(Reading time: 17 - 33 minutes)

தலையாட்டிவிட்டு பூஜாவை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன்.கதிரை பார்தது வாழத்து சொல்ல வற்புறுத்தினான் சிவா.மணமகன் அறை நெருங்கும் போது என் இதயம் துடிப்பது என் காதில் கேட்டது.கதவு தட்டினேன்.நல்ல வேளை அவன் இல்லை. மூச்சு வந்தது.

"வாங்க கயல்விழி... உங்க ப்ரண்ட் பாரத்தாச்சா?"

"ஆமாம் கதிர் உங்களுக்கு என் வாழ்ததுகள்.அவளை நீங்க தான் பத்திரமா பாரத்துக்கனும்."

"கண்டிப்பாக...நாம நெருங்கிட்டோம் கயல்விழி"ஏனோ சிரித்தான்.பதிலுககு புன்னகைத்துவிட்டு இதற்கு மேல அங்கு நிற்காமல் சிவா அருகில் வந்து அமர்ந்தேன்.அமுதன் ஓடிவந்து என் மடியில் ஏறிக்கொண்டு கொஞ்சினான்.

"என்ன விஷ் பண்ணியாச்சா...என்ன சொல்றாங்க"சிவா

"அவளுக்கென்ன சந்தோஷமாயிருக்கா...பேசவே முடியலை...."

"கயல் அமைதியா இரு ஏன் இப்படி வேர்ககுது படபடப்பா இருக்க"

என் கைபற்றி அழுத்திகொடுத்தான்.நேரம் ஆக ஆக என் கண்கள அவனை தேடி அலைந்தது.இதயம் காற்று வேலை நிறுத்தம் செய்ததது போல துடித்தது. கல்யாண சத்தஙகள் என் காதில் நின்றது.என் இதயத்துடிப்பு மட்டும் நன்றாய் கேட்டது

"சிவா மூச்சே வரலை...மூசசு நின்னுடும் போல இருக்கு"

"ஏய்...நீ வா அங்க பால்கனி இருக்கு போய் காற்று வாங்கலாம்"

"நீ இரு சிவா...அமுதன் பார்த்துக்கோ...நான் போறேன்.அப்புறம் வரேன்"

மெல்ல நகர்ந்தேன்.

"அப்பாவும் பொண்ணும் இதையே தான் சொல்றாங்க.எத்தனை வருஷம் காத்திருக்கேன்ங்கறா.அவ அண்ணன் கல்யாண ம் ஆகி இதோ குழந்தையும் ஆச்சு.வயசு ஏறுது.நல்ல பையன் பார்த்து வச்சாலும் முடியாதுங்கறா...என்ன சொல்லறது. சில சமயம் இந்த பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கொடுத்து கெடுத்துட்டோம்னே தோனுது"என அம்மாவின் குரல் பின் வரிசையில் யாருடனோ புலமபி கொண்டிருந்தார். என் காயத்தை இரணப்படுத்தியது

"உங்க பொண்ணுக்கு என்னங்க...பார்க்க இலட்ணமா குணமா இருக்கா.உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா..என் பையனனுககு பாரக்கலாமா.மூத்தவன்"

ச்ச்சச எங்கும் எப்போதும் இதே பேச்சு.சலித்து போனது.ஏன் என்னை இப்படி இம்சிக்கிறார்கள்.இவன் வேறு கணணாம்பூச்சி ஆடுகிறான்.என்னை அவனிடமிருந்து பிரிக்க என்ன ஆவல் இவர்களுக்கு. இன்று ஏனோ அழுகை வந்தது.மாடியேறி பால்கனி சென்று நின்றேன்.அழுகை வந்தது.என்ன இது கண்ணாம்பூச்சி. இங்கு நீ நிச்சயம் வந்திருப்பாய்.என்னை சந்திக்க விருப்பம் இல்லையா....பயமா தயக்கமா...வாழ்க்கை எப்படி மாறியிருந்தாலும் ஒருமுறை உன்னை பார்க்க வேண்டும் அறிவு...ஒரு முறை உன் முகம் உன் கை தீண்டல் அது போதும்.நிச்சயம் நீ வேறொருவர் ஆகிவிட்டாய் அது தான் என்னை சந்திக்க தயங்குகிறாய்.பொங்கிய கண்ணீரை கட்டுபடத்தினேன்.பின்னாலிருந்து ஒரு குரல்.

"மிஸஸ்.கயல்விழி!"

என் இதயம் குளிர்விக்கும் அந்த குரல்.திரும்பினேன்.அவனே தான்.அவனை தான்.தேடித்தேடி ஓய்ந்தது இவனுக்காக தான்.இன்று என் கண்நிறைந்த கண்ணீரிலும்  தெளிவாய தெரிந்து தித்திக்கும் முகமும் இவன் தான்.அதே புன்னகை அதே மயக்கும பார்வை.என் அறிவழகன் என் காதலன் என் உயிர் நிறைந்தவன் உயிர் நிறைத்தவன்

"அறிவு"ஓடிச்சென்று கட்டியணைத்து முத்தாட எண்ணினேன்.சற்று சுதாரித்து கொண்டேன்.அவன் என்னவனா?நான் மாறியதாய் நினைத்தானோ.ஏன் மிஸஸ்கயல் என்றான்.நான் காத்திருப்பது  தெரியாதோ?இல்லை காக்கமாட்டேன் என்றே நினைத்தானோ.

அவன் மேல் கொண்ட காதலினும் அவனை பிரியவிட்டு தந்த வலி முன் வந்தது.இத்தனை நாள் என்னை பிரித்து வைத்து எத்தனை வேதனை தந்தான்.வாடச்செய்தான்.இவனுக்கென்ன என் அனணப்பு.என்னை பரிதவிக்க விட்டவன் அவனுக்கென்ன முத்தம்.அவன் அழைப்பில் ஏன் ஒரு நாய்குட்டியாய் ஓட நினைக்கிறாய் மனமே...கோபம் கொப்பளிக்க

"எப்படி இருக்கீங்க மிஸ்டர்.அறிவழகன்"

"நான் நல்லா இருக்கேன் கயல்விழி ..உங்களுக்கு வாழ்த்துகள்.உங்க பட்டாம்பூச்சி பற்றி கதிர் நிறைய சொன்னான்"

"அது மட்டும் தான் சொன்னாரா"

நீ...ண்..ட....மௌனம்.

"உங்களுக்கு ம் வாழ்த்துக்கள் அறிவழகன்.வாழ்க்கையில் செட்டில் ஆகிடிங்க"

"ம்ம்ம் ஆமா யாரந்த குட்டி பையன்"

"அமுதன்...என்....என் பையன்"அவனை தூண்டிவிட்டேன்

"உங்க உங்க பையனா?"அவனில் அதிர்ச்சி என்னில் ஒரு திருப்தி

"ஆமா என் பையன்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

(RR) பிந்து வினோத்தின் "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"ஓ...உங்க ஹப்பி"

"அது அது சிவா என் பக்கத்தில் இருந்தாரே அவர் தான்."

"அவரை பார்க்கலாமா அறிமுகம் கிடைக்குமா"

"நீங்க ஏன் அவரை பாரக்கனும்"

"உங்களை இவ்வளவு சந்தோஷமா வச்சிருக்காரே அதான்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.