Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (7 Votes)
தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகா - 5.0 out of 5 based on 7 votes

”இங்கயும் நீங்க இரண்டு பேரும் சண்டைதான் போடனுமா வாங்கப்பா லேட் ஆகுது” என வந்தவன் கத்தவும் ஆதி வீராவிடம்

”வீரா மனோ சொல்றது சரிதான், உள்ள என்ன பிரச்சனைன்னு தெரியாம போய் மாட்டிக்கிறது தப்பு, நீ இங்கயே இரு நான் போய் பார்க்கறேன் பிரச்சனை இல்லைன்னா உன்னை கூப்பிடறேன் வந்து பாரு”

”இல்லை ஆதி பரவாயில்லை நானும் வருவேன்” என அவள் அடம்பிடிக்கவும் மனோ தலையில் அடித்துக் கொண்டான், ஆதி அனைவரையும் அழைத்துக் கொண்டு அந்த பங்களா பக்கம் சென்றான். வீரா, மனோ, அந்த கேமராக்காரன் பதுங்கி பதுங்கி வர ஆதி மட்டும் எந்த பயமும் இன்றி வேகமாக நடந்துச் சென்றான்.

வீராவோ ஆதியை அழைத்தாள்

”ஆதி ஒளிஞ்சி ஒளிஞ்சி போகனும்”

”ஏன் நாம என்ன தப்பா செய்யறோம்”

”இல்லை ஆனாலும் இப்படி நேரா போனா ஆபத்து”

”இதப்பாரு இப்படி போனாதான் சூப்பரா இருக்கும். பணத்தை உடனே வேற இடத்துக்கு மாத்த முடியாது நீ வா” என அவளது கையை பிடித்து இழுக்க இன்னொரு கையை பிடித்தான் மனோ

”டேய் நீ வேணா போ, அவளை ஏன்டா இழுக்கற, உன்னால அவளுக்கு ஆபத்து வரப்போகுது”

“நான் அவளை கல்யாணம் செஞ்சிக்க போறவன், என்னால அவளுக்கு எந்த ஆபத்தும் வராது”

“என்னது நீயா அப்ப நீ யாமினிக்காக வரலையா”

”நான் எப்படா சொன்னேன் அவளுக்காக வந்தேன்னு, நான் வீராவுக்காக வந்தேன்”

”ஏன் இவளை விட்டா உனக்கு வேற ஆளே கிடைக்கலையா”

”உனக்கு கிடைக்கலயா, அதான் அவள்தான் டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டால்ல அப்புறம் என்ன வேணும் உனக்கு”

”இதப்பாரு வேணாம் அவளை விட்டுடு”

“முடியாது அதை அவள் சொல்லட்டும்” என ஆதி சொன்னான். உடனே மனோவும் ஆதியும் வீரலட்சுமியையே பார்க்க கேமராக்காரன் கத்தினான்

”ஏம்பா உங்க குடும்ப பஞ்சாயத்தை பேச இதுவா நேரம், நடுரோட்ல என்னத்த உங்களோட வாங்கப்பா சீக்கிரம்” உடனே மனோகரன்

”முடியாது இன்னிக்கு எனக்கு தெரிஞ்சாகனும் வீரா, ஏன் இப்படி பண்ற நான் என்ன துரோகம் செஞ்சேன், உன் நல்லதை யோசிச்சிதான் நான் உன்னை இந்த துறையை விட்டு போன்னு சொன்னேன் அது தப்பா”

“எல்லா துறையிலயும் ஆபத்து இருக்கு, அதுக்காக பெண்களை இப்படிதான் அடிமைப்படுத்தி பார்ப்பீங்களோ” என்றான் ஆதி

”ஆதி இது சரியில்லை, நான் அவள்ட்ட பேசறேன் நீ ஒதுங்கு”

”நான் அவளுக்காக பேசறேன், நீ ஒதுங்கு”

”போதும் ரெண்டு பேரும் நிறுத்துங்க” என வீரா கத்த அதற்கு இருவரும்

“முடியாது” என ரெண்டு பேரும் சத்தமாக கத்தவும் அந்த பங்களாவில் இருந்து ஒருவன் எட்டிப் பார்த்து கத்தினான்

”யோவ் யார்யா அது புருஷன் பொண்டாட்டி பிரச்சனையை வீட்டுக்குள்ள வெச்சிக்காம நடுரோட்ல என்னத்த போங்க அந்தப் பக்கம்” என அவன் கத்தவும் கேமராக்காரன் அங்கிருந்த புதருக்குள் டக்கென ஒளிந்துக் கொண்டான், அதை கவனியாமல் மனோ அவனிடம்

