Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகா - 5.0 out of 5 based on 7 votes
Pin It

தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகா

en vazhve unnodu thaan

காலையில் அவசரமாக யாமினி உறங்கிக் கொண்டிருந்த ஆதித்யவர்மனை எழுப்பினாள்.

”ஆதி எழு ஆதி” என கத்த அவனும் உறக்கம் கலைந்து மெல்ல கண்களை கசக்கிக் கொண்டு எழுந்த ஆதி தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவளைப் பார்த்து

”என்ன இங்க உட்கார்ந்திருக்க”

”ஏன் நான் உன் கூட இருக்க கூடாதா” என ஆசையாக பேசியபடியே அவனது தோளில் சாய்ந்துக் கொண்ட யாமினியைக் கண்ட ஆதியோ

”ஆமாம் 5 வருஷமா நான் வாழ்ந்தது ஒரு வாழ்க்கையா சரி நீ வந்த உன்கூட சந்தோஷமா வாழலாம்னு பார்த்தா உன் அக்காங்க பிரச்சனையை சரிசெய்ய என்னை இங்க கூட்டிட்டு வந்த, நான் பாவமா தெரியலையாடி பாரு உன் அக்காங்க வரிசையாக கிளம்பறாங்க, அவங்க புருஷன்களும் சந்தோஷமா அவங்களை பார்த்துக்கறாங்க இவ்ளோ செஞ்ச எனக்கு நீ என்ன செஞ்ச சொல்லு, உங்கப்பா பேச்சை கேட்டு என்னை நீ இப்படி தள்ளி வைச்சிட்ட”

”இல்லை ஆதி நான் கூட அப்பாகிட்ட காலையில கேட்டேன் ஆனா, அப்பாதான் கல்யாணத்துக்கு அப்புறம்தான் எல்லாம்னு சொல்லிட்டாரு”

”ஓ அப்ப நீ உங்கப்பா பேச்சை கேட்கற சரி, இங்க ஏன் வந்த, கிளம்பு போ என்கிட்ட வராத” என ஆதி கத்தவும் உடனே யாமினி

”ப்ளீஸ் ஆதி கோச்சிக்காத நான் பாவம் இல்லையா”

”நீயா சத்தியமா இல்லை உன் புருஷனை இப்படி பட்டினி போட வைக்கிறியே, நீயெல்லாம் ஒரு பொண்டாட்டியா”

”ஷ் சத்தமா பேசாத யார் காதுலயாவது விழப்போகுது”

”ஓ இது வேறயா ஆமாம் சாமி தப்புதான் நீ கிளம்பு”

”ஆதி ப்ளீஸ் இப்படி என்னை விரட்டாத எனக்கு கஷ்டமாயிருக்கு”

”உன்னை இப்படி பக்கத்தில வைச்சிக்கிட்டும் எதுவும் செய்யாம இருக்க எனக்கும் கஷ்டமாதான் இருக்கு, இப்ப நீ கிளம்பறியா நான் குளிக்கனும்”

”நான் உனக்கு உதவி செய்யட்டுமா ஆதி”

”ஒண்ணும் வேணாம் ஆமா வீட்ல மகா இருக்காளா போய்ட்டாளா”

”அக்கா, அப்பா சத்யன், குணசீலன் 4 பேருமே கம்பெனிக்குப் போயிருக்காங்க”

”டைம் என்ன”

”12”

”ஷ் யப்பா இன்னிக்கும் லேட்டா, சரி ஏன் மகா இன்னும் மாமியார் வீட்டுக்கு போகாம இருக்கா, நேத்து என்கிட்ட இன்னிக்கு காலையில போறேன்னு சொன்னாளே”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”ஆமா ஆதி அக்கா போகதான் போறாங்க ஆனா ,சத்யனை கம்பெனிக்கு எம்டியாக்கிட்டு போறாங்களாம்”

”அப்ப குணசீலன்”

”அவரை ஏதோ ஒரு டிபார்ட்மெண்ட்ல போடப்போறாங்களாம் பேசிக்கிட்டாங்க ஆனா எனக்குச் சரியா விவரம் தெரியலை”

”அப்படியா அப்ப வீட்ல யார் யார் இருக்கா”

“நான் இருக்கேன்”

”உன்னை யார் கேட்டா வேற”

”அம்மா, வீராக்கா, தனாக்கா, விஜிக்கா”

”ஓ வீரா இருக்காளா சரி அவளை என் ரூமுக்கு அனுப்பு”

”ஓ அவங்களை சமாதானம் செஞ்சி அனுப்பி வைக்கப் போறியா”

”ம் ஆமாம் போ” என சொல்லவும் அவளும் குதூகலமாக வெளியே ஓடினாள்.

