Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகா

Kaanum idamellam neeye

லோ என்னாச்சி, கண்ணைத் திறந்துக்கிட்டே கனவா” என மீனாட்சி தனக்கு எதிரே அமர்ந்திருந்த நிரஞ்சனிடம் 10 நிமிடமாக கத்திக் கொண்டிருந்தாள். அவனோ தன்னை மறந்து சிரித்தபடியே கனவில் மிதந்துக் கொண்டிருந்தான்.

”என்னாச்சி இவருக்கு, ஏன் நம்மளை பார்த்து இப்படி இளிக்கிறாரே” என சொல்லிக் கொண்டே தனது கையில் இருந்த புத்தகத்தால் அவனது தோளில் ஓங்கி ஒரு அடி போட்டாள். அதில் மயக்கம் தெளிந்தவன் போல உலுக்கி எழுந்தான் நிரஞ்சன்

”என்னாச்சி” என நிரஞ்சன் தனது தோளை தடவியபடியே பாவமாக கேட்க

”அதையேதான் நானும் கேட்கறேன், என்னாச்சி உங்களுக்கு, ஏதோ கனவு காணறீங்களா நானும் அப்ப இருந்து பார்க்கறேன், என்னை பார்த்து சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க”

“அப்படியா அப்ப நான் உன்கிட்ட எதுவும் சொல்லலையா”

“இல்லையே”

”இவ்ளோ நேரம் நீ என்ன பண்ணிட்டு இருந்த”

“படிச்சிட்டு இருந்தேன் இப்பதான் படிச்சி முடிச்சேன்”

”அப்ப நான் உன்கிட்ட பேசினது எல்லாமே என்னோட கனவா”

“என்ன பேசினீங்க” என சந்தேகமாக மீனு கேட்க

“ஆஆ அது அது வந்து அதை விடு” என நொந்துப் போனபடி சொல்லிய நிரஞ்சனைப் பார்த்து

”அண்ணனும் தம்பியும் கனவு கண்டே என் உயிர் எடுப்பீங்க போல, சரி சரி கிளம்புங்க போங்க”

”எங்க போறது” என்றான் கேள்வி முகத்துடன்

“மாமா வீட்டுக்கு போங்க, நீங்க இங்க வந்தே ரொம்ப நேரமாகுது”

“பரவாயில்லை நான் இங்கயே இருக்கேனே, அந்த வீட்ல போய் எதுக்கு இருக்கனும், அங்க போர் அடிக்கும்”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஓ உங்களுக்கு டைம்பாஸ் ஆக நான்தான் கிடைச்சேனா, இதப்பாருங்க கிளம்புங்க நான் வெளிய போகனும் வேலையிருக்கு”

“என்ன வேலை”

”அவசியம் உங்களுக்கு நான் சொல்லனுமா முடியாது” என சொல்லியபடியே எழுந்து அவள் அறைக்குச் செல்ல பின்னாடியே சென்றான் நிரஞ்சன். அறைக்குள் அவனும் வருவதைக் கண்ட மீனாவோ அவனை வாசலிலேயே கையால் தடுத்து நிறுத்தியவள்

”எங்க வர்றீங்க”

“உள்ள”

“நான் ட்ரஸ் மாத்திக்கப் போறேன் புரியுதா, ஒரு பொண்ணு ரூமுக்குள்ள இப்படி வர்றது தப்பில்லையா”

“சாரி மீனா” என வழிந்துக் கொண்டே அவன் செல்லவும், தலையை அடித்துக் கொண்டு அறைக் கதவை சாத்தினாள் அவசரமாக வேறு உடைக்கு மாறினாள்.

”கோயிலுக்கு வேற நேரமாச்சி. மயிலும் அழகியும் வந்துடுவாங்க, சீக்கிரம் ரெடியாகு மீனா, இந்த டாக்டராலயே உன் நேரம் கெடுது, இவர் சகவாசமே உனக்கு வேணாம்” என தனக்குத்தானே பேசியபடியே அழகாக ரெடியாகி வெளியே வந்தாள். அதற்குள் அழகியும் மயிலும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் நிரஞ்சன் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட மீனாவோ

”பொண்ணுங்களோட பேசறத தவிர இந்த டாக்டருக்கு வேற வேலையே இருக்காது போல” என நினைத்துக் கொண்டே தன் தாயை காணச் சென்றாள்

”அம்மா நான் கோயிலுக்கு போய்ட்டு வரேன்”

“சரிம்மா பார்த்து போ இன்னிக்கு என்ன விசேஷம் கோயிலுக்கு திடீர்னு கிளம்பற”

