(Reading time: 25 - 50 minutes)

 போய்விட்டு வா .... ஆனால் உன் மனசு கொஞ்சமா சங்கடப் பட்டாலும் நீ உடனே கிளம்பி வந்துகொண்டே இருக்கவேண்டும் நான் சொன்ன மாதிரி மருத்துவருக்கு நான் ஏற்பாடு செய்வேன்.

சரி மா நான் பாத்துக்குறேன் நீயும் உன்ன வரை பார்த்துட்டு வேலையோடு வீட்டுக்குப் போகவேண்டும் சரியா?  தாமதம் ஆச்சி இல்ல நீ எங்கேயாவது தூரமா லாங் டிரைவ் போகலாமென்று அவரைக் கூப்பிட்டுப் போன அப்படி இப்படி என்று எனக்கு தெரியவந்தால்... அப்புறம் பார் நானே மாமா கிட்டச் சொல்லிவிடுவேன் ஜாக்கிரதையா போய்விட்டு ஜாக்கிரதையாக வாங்க வீட்டுக்கு வந்ததும் எனக்குக் கால் பண்ணவேண்டும் சரி சரி போட்டு வா டா டா...

இப்படித்தாங்க இவள் மனசு கஷ்டப்படக்கூடாது என்று அவள் தோழி,  இவளை நிறைய விரும்புகிறவர்கள் உயிராய்  அவர்கள் அத்தை மாமாவை பார்க்க கூட இவ்வளவு கேள்வி கேட்டு அனப்பிவைத்தாள்.

எப்படி இருந்தாலும் இதற்கான அடிப்படை அன்பு மட்டும்தான். எப்பவும் எங்கேயும் எந்த நேரத்திலும் நமக்குத் துணை அன்பே ஆகும். ஒரு கணம் மனசுக்கு கஷ்டம்  , உடனே கை கொடுப்பது அன்புதான்   ஒரு விஷயம் நடக்கும் சமயம்அதை நமக்காவே சய்வதும் நம் மேல் இருக்கும் அன்பை  பறைச்சாற்றும். எல்லாத்தையுமே அன்பாலே வழி நடத்தும்  நம் நாயகி.

இப்படிப் பல பேரால் பலவிதத்தில் போற்றவும் மதிக்கவும் ரசிக்கவும் அன்பு செய்யவும் பின்தொடரவும் படுபவள் நம் நாயகனால் வருத்தமும் பட படித்தாள். இவளைத் திட்டிக் கொண்டே இருக்கும் நாயகன் தான் நம் நாயகியின் காதலுக்கு உரியவன். இன்னும் அவரைப் பற்றி நிறையச் சொல்லவேண்டும் ஆனால் இப்போது இல்லை இன்னும் ஒரு தொடரில் இல்லையென்றால் இரண்டாவது தொடரில். பட் கண்டிப்பா சொல்லிதாங்க ஆகவேண்டும் இல்லை என்றால் இந்த பௌவ் பொண்ணு என்ன தூக்கிப் போட்டு மிதித்தாலும் மிதிக்கும்  அதனால் சீக்கிரமே சொல்லி விடுகிறேன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஓய் லக்ஸ் அத்தை வீடு வந்தாயிற்று. நீ பார்த்து பத்திரமா போய்விட்டு வா என்று சிரித்தபடி கூறி அந்தப் பெரிய வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அந்த பங்களா பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காட்சியளித்தது பார்ப்பவர்களின் கொஞ்சம் நின்று அதை ரசித்துச் செல்லலாம் ஆனால் சம்திங் மிஸ்ஸிங் என்பது போல் தான் தோன்றும் அந்த வீட்டில் வசிக்கும் மக்களுக்கு. இந்த வீடு தாங்க நம்ப நாயகி யோட அத்தை கனிமொழியின் இல்லம் அதன் பெயரும் கனிமொழி மேன்ஷன் தான்.

