(Reading time: 16 - 32 minutes)

அம்மா இடைமறித்தாள்

"போதும்  போதும்  உங்க பட்டம்பூச்சி புராணம்.சாப்பிட வாங்க.அப்பா பொண்ணு பக்கத்திலேயே காலம் முழுக்க ...பட்டம்பூச்சி ..சமூக சேவேன்னு பேசிட்டே இருங்க.அவ வாழ்க்கை விளங்கிடும்..."படபடவென பேசிவிட்டு போனாள்.அவள் கஷ்டம் அவளுக்கு.

"கயல்அம்மா சொல்லுவதை பெருசா எடுத்துகாத.... அவ ஆதங்கம அவ பாவம் அதை கொட்டிட்டு போறா பெத்தவ இல்லையா...வா போகலாம்"

"சரி பா"வாய் சிர்த்தாலும் மனம் கலங்கியது.அம்மா எப்படி இருந்தாள்.என்னை கொண்டாடி கொஞ்சி ராணியாய் வைப்பாளை ஏன் இப்படி மாறினாள்.என்னை வேறொருவருக்கு கல்யாணம் செய்து வைத்து இவள் சாதிக்க போவது என்அவள் என்னை அனைத்து முத்தம் கொடுத்து ஆணடுகள் ஆனது. சிவா வை வேண்டாம் என்றதிலிருந்து நான் வேண்டாதவள் ஆனேன் போலும்.ச்ச என்ன இது அம்மா பாவம். அவளுக்கு இருக்கும் பயம் ஆதங்கம் அவள் இடத்தில் இருந்தாலே புரியும்.அவள் காட்டும் கோபம் எல்லாம் அவள் அன்பின் அடையாளம்.என் வளர்ச்சியில் என் மாற்றத்தில் சந்தோஷம் அடைந்தாலும் அதை வெளிகாட்டாமல் என்னை அவளுக்கு சம்மதம் சொல்ல வைகக பாடுபடுகிறாள். என்ன நடக்குமோ.

ஆண்டுவிழா நாள்.பட்டாம்பூச்சி திருவிழா கோலம் பூண்டது. மனதில உற்சாகத்துடன குழந்தைகள் அவற்றின பெற்றோர்கள்.அப்பா முகத்தில் பூரிப்பு.

"கயல் இந்த வடருடம் நீ தான் மேடை ஏறனும்"

"அப்பா அதெல்லாம வேண்டாம்"

"என்ன கயல் என்னை விட உன்னையும் சிவாவையும் தான் பசங்களுக்கு நல்லா தெரியும். உன் உழைப்பு கயல்.நீ தான் மேடையேறி பேசனும்.சிவா கூட வருவான்"

"சரி பா...."

முதுகில் தட்டிவிட்டு வழக்கம் போல் புன்னகை சித்திவிடடு அப்பா போனார்

"என்ன கயல் சந்தோஷமா இருக்க"

"ஆமா சிவா...அப்பா என்னை மேடை ஏற சொன்னார்."

"சூப்பர் போ...அப்போ நீங்க நான் இனி எல்லாம் மேடம்"

"ஏய் சிவா கிண்டல் பண்ணாத...நீயும் வா"

"அப்போ என் கேள்விக்கு பதில்"

"என்ன கேள்வி"

"மூன்று வருஷமா அதே தான் கேட்கறேன்"

"அதே கேள்விக்கு அதே பதில் தான்சிவா"

அவன் முகம் வாடியது.எனக்கு எங்கோ வலித்தது

"சிவா நீ உண்மையா சொல்லறயா விளையாடறயா தெரியலை"

"வாழ்க்கை கயல் விளையாட்டு இல்லை"

"சிவா உன்னை காயப்படுத்த விரும்பலை.உன்னை எனக்கு புடிக்கும் ஆனால் நீ ஏன நிஜம ஏத்துக்க மறுக்கற.என் மனசில்...."

"அறிவு தான் இருக்காரு.தெரியும்.என்றைக்காவது உன் மனசு மாறாதான்னு தான் பார்க்கறேன்.கயல்"

"சிவா ப்ளீஸ் என்னையும் கஷ்டப்படுத்தி உன்னையும் ஏமாத்திக்காத..எதுவும் மாறாது"

"என் காதலும் தான் கயல்..."

அவன் கண்கள் பனித்தது. என்னை இத்தனை நேசிக்கும அவனை கொடுமை செய்வதாய் குற்ற உணர்ச்சி  பிறந்தது. என் கண்ணில் நீர் திரண்டது.அதை பார்த்த சிவா

"ஏய் கயல்...கவலை படாதே உன் அறிவு வரும்வரை நான் இதையே கேட்கிறேன் நீயும் இதே பதில் சொல்லு..சரியா"என் கன்னம் தட்டி விட்டு மெல்ல சிரித்து விட்டு போனான்.அவன் சிரிப்பில் வலிதெரிந்ததது

 இப்போது நம் கயல்விழி அவர்கள் நம்முடன் பேசுவார்கள்.மேடையேறி என் தனிஉரையை முட்த்து விட்டு கீழிறங்கினேன்.நான் மேடை ஏறியது முதல் கீழிறங்கும் வரை  ஒரு ஜோடி கண்கள் என்னையே பார்பபதாய் ஒரு உணர்வு.எங்கோ ஓரமாய் நின்று கொண்டிருந்த ஒரு உருவம் என்னை பார்த்து புன்னகைத்தது.யாரென்று புலப்படவில்லை.நிகழ்ச்சிகள் முடிந்து பரிசுகள் வழங்கி பிரிவுரை நடந்த பின்னர் அவரவர் என்னை தனிமையில் பாராட்டும் நேரம் அந்த உருவம் என் முன் வந்தது.இப்போது யாரென புரிந்தது.

"மிஸ்.கயல்விழி"

"ஆமா நீங்க...கதிர்?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"எப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க"

என்னவன் உற்ற தோழன் எப்படிமறப்பேன்.அவன வீடு எப்படி மறப்பேன்.

"நாம தான் சந்திச்சிருககோமே"

"அது பல வருடம் முன்னாடி....எப்படி இருக்கீங்க"

"நான் நல்லாயிருக்கேன்.நீங்க....இங்க யார் படிக்கறாங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.