”டேய் உன் வேலையை போய் பாருடா, இது என் குடும்ப விசயம் நீ இதுக்குள்ள வராத” என கத்தவும் ஆதி மனோவிடம்

”இப்ப எதுக்கு அந்தாளு மேல கோபமா கத்தற, போ அந்தப்பக்கம் இவள் எனக்குதான்” என கத்தவும் மனோ

”இல்லை இவள் எனக்குதான்” என கத்தவும் பங்களாவிற்குள் இருந்தவன் மற்றொருவனிடம்

”நடுரோட்ல ரெண்டு பேர் ஒரு பொண்ணுக்காக அடிச்சிக்கிறானுங்க சே” என அலுத்துக் கொண்டான்

”பொண்ணு அழகாயிருக்கா அதான் சரி வா, நாம ஒரு பக்கம் நின்னு வேடிக்கைப் பார்க்கலாம்” என பங்களாவை விட்டு வெளியே வந்து வீராவின் பக்கம் நின்றவர்கள்

”என்னம்மா குழப்பமா இருக்கா யாரை செலக்ட் பண்றதுன்னு, நாங்க 2 பேரும் இருக்கோம், இவங்க வேணாம் எங்களுக்கு நீ ஓகே சொல்லு” என அவர்கள் சொல்லி ஒருமாதிரியாக சிரிக்கவும் வீரா கோபமாக மனோவிடம்

”பார்த்தியா உன்னாலதான் என் நிலைமை இப்படி ஆயிடுச்சி, என்னை அவமானப்படுத்தனும்னே வந்தியா நீ”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இல்லை சத்தியமா இல்லை நீ வேற” என மனோ புதிதாக வந்த இருவரிடம்

”பாஸ் இது எங்க பேமிலி மேட்டர், நீங்க உள்ள வராதீங்க”

“இதப்பார்றா பேமிலி மேட்டர்னா ரோட்லதான் டிஸ்கஸ் செய்வீங்களா”

”சாரி பாஸ் நாங்க கிளம்பறோம், வீரா வா போலாம்”

”முடியாது மனோ”

Add comment

Comments  
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாsasi 2019-02-26 20:33
ஐ! ஆதர்வ் நான் ஆதியை அங்கிள் ஆக்கலை ஓகேவா அவனா அப்படி பொய் சொல்லி நடிக்கறான் எதுக்குன்னு அதான் உங்களுக்கே தெரியுமே வயசுக்கென்ன கூடகுறைச்சல் இருக்கும் விடுங்கப்பா குடும்பம் ஒண்ணு சேர்த்தான்னா அதுதானே முக்கியம். அப்புறம் ஆதர்வ் உங்க கமெண்ட் லவ்லி சூப்பர் அவசரப்படாதீங்க அடுத்த எபியில ஒரு ட்விஸ்ட்வைச்சிருக்கேன். அடுத்த எபியை படிச்ச பின்னாடி உங்க கமெண்ட்க்காக நான் ஆவலா காத்திருப்பேன்.நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாsasi 2019-02-26 20:30
நன்றி தோழிகளே மதுமதி, மகி, ராணி, விஜி உங்க கமெண்ட்லாம் சூப்பர் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாராணி 2019-02-25 18:30
கலக்கிட்ட ஆதி கதை விருவிருப்பாக செல்கிறது. அருமை
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாvijayalakshmi 2019-02-25 18:27
aadhi kalakkal super epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாAdharvJo 2019-02-25 13:57
:cool: epi ma'am innum oru wicket gali :dance: Mano's concern is genuine anyway veera purinjikitanga, so cool.
Good Yam's said abt her love towards Adhi :grin: to Dhana....Aadhi irundhalum yam's oda patince rombha test panuraru :D BTW indha 7 akkakalum aadhi-a vida chinnavangala :Q: :eek: pavam adhi-a uncle ah mathitingale madam ji facepalm interesting update :clap: :clap: next week dhana oda vera yaroda wicket vilumn therindhu kola waiting. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாmahinagaraj 2019-02-25 12:41
பயங்கரம் தோழி... :clap: :clap:
உண்மை தான் ஆதி ஆம்பளை தான்.. :hatsoff: ரொம்ப அழகா இருக்கு..
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 17 - சசிரேகாmadhumathi9 2019-02-25 05:52
:clap: :clap: ovvoru pirachinaiya theervu kandu varum aadhi (y) :clap: nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top