(Reading time: 16 - 32 minutes)

"நான் நல்லா இருக்கேன்.என் கஸின் பொண்ணு.எப்பவும் இந்த மையம் பற்றியும் உங்களை பற்றியும் தான் சொல்லிட்டே இருப்பா...இந்தமுறை இந்த ஆண்டுவிழா பாரக்க கட்டாயப்படுத்தி கூட்டி வந்தா.வாழ்த்துகள்.நல்லா பண்றீங்க.பிள்ளைகள் மனசு தொடர்த்து தான் கஷ்டம்.அதை சிறப்பா பண்ணறீங்க."

"நன்றி...உங்க நண்பர் எப்படி இருக்காரு"அடக்கமுடியாமல் கேட்டுவிட்டேன்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"அறிவழகனா"சற்று சுதாரித்து கொண்டான்.அவன் பெயரை கேட்டதே என்னை உற்சாகப்படுத்தியது

"அவன் நல்லாயிருக்கான்"

ஒற்றை வார்த்தையில்  முடித்து கொண்டான்.அவனை பற்றி என்னிடம் பேசக்கூடாது என அவனுக்கும் தடா போலும்.நான் விடுவதாய இல்லை.

"அம்மா அப்பாகலை....வளரமதி கல்யாணம் ஆச்சா?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"எல்லாரும் நல்லா இருக்காங்க.வளர் கல்யாணம்  பல ப்ரசசனைகள் தாண்டி இரண்டு வருடம் முன்னம் தான் நடந்தது... இப்போ கூட ஒரு வயசு ஆகப்போகுது அவங்க பையனுக்கு....அறிவு....ஏதோ சொல்ல வந்தவன் பேச்சை மாற்றினான்.

"என் கல்யாணம் கூட இரண்டு மாசத்துல.நீங்க கண்டிப்பா வரனும்.இந்தாங்க"

கதிரின் அழைப்பிதழை கையில் பெற்று கொண்டேன்.மனதில் ஆயிரம் கேள்விகள். பயங்கள்.ஏன் வளர்மதி திருமணம் இத்தனை தாமதம்.....அவங்க பையன் என்றால்....அறிவு என்றே ஏதோ சொல்ல வந்தான்...இப்போது என் தருமணம் கூட....அம்மாவின் வார்த்தை காதில் ஒலித்தது..'.ஒரு வேளை அவருக்கு கல்யாணம் ஆகி இருந்தால் அதான் அத்தை பொண்ணு இருக்கே'....தலை சுற்றியது எனக்கு.அடுத்த கேள்வி கேட்க நினைககும் நேரம்....

",சரிங்க நான் கிளம்பறேன்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள். கண்டிப்பா நீங்க என் கல்யாணத்திற்கு வரனும்."புன்னகை பூத்தான்.விடை பெற்றான்

கதிரின் சந்திப்பு எனக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.பல நினைவலைகள் கொடுத்தது.ஆழ்மனதில் புதைத்து அதன் மீதுஒடிக்கோண்டிருந்த என்னை புரட்டப்போட்டது."அறிவு அறிவு "மனம் துடித்தது. என்னை மறந்தானா.வளர்மதி கரம் பிடித்தானா?சூழ்நிலை என்பானா?என் தவம் அவன் அறிவானா.அவனுங்காக காததிருப்பது அறிவானா?.கேட்டிருக்க வேண்டுமோ.பல எண்ணங்கள் குழப்பங்கள் என்னை புரட்டி போட்டது.அறிவழகன் சொன்னது போல வாழ்க்கை மாறிவிட்டது மனமும்....?????

சிற்பம் செதுக்கப்படும்

Episode # 08

Episode # 10

Go to En Kathale story main page

{kunena_discuss:1244}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.