக்கிறோம் என அவனுக்கு வியப்பாக இருந்தது. குழப்பமாக இருந்தது. பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது. கதவு திறக்கும் ஒசை கேட்டதும் எண்ண சங்கிலிகள் அறுந்துப் போயின. சுவாதியுடன் போலி சாமியாராக இருந்தவன் தான் கதவை திறந்தான்.

“சாரு எங்க?” எனக் கேட்க எத்தனித்த அவன் உதடுகளுக்கு அவன் கண்கள் சட்டென பதில் அளித்தது. வீட்டினுள் சாரு மயங்கிய நிலையில் படுத்திருந்தாள். ஆகாஷ் கதவை திறந்தவனை தள்ளியபடி உள்ளே சென்றான். ஆகாஷ் தடுக்கப்படவில்லை.

வீட்டு ஹாலில் நடுவில் பழைய சோபா செட் போடாபட்டிருந்தது. சுவரோடு ஒட்டினாற்போல துறுபிடித்த கட்டில் இருந்தது. வீட்டில் அதிகம் பொருட்கள் இல்லை. சமையலறையில் சாமான்கள் பலநாள் பயன்படுத்தாமல் கிடந்திருந்தன. போலி சாமியார் இளைஞன் . . ஜீப் ஓட்டி வந்தவன் . . இவர்களோடு இன்னும் இரண்டு பேர் இருந்தனர். அனைத்துமே உணர்ச்சியற்ற இருகிய இரும்பு முகங்கள்.

“சாரு . . சாரு” என அவளை தட்டி எழுப்பினான். அவள் அசையவில்லை.

“இன்னும் பத்து நிமிஷத்துல அவளே எந்திரிப்பா . . கவலப் படாத ஆகாஷ்” என சுவாதி வேறு ஒரு அறையில் இருந்து வெளி வந்தாள்.

“அவளுக்கு என்ன ஆச்சு?” அவன் தொனியில் கவலை தேய்ந்துக் கிடந்தது.

“மதி மயக்கி மூலிகை சுவாசிச்சா இப்படி ஆகும். சரி ஆகிடும் கவலப்படாத” எதுவுமே நடக்காத்துப் போல சுவாதி பேசினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அந்த மூலிகை எப்படி சாருகிட்ட . . ”

“நான்தான் அவள சுவாசிக்க வெச்சேன்”

இந்த பதிலால் ஆகாஷிற்க்கு கட்டுகடங்காத கோபம் தலைக்கேறியது. சுவாதியை அரக்கியைப் பார்ப்பதுப் போல பார்த்தான். “அவ உன் தங்க” என கத்தினான்.

“அப்படியா?” என கேலி பார்வை பார்த்தாள் சுவாதி

“உனக்காகதான் சாரு இங்க வந்தா தெரியுமா? . . என் அக்கா வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படவள . . நீயே . .ச்சே” என அறுவறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.