(Reading time: 17 - 33 minutes)

"கயல்விழி என் கண்ணழகி உன்னை இன்னும் நிறைய காதலிக்கனும் அதுக்கு என்னோட என் மனைவியா என் கைகோர்த்து வாழ்க்கை பயணம் வர சம்மதமா..."

"முழு சம்மதம் காதலா"

ஏந்திய என் முகத்தில் படபடக்கும் என் கண்கள் கவிழ இதயத்துடிப்பு பல மடங்கு ஏற என் மூச்சுக்காற்றும் அவன் மூச்சக்காற்றும் மோதிக்கொள்ள பிரிந்துநின்ற என் இதழ்களை அவன் இதழ்கள் கொண்டு சேர்த்தணைத்தான்.

கெட்டி மேளம் கொட்டியது...டும் டும்டும்.

இப்படி தாங்க நான் என் காதலை சேர்ந்தேன்.காதலர்களா இருந்த நாங்க கணவன மனைவியா ஆனோம்.அந்த முதல் அடி எடுத்து வைத்த போது எங்களுக்குள் நிறைய வேற்றுமைகள் ஊடல்கள் சிக்கல்கள் சண்டைகள் எல்லாம் தலையெடுத்தது.ஆனால் ஒரு விஷயம் மட்டும் எங்களை இனைத்தே வைத்தது. அது காதல். எங்கள் பிரிவின் போது எங்களுக்கு ஏற்ப்பட்ட வெறுமை.அது எங்களை இன்னம் நெருங்க செய்தது.பல பேர் என்னை கேட்ட கேள்வி ஏன் சிவா கூட கேட்டிருக்கான்...இவ்வளவு ஆழமான காதல் உங்களுடையது ஆனால் அறிவு ஏன் உன்னை காத்திருக்க சொல்லாமல் பிரிஞ்சார் என்று.

இந்த கேள்வி அவ்வப்போது எனக்குள் வரும் .அவரிடம் கேட்பேன்.அவர் புன்னகை மட்டுமே தருவார்.எங்கள் திருமணம் அன்று என் அப்பாவையே கேட்டேன்.

"கயல் உனக்கு அறிவு பற்றி தெரியும்உன்னை பிரிச்சி வைக்க ஒரு அழுத்தமான காரணம் இலலையேன்னு கேட்கிற..அதை தெளிவு படுத்தறேன்."

என்று அவர் அந்த நாளை நினைவு கூர்ந்தார். சிறுவர பூங்கா.அறிவு என் கையில் இட்ட முத்தம். அவன் சென்ற திசை பார்த்து சிலையாய் நான்....என் அப்பா வரும் வரை வாசலில் காத்திருந்து என்னை ஒப்படைத்து சென்றான்.அன்று

"என்ன அறிவழகன் இங்க நிற்கறீங்க...கயல்?"

"உள்ளே இருக்கா மாமா....நீங்க வந்ததும் உங்க கிட்ட கொஞ்ச பேசனும்னு தான் வெயிட் பண்றேன்.அதோட கயல் இப்படி இடிஞ்சிருக்க தனியா விட்டு போக முடியலை மாமா"

"என்னாச்சு"

"மாமா கயல் உங்ககிட்ட எல்லாம் சொல்லியிருப்பா.என் முடிவில் நான் தெளிவா இருக்கேன்.இப்போ பிரிவது தான் சரி மாமா"

"ஏன் அறிவு இந்த முடிவு..அவ உங்களுக்காக காத்திருப்பது என்ன தவறு...இல்லை நீங்க நிரந்தரமா"

"இல்லை மாமா கயல் ஒரு வரம் அவளை நிரந்தரமா பிரிய நினைக்கலை...ஆனால் நாங்க சேர்வது காலத்தின் கையில்"

"புரியலை"

