(Reading time: 16 - 32 minutes)

நிஜத்தில் எனக்காகவே ஒரு புது அத்தியாயம் எழுத ஆரம்பித்தார் அப்பா."பட்டாம்பூச்சி"என்ற ஒரு மையம்.சிறுவர்களுங்கு பாட புத்தகம் தாண்டிய இன்னம் பல கலைகள் வளர்த்து கொள்ள ஒரு மையம்.இசை நாடகம் வாத்தியங்கள்,பேச்சுதிறன என்று பல கலைகளின் சங்கமம் இந்த கலைகூடம்.முழுக்க முழுக்க சிறுவர்களுக்கான சோலை.இதில் ஏற்கெனவே பதினைந்து மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.இது எப்போது நடந்தது என்றே புரியவில்லை எனக்கு.

"கயல்இது என் கனவு என் கனவின் ஒரு பாதிநிஜம் ஆனது.வெறும் பணத்திற்காக இயங்குகிற இயக்கமா இல்லாமல் கலைகளை குழந்தைகளிடம் சேர்க்கும் கோயில் இருககனும்.இதுல நீ பெரும் அங்கமாய் இருப்பது என்க்கு மகிழ்ச்சி கயல்.இதை வளர்ப்பது இனி உன் பொறுப்பு.உன் அப்பா கனவு நீ நிஜமாககுவியா மா?"

ஆதரவாய் என் கன்னம் தொட்டார்.அப்பா அவர் உள்ளங்கை உஷ்ணத்தில தான் எத்தனை பாசம்..எத்தனை நம்பிக்கை.

"கண்டிப்பா பா ஆனா நிர்வாகம் எதுவும் தெரியாதே..."

"வாம்மா.....இவர் தான் சிவராமன்.நம்ம அமைப்பு செயலாளர். நம்ம யாதவ் நண்மர தான்...சிவா....இது கயல்விழி என் பொண்ணு.இனி நீங்க தான இந்த பட்டாம்பூச்சி மையத்தை மேல கொண்டு வரனும்."

"நிச்சயமா"ஒரே குரலில் நானும் சிவாவும்.

இவ்வளவு நாள் நான் எங்கிருந்தேன்.இப்படி ஒரு மையம் அமைத்து அதன் நிர்வாகத்திற்கு ஆள் ஏற்பாடு செய்து இடம் தேர்வு செய்து குழந்தைகள் சேர்க்கை ஆசிரியர் சேர்க்கை...எதுவுமே அறியாமல் ஏதோ உலகத்தில் உலவி கொண்டிருந்தேன்.பணி ஓய்வு பெற்றாலும் அப்பாவின் கனவு அவரை எவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.என் அம்மாவின் திறமையையும் அவர் கலையையும் வெளிகொணர ஒரு சந்தர்ப்பம் அமைத்தார் அப்பா.

சில நேரங்களில் என்னையே நான் நொந்து கொண்டேன்.அப்பா அம்மாஅரவணைப்பு ரகுவின் பாசம் கண்ணணிடம் சின்ன சின்ன வம்புகள் எல்லாம் மறக்க செய்தது அறிவழகன் மீதான் காதல்.அவனை என் வாழ்வில் நுழைந்தபின் எல்லாம் அவனை.அவனை தாண்டி எதுவும் காண மறுத்தேன்.நல்ல உறவுகளோ நல்ல விஷயங்களோ என்றுமே நம்மை சுற்றி இருந்துகொண்டு தான் இருக்கிறது.திறந்த மனமும் கடிவாளம் போடாத பார்வை மட்டுமே இருந்தால் போதும்.இவை நான் அனுபவிக்க முடியும்.சிவா வும் அப்படி தான்.சிறு வயதுமுதல் என் உற்றதோழன் என்ற இடம் பிடித்தவன் யாதவ் மட்டுமே. அவனின் இடத்தை தொட்டவன் இப்போது சிவா மட்டுமே. சிவா மிக இயல்பானவன்.இந்த நொடிவாழ்பவன்.மனதில் எதையும் மறைக்கத்தெரியாதவன்.தோன்றும் எண்ணங்களை உடனே கேட்டுவிடுவான்.நேர்மறை எண்ணங்களின் ஒட்டுமொத்த கூட்டணி அவன்.நிர்வாகத்தில் படு கெட்டிகாரன்.எவரையும் நிற்க் வைத்து கேள்விகேட்பவன்.ஆனால் என்னிடம் மட்டும் ஏனோ தென்றலாய் இருப்பான்.