“அப்படியெல்லாம் இல்லைம்மா மனசே சரியில்லை, அப்பா பத்தின விசயங்களால மனசு பாறாங்கல்லா கனக்குது, அதான் என் கவலையெல்லாம் கடவுள் கிட்ட கொட்டிட்டு வரலாம்னு போறேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "என் மடியில் பூத்த மலரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சரி மாப்பிள்ளையையும் கூட்டிட்டு போம்மா”

“அவர் எதுக்கு நான் எங்க போனாலும் அவரை கூட்டிட்டு போகனுமா, இந்த விசயம் அவரோட அண்ணாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் டாக்டரை விட்டுடுவாரு, என்னை திட்ட ஆரம்பிப்பாரு, உன்னை யாரு அவனை நடக்க வைச்சி கோயிலுக்கு கூட்டிட்டு போகச் சொன்னது, அவன் யார் தெரியுமா, டாக்டர், பெரிய சர்ஜன்னு க்ளாஸ் எடுப்பாரும்மா அதுவுமில்லாம அவர் இங்க இருந்தா அவரை பார்க்கற சாக்குல மிஸ்டர் ஈஸ்வரன் வருவாரு, இந்த விசயம் மாமாவுக்கும் அத்தைக்கும் தெரிஞ்சா அவ்ளோதான், என்னை திட்டியே தீர்த்துடுவாங்க, இந்த தெருவிலயே நம்மளை இருக்க விடாம பண்ணிடுவாங்க தேவையா நமக்குச் சொல்லு”

”பாவம் மாப்பிள்ளை அதான் சொன்னேன்”

“அம்மா வேணாம் நீ அமைதியா இரு, நான் சீக்கிரமா வந்துடறேன்.” என சொல்லிவிட்டு திரும்ப அங்கு வாசலில் நின்றிருந்த நிரஞ்சனைக் கண்டதும் அதிர்ந்தாள்

”இங்க என்ன செய்றீங்க டாக்டர், இன்னும் கிளம்பலையா நீங்க”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகாராணி 2019-02-25 18:31
இன்னும் எத்தனை ஜென்மங்கள் இருக்குமோ இன்னும் எத்தனை கனவுகள் வருமோ கனவுக் கதைகள் அருமையாக உள்ளது அவனியின் காதல் வெற்றி பெருமா
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகாvijayalakshmi 2019-02-25 18:26
nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகாsasi 2019-02-23 23:58
நன்றி ஆதர்வ் கண்டிப்பாக அடுத்தடுத்து வரும் எபிகளில் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்துவிடுகிறேன். :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகாAdharvJo 2019-02-23 14:01
Esh mulichikittu kanavu kana arambichitare facepalm vidha vidhama vidhyasama kanuringa Mr Scenesinappa :cool: Sasi ma'am flow sema :clap: :clap: Padmavati and dhana oda story eppadi mudindhadhu :Q: Aavani and Nagendiran (ivaru rombha nalavru :yes: )padmavati oda adutha life thaan aavani yo??(lorry idukuramathiri oru logic kandupidikireno :P ) eppo thaan ice break panuvinga??….first indha meenu kutti yarukkun sollunga ma...annan-oda kanavu oru tholai na thambi double aga irukaru :P who is padmavati and avani in the present...curiosity thanga mudiyala sikrama sollunga ji :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகாsasi 2019-02-22 13:46
ஐ மகி மேம் தாங்ஸ்யா ரகசியமா :Q: :yes: :yes: :yes: இருக்குப்பா அடுத்தடு்த்த எபிகள்ல தெரிஞ்சிடும் தொடர்ந்து படிங்க நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகாsasi 2019-02-22 13:44
நன்றி மது உங்களை போலவே இந்த கதை போற விதம் நல்லாயிருக்குன்னு எங்க வீட்லயும் சொன்னாங்க :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகாmahinagaraj 2019-02-21 10:28
ரொம்ப அருமையான வரிகள் தோழி.. :clap: :clap:
அவனி, நாகாவின் கதை பகுதி ரொம்ப பிடிச்சு இருக்கு.. :yes: :clap:
அழகிய காதல் கதை.. ஜென்ம ஜென்மமாக தொடர்வதன் ரகசியம் என்னவோ.. :Q: :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 15 - சசிரேகாmadhumathi9 2019-02-20 20:21
:clap: arumaiyaana epi. (y) :clap: waiting to read more. :thnkx: 4 this epi. :GL: poga poga kathai interesting aaga irukku. :-) :clap:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top