ஆதியும் எழுந்து நின்று தூக்க கலக்கத்தில் சற்று தள்ளாடினான்.

யாமினியோட வீட்டு பிரச்சனைகளை சரிபண்றதுக்குள்ள நான் ஒருவழியாயிடுவேன் போல இருக்கே, அப்பா முடியலையே ம் தலை வலிக்குது ஆ” என அவன் கத்தவும் வீரலட்சுமி அறைக்குள் வரவும் சரியாக இருந்தது

”ஆதி ஏன் கத்தற, என்னாச்சி” என்றாள் கவலையாக. அவளை பார்த்த ஆதி

”தலைவலிக்குதும்மா முடியலை”

”தைலம் தரவா”

”உன் புருஷன் எங்க”

”அவரு வெளிய போயிருக்காரு”

”சந்தோஷம் அங்க அலமாரியில என் துணி இருக்கும் கொண்டா” என சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் செல்ல வீராவும் அவனது துணியை எடுத்தாள். அவளுக்கு புரியவில்லை அவள் உடனே

”ஆதி இதுல எந்த வேட்டி எடுக்கட்டும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரம்யாவின் "என் காதலே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”வெள்ளை வேட்டிதானே இருக்கு, ஏதோ ஒண்ணு எடு”

”சட்டை எது எடுக்கட்டும்”

”ஏதோ ஒண்ணு எடும்மா”

”வேற என்ன தேவை”

”பனியன் எடு, ஜட்டி எடு”

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாsasi 2019-02-26 20:33
ஐ! ஆதர்வ் நான் ஆதியை அங்கிள் ஆக்கலை ஓகேவா அவனா அப்படி பொய் சொல்லி நடிக்கறான் எதுக்குன்னு அதான் உங்களுக்கே தெரியுமே வயசுக்கென்ன கூடகுறைச்சல் இருக்கும் விடுங்கப்பா குடும்பம் ஒண்ணு சேர்த்தான்னா அதுதானே முக்கியம். அப்புறம் ஆதர்வ் உங்க கமெண்ட் லவ்லி சூப்பர் அவசரப்படாதீங்க அடுத்த எபியில ஒரு ட்விஸ்ட்வைச்சிருக்கேன். அடுத்த எபியை படிச்ச பின்னாடி உங்க கமெண்ட்க்காக நான் ஆவலா காத்திருப்பேன்.நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாsasi 2019-02-26 20:30
நன்றி தோழிகளே மதுமதி, மகி, ராணி, விஜி உங்க கமெண்ட்லாம் சூப்பர் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாராணி 2019-02-25 18:30
கலக்கிட்ட ஆதி கதை விருவிருப்பாக செல்கிறது. அருமை
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாvijayalakshmi 2019-02-25 18:27
aadhi kalakkal super epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாAdharvJo 2019-02-25 13:57
:cool: epi ma'am innum oru wicket gali :dance: Mano's concern is genuine anyway veera purinjikitanga, so cool.
Good Yam's said abt her love towards Adhi :grin: to Dhana....Aadhi irundhalum yam's oda patince rombha test panuraru :D BTW indha 7 akkakalum aadhi-a vida chinnavangala :Q: :eek: pavam adhi-a uncle ah mathitingale madam ji facepalm interesting update :clap: :clap: next week dhana oda vera yaroda wicket vilumn therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாmahinagaraj 2019-02-25 12:41
பயங்கரம் தோழி... :clap: :clap:
உண்மை தான் ஆதி ஆம்பளை தான்.. :hatsoff: ரொம்ப அழகா இருக்கு..
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாmadhumathi9 2019-02-25 05:52
:clap: :clap: ovvoru pirachinaiya theervu kandu varum aadhi (y) :clap: nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top