(Reading time: 17 - 33 minutes)

இதை என் அப்பா கூறக்கூற என் கண்ணில் நீர் கோர்த்தது.எனக்காக இத்தனை யோசிக்கும் ஒருவனா அறிவு.அவன் சொன்னது எத்தனை உண்மை அவன் பிரிவில் அதை நான் உணர்நதேனே.அவன் பிரிவு எத்தனை கற்றுகொடுத்தது.என்னை முன்னேற்றியது.

"அது மட்டுமல்ல கயல் கண்ணா...அவங்க அத்தை பொண்ணு வளர்மதி க்கு கல்யாணம் தாமதம் ஆனதும் அவரால தான்.அவங்க வீட்டு பெண்ணிற்கு அறிவை திருமணம் செய்ய சொல்லி வற்புறுந்தி இல்லைனா வளர்மதியை ஏற்க்கமாட்டோம்னு மிரட்டி.யிருக்காங்க.அதுக்கெல்லாம் ஒரே பதில் என் கயல் தவிர என் வாழ்வில் இன்னொருவள் இல்லைன்னு உறுதியா நின்றிருககார்.அவரோட உறுதி புரிஞ்சு கல்யாணம் நடக்க தான் இவ்வளவு தாமதம்.நீ மட்டும் இல்லை கயல் அறிவும் உனக்காக தான காத்திருந்தார்.அறிவழகன் உனக்கு கிடைத்தது உன் வரம் அம்மா...என்றைக்கும் இந்த அன்பு வளர்ந்துகிட்டே இருக்கனும்"

அன்று நிறைந்த உள்ளததோடும் ஆனந்தத்தின உச்சத்தோடும் கர்வத்தோடும் என்னவனிடமிருந்து மனைவி உரிமை ஏற்றேன்.என்னவனிடம் என்னை முழுமையாக கொடுத்தேன்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

எனக்கானவள் நீ காத்திருன்னு சொல்லாம உன் சுயம் தேட உன்னை பிரியறேன் என்று அறிவு சொனனது அவரது இமாலய குணம்.இன்றும் அவர் அப்படி தான்.என்றுமே என் கனவுகளின் என் இலட்சியங்களின் ஊன்றுகோலாய் நின்று என்னை உயர்ததி கொண்டிருக்கிறார். சின்ன சுவற்றுக்குள் பொழுதுபோக்கி கனவுகள் மட்டுமே கண்டு கொண்டிருந்த நான் இன்று இரண்டு பட்டாம்பூச்சி மையததின் நிர்வாகி.எத்தனை உயரம் போக முடிந்தது.

என் அப்பாவின் அன்பும் என் காதல் கணவரின் துணையும் இருந்தால் என்னால் எதையும் சாதிக்க முடியும்.

"கயல்!கயல்"

அவர் தான் என்னை கூப்பிடறார்.வரேங்க.

ஆங் சொல்ல மறந்துட்டேன்.சிவாக்கு போன வாரம் தான் திருமணம் ஆச்சு.ஐயா தேன்நிலவு போயிருக்காரு.வரேங்க.

"என்ன கண்ணம்மா இன்னும் என்ன கதை...நேரமாச்சு"

"வரேங்க...என்ன அவசரம் என்னை பிரியறதுல என்ன ஆர்வம்"

"ஏய் என்னடீ இது..உன் தலை பிரசவம் அம்மா வீடு தானே போற.இது பிரிவா.

ஜுனியர் கேட்டுக்கோ பா.நம்ம ஜுனியர் வரும்போது நான் உன் கூட இருப்பேன்.சரியா பொண்டாட்டி"

"ம்ம்ம்ம ஒழுங்கா நேரத்துக்கு வரனும் இல்லைனா என்னாகும் தெரியுமில"

"தெரியும் தெரியும்.. அம்மாவும் பாபாவும் சேர்ந்து எனக்கு பூசை வைப்பீங்க"

"என்னங்க பயமா இருக்கு நீங்க என் கூடவே இருககனும்"

"கயல் சின்ன வேலை தான முடிச்சிடடு வந்துடுவேன்.எப்பவும் உன்கூட தான் இருப்பேன்.இப்போ கண் கலங்க கூடாது. சின்னகுட்டி அம்மாவ பத்திரமா பார்த்துக்கோங்க...அவ பாடுவா கதை சொல்லுவா..ருசியா சாப்பிடுவா...எல்லாம் இரசிட்டு சந்தோஷமாயிருங்க.அப்பா உங்கள பார்க்க ஓடி வந்திருவேன்.சரியா"

"அறிவு பாபா உதைக்குது பாருங்க..தொட்டு பாருங்க"

"ஏய் சின்னகுட்டி...நல்லா உதைங்க அம்மா வ"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

"அம்மா இந்த வார்த்தை இந்த ஒரு பெரிய வரம் ஒரு பெரிய பதவி உயர்வு கொடுத்திருக்கீங்க இந்த நொடி உங்க கூட பல வருஷம் வாழ்நத நிறைவு தருது"

"என்ன அதுக்குள்ள நிறைவு போட்டுட்டா எப்படி...இப்போ தான் முதல் குழந்தை.இன்னம் மூன்று வேணும் எனக்கு"

"என்ன இன்னும் மூன்றா!என்னால் ஆகாது."

"உன்னால் எதுவும் முடியும் கயல்விழி என் கண்ணழகி"

குறும்பு பாரவையும் வெட்கப்புன்னகையும் கைகோர்ததுக்கொள்ள அறிவழகன் கயல்விழி நெற்றியில் பதித்த ஒற்றை முத்தத்தோடு அவர்கள் வாழ்வில் வசந்தங்கள் பல நிலை கொண்டன.

முற்றும்

Episode # 09

Go to En Kathale story main page

{kunena_discuss:1244}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.