அந்தப் பெரிய கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைய அங்கு இருக்கும் காவலாளி அவளைப் பார்த்து முகம் பற்றா அளவுக்கு பெரியதாகச் சிரித்து, வாங்க அம்மா வாங்க எவ்வளவு நாளாயிற்று பார்த்து உள்ள வாங்கமா. இதோ வந்துகொண்டே இருக்கிறேன்  சங்கர் அண்ணா எப்படி இருக்கிறீர்கள் என்ன ராணி உங்களை நல்லா பார்த்துக்கறாங்களா. செடிக்குத் தண்ணீர் விட்டுட்டீங்கன்னா ராணி கொடுக்கிறது அறைத்து கொண்டு வந்து விகிரீகளா, அப்புறம் நாம் உட்கார்ந்து பேசலாம். சரிகள் அம்மா நான் அப்படியே செய்கிறேன் ஆனால் நீங்கச் சொன்னதா சொன்ன மாவை நான் ஏற்கனவே அரசு கொடுத்துட்டேங்க அம்மா. ஐயாவும் உள்ள தான் இருக்கிறார்கள் போய் பார்த்துட்டு வாங்கமா நாம் பொறுமையா பேசலாம் என்றால் மிகவும் பாசமாக.

பார்க்கக் கொஞ்சம் கரடு முரடாகத் தெரிந்தாலும் மனிதர்களின் உள்ளம் சில நேரங்களில் பலாப்பழத்தை நம் மனதிற்குக் கொண்டு வருமே அதுபோல் இவனும் வெளித்தோற்றத்திற்கு முட்களால் காட்சியளித்தாலும் உள்ளோம் மிகவும் இனிமையானவன் மனதில் அன்பை மட்டுமே நிறுத்தி வைத்திருப்பவன்.

அவனைக் கடந்து உள்ளே சென்றவள் பார்த்தது அவள் மாமன் கமலேஷ் கண்ணனைத்தான் சிரித்த முகத்துடன் வாடா என்ன இவ்வளவு நாளா பார்க்கவே முடியவில்லை வந்து போகலாம் இல்லையா டா உன்ன பார்த்தாலே மனதுக்கு ஒரு புது தெம்பு கிடைக்கிறது உள்ள இருக்க எல்லா கஷ்டமும் ஏதோ ஒரு நொடியில் மறைந்து போய்விட்ட மாதிரி தோணுது. இந்த மாமாவைப் பார்க்க அடிக்கடி வரக் கூடாதா. (கமலேஷ் கண்ணன் ஒரு சீனியர் accountant அவர் பௌவ்க்கு சொந்த தாய் மாமன் அதாவது நமது பார்வதி அம்மாவுடைய அண்ணன் மிகவும் திறமையான ஒரு accountant. அவற்றிடம் பல பேர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் பெரிய நிறுவனத்தை இவர் கட்டி காட்டுகின்றார்  கட்டிக் காக்கின்றார். )

மாமா ஏன் டல்லா இருக்கிறீர்கள் என்ன சாப்டீங்களா இல்லையா ராணி அக்கா எங்கே உங்கள் முகம் எவ்வளவு வாடி இருக்கிறது என்ன மாமா என்ன ஆச்சு என்று வரிசையாகக் கேட்க, அதே நேரம் ஐயா அம்மாவுக்கு மாத்திரை வாங்கி வந்தாயிற்று உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள் அலுவலகத்தில் உட்கார வைத்திருக்கிறேன். ராணி அக்கா அவர்களுக்குக் குடிக்க ஜூஸ் ஏதாவது கொடுங்கள் மாமா வருவார்கள் என்று சொல்லி ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணச் சொல்லுங்கள். சரி கண்ணு தோ பொய் சொல்லிவிடுகிறேன். இந்தப் பேச்சு நடக்கும் போதே அவர் முகம் சோர்ந்து களையிழந்து காணப்படுவதால் அவரை பேசியபடி சமையலறைக்கு நடத்திச் சென்று கடகடவென்று ஒரு சூடான பிள்டர் காபி போட்டு அவர் கையில் சிரித்த முகத்துடன் தந்து இதை முதல் குடியுங்கள் மற்றதையெல்லாம் பிறகு பார்க்கலாம் என்றால் அமைதியான முகத்தோடு. தாயின் பேச்சைக் கேட்கும் பொட்டினை போல் அமைதியாக அந்த பெரிய மனிதரும் தலையாட்டியபடி அவள் கொடுத்த காப்பியைப் பொறுமையாக அருந்தினார். .

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.