(Reading time: 12 - 24 minutes)

சாரு அருகில் சென்றவன் அவள் தலையை மெதுவாக கோதினான். அவள் தலையை தன் மடியில் மெதுவாக கிடத்திக் கொண்டான். அவனை அறியாமல் கண்களில் நீர் வழிந்தது. “உனக்காக இங்க வராம இருந்திருந்தா . . எங்களுக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி இருக்கும் . . நாங்க சந்தோஷமா இருந்திருப்போம்.” சுவாதியின் கொடூர முகத்தை பார்க்காமலே பேசினான்.

வெறிப்பிடித்தவன் போல கத்தினான் “இப்படி மலையிலயும் காடுலையும் திரிய வேண்டிய அவசியம் என்ன?”.

சுவாதியோ அல்லது மற்றவர்களோ எந்த பதிலையும் சொல்லாமல் தன் போக்கிற்க்கு இருந்தனர்.

நொடிகள் கறைய சாரு மெல்ல கண் திறந்தாள். அவள் அமர உதவினான். சாருவின் கண்கள் சுவாதியை தழுவியது. ஆனால் சுவாதியிடம் எந்த உணர்வும் இல்லை.

“ஆர்.யு.ஓ.கே சாருமா?” வாஞ்சையோடு கேட்டவனிடம் . .நலம் எனபதாய் தலையசைத்தாள். சோர்வாய் காணப்பட்டாள்.

“நாம யு.எஸ். போயிடலாம்டா. யார் எக்கேடு கெட்டா நமக்கு என்ன?” என்றான் ஆகாஷ். அவளை தன் இதயத்தில் சாய்த்துக் கொண்டான்.  

ஆனால் சாருவிற்க்கு சுவாதி மேல் இருந்த பாசம் மொத்தமாய் கறைந்து மடிந்துப் போயிற்று என்பது மட்டும் நிதர்சனம்.

அப்போதும் சுவாதி அசைந்தபாடில்லை. ஆகாஷ் சாருவை தாங்கியபடி வெளியேற தொடங்கிய நிமிடம். பாடனிஸ்ட் பத்ரிநாத் வருகையை வாசல் கதவு ஒசை அறிவித்தது.

உள்ளே வந்தவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். நடந்தவற்றை யூகித்தபடி புன்முறுவலுடன் அமர்ந்துக் கொண்டார். “ஆகாஷ் வா உட்காருப்பா . . அம்மா சுவாதி நீயும் வாம்மா” என்றார்.

இருவரும் எதிர்எதிர் திசையில் நின்றபடியே இருந்தனர். “பல நதிகள் இருந்தாலும் கடைசியில கடல்லதான் சங்கமிக்குது. அப்படிதான் நீங்க ரெண்டு பேரும் . .”

அவர் பேச்சை இடைமறித்த ஆகாஷ் “ஸாரி நாங்க யு.எஸ் போறோம் . . எங்கள விட்டுடுங்க” என்றான்.

“ஆகாஷ் என்னப்பா இது”

“இல்ல சார் . . நான் என் சாருக்காக தான் இங்க வந்தேன். அவ சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம். ஆனா அவளுக்கு ஆபத்து வரும் நிலையில என்னால . . முடியாது. ப்ளீஸ்” என்றான். இவற்றை சொல்லும்போதே அவன் சாருவை இன்னமும் இறுக பற்றினான். அவன் காதலை உணர்ந்த சாரு கண்கள் கலங்கின.

“ஆகாஷ் சுவாதி மூலிகைனால சாருவ மயக்கமடைய செய்யலனா . . இந்நேரம் சாரு உயிரோடவே இருந்திருக்க முடியாது. சாரு சத்தமா பேசினது அவங்க காதுல விழுந்தா கொன்னிருப்பாங்க. சுவாதிக்கு முதல்ல தேங்க்ஸ் சொல்லு”

இதைக் கேட்ட ஆகாஷ்  ஏளனமாக “என்ன சார் கட்சி மாறிட்டிங்களா? எத்தன கோடி கொடுத்தாங்க?” என்றான்.

“சோ நம்ப மாட்ட இல்லயா?” என்ற பத்ரிநாத் “இங்க ஒரு பத்து நிமிஷம் உட்காந்து என்னோட பேசினா . . உன் யு.எஸ். பிளைட் டிலே ஆகிடுமா?” என சொல்ல ஏளனம் இப்பொழுது கட்சி மாறியிருந்தது.

ஆகாஷ் வந்து அமர்ந்தான். சாருவை தன் அருகிலேயே அமர்த்திக் கொண்டான். பத்ரிநாத் சுவாதியை பார்க்க . . அவளும்  வந்தமர்ந்தாள்.

“ஆகாஷ் இங்க மூலிகை கொள்ளைய தடுக்க ஒருத்தர் மூணு வருஷமா போராடிட்டு இருக்கார். . .எனக்கே இது சமீபத்துலதான் தெரியும்” என தொடங்கினார் பத்ரிநாத்.

அவரே பேசட்டும் என மௌனமாக இருந்தான். “இங்க மட்டும் இல்ல தமிழ்நாட்டுல பழநி, கொள்ளிமலை இப்படி பல இடத்துல இருக்கிற அபூர்வ மூலிகைகளை காப்பாத்த போராடுறார்”

அவருக்கு பக்கபலமா நிறைய பேர் இருக்காங்க அவங்கள்ல சிலர் சுவாதி செல்வன்”.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

செல்வன் என்கிற பெயர் ஆகாஷிற்க்கு எதையே நினைவுபடுத்தியது ஆனாலும் மௌனமாகவே இருந்தான்.

“இது இவங்க ரகசிய லோகோ என சுவாதி கையை காட்டினார்.” அவள் கையில் ஆர் என்கிற ஆங்கில வார்த்தை இருந்தது. அதை சுற்றி எதோ டிசைன் இருந்தது. பச்சை குத்தி இருந்தாள். இதை எங்கோ பார்த்த மாதிரி ஆகாஷ் உணர்ந்தான்.

அடுத்து சுவாதி தொடங்கினாள் “இங்க கொள்ளையடிக்க வந்தவங்க ஐஞ்சு பேருக்கும் மூலிகை பத்தி அதிகமா ஒண்ணும் தெரியாது. அதனால நாங்க அவங்களுக்கு உதவுற மாதிரி உண்மையான மூலிகைகளோட அதே மாதிரி இருக்கிற சாதாரண இலைகளை சேர்த்திடுவோம்”

“இத்தன நாளுக்குள்ள மூலிகைகள் ரசாயன கலவையோட சேர்ந்தாதான். . அது பலன் தரும். அப்படி நடக்க முடியாத மாதிரி காலம் தாழ்த்துவோம்க . இன்னும் பல வழிகள். ஒரு செகண்ட்ல சொல்லிட்டேன். ஆனா எங்க உழைப்பு எத்தன வருஷம் தெரியுமா?” என்றாள் சுவாதி

“இதெல்லாம் சின்ன சின்ன விஷயம்தானே. ஐ மீன் டெம்பரரி ஸல்யூஷன்” ஆகாஷ் முதல் முறையாக பேசினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.