(Reading time: 16 - 32 minutes)

"என்ன சிவா புதிர் போடற"

"புதிர் இல்லை கயல்.எந்த அப்பாவுக்கும் தன் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசை இருக்கும் தானே...அது போல தான சார்க்கும்"

"என்ன சொல்ல வர சிவா"

"நேரவே சொல்லறேன்.நான் உன்னை கல்யாணம் செய்ய ஆசை படறேன்.காதலான்னா தெரியாது .உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் நல்ல தோழி நீ இந்த நட்பு காதலா மாற எல்லா வாய்ப்புகளும் இருக்கு"

"சிவா விளையாடாதே...போய் வேலையை பாரு"

"கயல் விளையாட்டில்லை.உண்மை"

"சிவா எப்போ இருந்து இந்த எண்ணம்"

"இரண்டு நாள் முன்னாடி?!சார் இந்த ஆண்டுவிழா நிமித்தமா கூப்பிட்டு பேசினார்.அப்போ உன்னை பற்றி தான் நிறைய பேசினார்.உன் வாழ்க்கை இப்படியே போயிடுமோன்னு பயந்தார்.நீ காத்திருப்பது பலன் தருமான்னு வருந்தினார்.உடனே எனக்கு இந்த எண்ணம் வந்தது. உன்னை யாரும் இழக்க விரும்பமாட்டாங்க கயல்.நான் எப்போதும் உன்னுடனேயே இருகக விரும்புகிறவன் தான்.உன்னை யபற்றி எல்லாம் தெரிஞ்சவன் தான்.நான் ஏன் உன் கூட வாழ்க்கை துணையா நடைபோட கூடாதுன்னு தோணிச்சு.நீ என்ன நினைங்கிற கயல்"

"சிவா என் அப்பா வருத்தய் நியாயம் தான் ஆனால் என்னால என் அறிவழகனை மறக்க முடியவில்லை. நான் நிறைய மாறிட்டேன்.என் அப்பா தான் முழு காரணம்.நான் காதல் தோல்வி அரடையலை சிவா காத்திருக்கேன் காத்திருப்பேன் அவ்வளவு தான்.இது வீம்பு இல்லை ஈகோ இல்லை. என்னால் அவரை மறக்கவே முடியலை.அவர் எங்கோ போயிட்டர்ன்னு தோணலை.என்னுள்ள அவரை இறக்கிட்டேன்.அவரை என்னிமிருநது பிரிககவே முடியாது சிவா.நாங்கள் நிஜத்தில் சேர்வது சேராதது ஒரு விஷயமே இல்லை."படபடவென பொறிந்துவிட்டுவிலகி சென்றேன்.

சிவாவின் எணணம அறிந்தபின் இத்தனை நாட்களாய் சுதந்திரமாய் பறக்கவிட்ட என் குடும்பம் ஏனோ சில நாட்களாய என்னை இரணப்படுத்தியது.ரகு ஒரு பக்கம் கண்ணன் ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் என என்னை தாக்கிக்கொண்டிருந்தார்கள்.

"எவ்வளவு நாள் கயல் உன்ககே ஓவரா இல்லையா"இது ரகு

"சிவா நல்லவரு கா.எனக்கு புடிச்சிருக்கு நீ ஏன் வேண்டாங்கற"இது பொடியன் கண்ணன்

"என்னடி இது.சிவா தம்பிக்கு என்ன குறை.நீயும் ஏதோ ஆசைபட்ட.அவர் வெளிநாடு போயிட்டார்.எப்போ வருவார் தெரியலை.என்ன நிலைமை தெரியலை.ஒரு வேளை அவருக்கு கல்யாணம் ஆகி இருந்தா?அவர் அத்தை பொண்ணு ஒன்று இருக்காளே.....நீ இப்படி இருக்கிறது நல்லாவா இருக்கு.எத்தனை நாள் காத்திருப்ப.இது நாடகம் இல்லை. வாழ்க்கை"அம்மாவின் ஆதங்கம்.

"கயல் கண்ணா!உன்னை வற்புறுத்தலை ஆனால் யோசனை பண்ணு.நிதானமா.ஒரு வேளை அறிவழகன்......நான் எதுவும் சொல்லல.ஆனால் உன் விருப்பம் இல்லாமல் அப்பா எதுவும் செய்ய மாட்டேன்."

"அப்பா நீங்களுமா பா.உங்களுக்கு என் மனம் புரியலையா பா.எல்லருக்குமா சேர்த்து சொல்றேன்.என் அறிவழகனுக்காக காத்திருப்பேன் எவ்வளவு நாள் ஆனாலும்.அவர் என்னை மறக்கமாட்டார்.மாறமாட்டார்.நான் நம்பறேன்.உங்களுக்காக நான் என வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது.அவரை தவிர என் மனசு வேறு யாரிடமும் ஈடுபடாது அவ்வளவு தான்"விம்மி அழுதேன்.

என் பேச்சு அந்த சூழலை சற்று தணித்தாலும் என் அம்மவின் ஆதங்கம் குறைவதாய் இல்லை. ஏதோ கோபம் காட்டினாள்.எப்போதும் குத்தி பேசினாள்.திடீரென அழுதாள்.என்னை உச்சி முகர்ந்து கொஞ்சினாள்.கெஞ்சினாள்.அவளுககு புரியவைக்க முடியவில்லை. என் முடிவிலும மாறறம இல்லை.பாவம் அவள்.இது வீண் பிடிவாதம் என்பது அவள் முடிவு.இந்த மூன்றாண்டாய் தவித்து தான் போனாள்.அவளை நான் மிகவும் கஷ்டப்படுத்தினேன்.அவளை சிறிது சமாதானம் செய்யவே ரகு-பாரதி திருமணம் நடந்தது. பாரதி எங்கள் வீட்டின் செல்ல மறுமகள்.எங்கள் குடும்பத்தின வரம் எனலாம்.அமுதன் என்ற அழகான செல்வததின் அத்தை ஆனேன்.கூட்டுக்குடும்பத்தின் அழகு அனுபவித்தேன்.அமுதன் தான் பல முறே என் அம்மாவின் அருமருந்து.பாவம் அவள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"கயல் கண்ணா....ஓடிப்போச்சு ஐந்தாம்ஆண்டு விழாவந்தாச்சு.இப்போ மையம் பொரிது பண்ணியாச்சு...உனககு இந்தவிழா எப்படி பண்ணணும ஆசை சொல்லுமா"

"அப்பா இப்போ நம்ம மையத்தில நூறு குழந்தைகள் இருக்காங்க.இந்த வருஷ விழாவிற்கு ஆசிரியர்களுக்கு ஏதாவது செய்யனும் அப்பா.அவங்களுக்கு உற்சாகம் கொடுக்கனும் ...அவங்க செயலுக்கு நன்றி சொல்லும் விதமாயும இருக்கனும்.அதோட நம்ம பட்டாம்பூச்சியோட  அம்மாக்கள் குழு ஒரு நிகழ்ச்சி தர விருமபறாங்க பா"

"ஒ உங்க சங்கமா"

"ஆமா பா ...அடுத்த வாரம் கூட நாங்க மாற்றுதிறனாளர் ஹோம் போறோம் அங்க இருக்கிற  திறமையாளரை நம்ம மையத்தில் மயிற்ச்சி கொடுக்க வேண்டுகோள் வைக்கப்போறோம்"

"நல்லது மா.அப்படியே பணணலாம்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.