"இன்னைககு நீ எனக்காக காத்திருன்னு சொன்னா அவ அதை மட்டுமே புடிச்சிட்டு அது மட்டுமே தன் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிடுவா.அதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு காதல் வந்த பிறகு அவளுக்கு என் நினைவு மட்டும் தான்.அது தப்பில்லை. அது வரம் ஆனால் அவளோட சுயம் இழக்க ஆரம்பிச்சுட்டா,"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"எதை வச்சி இப்படி சொல்றீங்க.ஒவ்வொரு பெண்ணும் இப்படி தான் அறிவு நமக்காக எதையும் செய்வாங்க.அவ  அவங்க அம்மா போல...இது வரம் தானே"

"சரி மாமா..அத்தை யோட திறமைகள் அவங்களுக்குன்னு ஒரு அடையாளம் இதை பற்றி நீங்க யோசிக்கலேயா...."

"கண்டிப்பாக அறிவு அவள் தன்னை முடக்கிக்காம இருக்கதான் நான் சில ஏற்பாடுகள் பண்றேன்"

"அதே தான் மாமா நானும் பண்றேன்.கயல்விழியோட கனவுகள் நிறைய சொல்லியிருக்கா.ஒரு கிராம தத்தெடுமப்பு,ஒரு குழந்தை படிப்பு தத்தெடுப்பு மாற்றுதிறனாளர் சேவை...பாடல் உலகில் சாதனை இன்னம் எவ்வளவோ...ஆனால் இப்போது அவள் மனதில் இருப்பது அறிவு அறிவு அறிவு.நான் பேசும்போதெலலாம் அவள் காட்டும் ஆரவம் செயலில் இல்லை. என்னை தாண்டி எதுவும அவள் யோசிப்பதுஇல்லே.ஏன் அவள் நண்பர்கள் கூட பேசுதவது கூட இல்லை. ஏதோ தனி உலகில் நான் மட்டும் தான் என்று இருப்பது எனக்கு உறுத்தல் மாமா.என்னையே நினைக்கும் காதலி வரம் தான்.ஆனால் சாதிக்க பிறந்த ஒரு தேவதையை காதல் என்ற பெயரில் சிறைபடுத்த விருப்பமில்லை.இதனாலேயை என்னோடு என் சுமை தூக்க நான் விருப்பப்படலை மாமா.

இன்னொரு விஷயம் இயலாமையில் இருக்கிற என் பெற்றோர்கள் மீறி என்னால் எவ்வளவு போராட முடியும் தெரியாது.வளர்மதி புகபபோற வீட்டில் இருந்து சில சம்பந்தங்கள் வந்து கொண்டிருக்கு.நிலைமை கை மீறலை.ஆனால் இதே நிலை நீடிக்குமா தெரியலை.நான் என் கயல்விழி காதலை மறக்கமாட்டேன்.ஆனால் காலம வேற ஏற்பாடு பண்ணா..என் கயல் கதி.நிலையில்லா இந்த சந்தர்பததுல அவளை பலிஆடு ஆக்க முடியாது.என் பிரிவு அவளை புரட்டி போடும்.ஆனால் நீங்க உங்க அன்பு அவளை வெளியே கொண்டு வரும் என்றே நம்பறேன்.காதல் தாண்டி வாழ்க்கை இருக்குன்னு அவ யோசிக்கனும். கயல்விழி அறிவழகன் என்றோ கயல்விழி இராமசநதிரன் என்றோ இல்லாமல் கயல் கயல்விழி யா இருக்கனும் மாமா.அவ நிச்சயம் எனக்காக காத்திருப்பா எனக்கு தெரியும் அவள் காதல் ஆழம் தெரியும் மாமா.எத்தனை நாள ஆனாலும் அவள் மனசில் நான் தான் இருப்பேன்.ஆனால் அவ சுயம் இழக்ககூடாது அதுக்கு தான் இந்த பிரிவு.நம்ம நம்பிக்கை வேறு காலம் எழுதுவது வேறு.கயல் என் வாழ்வில் மறுபடி கிடைச்சா நான் தான் அதிர்ஷ்டசாலி மாமா. நான் வரேன்.நம்ம கயல் ல பத்திரமா பாரத்துக்கோங்க"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.