பல நேரங்களில் என் தனிமைக்கு துணை ஆனான்.அவனுடன் பல மணிநேரம் எதுவும் பேசாமல் என் நிழலாய் பாதுகாப்பாய் வந்தான்.நான சிவா யாதவ் கூட்டணி சேர்ந்தால் அந்த வானம் கூட அதிரும்.அத்தனை அரட்டை அத்தனை சிரிப்பு அத்தனை கிண்டல்.என் மாறுதல் அனைவருக்கும் மகிழ்ச்சி யே.பட்டம்பூச்சி எங்கள் கையில் அழகாய் சிறகடிக்க தொடங்கியது.அதன மூலம் எனக்கு கிடைத்தது பல நல்ல அனுபவங்கள் பல மனிதர்களின பரிச்சயங்கள்.நிறைய விஷயங்கள் அறிய வாய்ப்பானது.சில நேரங்களில் தடுமாறி சோர்ந்து பின்வாங்கிய போதெல்லாம் யாதவ் சிவா என்னை உற்சாகமூட்டி உந்துதல் கொட்த்து முன்னைற செய்தது.வாழ்க்கை அழகாக மாறியது.இத்தனை நாள் நான் மறந்திருந்த அண்ணன் பாசம் கண்ணன் குறும்பு அம்மா அதட்டல் எல்லாம் திரும்பப்பெற்றேன்.அறிவழகன் நினைவுகள் வராமல் இல்லை அவன் நினைவுகள் சுடும் போதெல்லாம் தனிமை தந்தது என் குடும்பம்.நாட்கள் நகர்ந்தது.காலை சூரியன் உதயத்தில் பன் மெல்ல கரையத் தொடங்கியது.தோழிகள் சந்தித்தேன்....இரைந்து பாடினேன்.மழையில் நனைநதேன்.... என்னால் ஆன தொண்டுகள் சில செய்தேன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லதா சரவணனின் "காதல் இளவரசி..." - காதல் & மர்மம் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ரகுவின் கைபேசி ஒளித்தேன்.சும்மாயிருக்கும கண்ணனை சீண்டினேன்.. அதட்டும் அம்மாவின்பிடியிலிருந்து சிட்டாய் பறந்தேன்அம்மாவிடமம் திட்டு வாங்கவே குறும்புகள் பல செய்தேன்.்குடும்பத்தின் முகத்தில் அமைதி கண்டேன்.அப்பாவின் மடியில் செல்லம் கொஞ்சி மறுமுறை என் சிறுவயதில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.ஆனால் தனிமையில் அவனின் நினைவால் வாடி கொண்டிருந்தேன்.அவனை காண அவனிடமிருந்து ஏதாவது ஒரு தகவல் வருமென காத்துக்கொண்டிருந்தேன்.நாட்கள் தான ஓடின.

'பட்டம்பூச்சி 'தன் மூன்றாவது ஆண்டில அடியெடுத்து வைத்தது.மூன்றாவது ஆண்டு விழா மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தோம் நானும் சிவாவும்.விழா மேடையில் அப்பா,என்னை பெருமிதம் பொங்க பார்த்துக்கொண்டிருந்தார்.அந்த பார்வையில் என் வாழ்வின் இலட்சியம் அடைந்ததாய் ஆனந்தம் அடைந்தேன்.

"என்ன கயல் என்ன அப்பாவ அப்படி பார்க்கிற?"

"சிவா எங்கப்பா பாரேன்.எவ்வளவு பாசம் அன்பு என் மேல.பெருமையா உட்கார்ந்திருக்காரு.அவர் அன்புக்கு என்ன கைமாறு செய்ய போறேன் தெரியலை"

"கைமாறு எல்லாம் வேண்டாம்.அவர் ஆசை ஒன்று தான் அது நிறைவேற்றினா போதும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.