(Reading time: 25 - 50 minutes)

நிஜமாகவே எனக்கு இது தேவைப் பட்டு இருக்கின்றது டா நிறைய நன்றி இப்போது கொஞ்சம் பரவாயில்லை அத்தைக்கு உடம்பு சரியில்லை டா.  சின்ன காய்ச்சல் தான் என்று பார்த்தேன் நான் கூட இருந்தால் ஒன்றும் பிரச்சனை இல்ல டா ஆனால் இப்போது போய் கோயம்புத்தூரில் உல்ல என் பிரண்டு அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் corruption problem யாரையும் நம்ப முடியாத நிலைமை . அவன் எனக்கு நிறையச் சப்போட்டா இருந்தவன் நான் கஷ்டப்பட்ட காலத்தில் அவன் எனக்கு நிறைய உறுதுணையாக இருந்தவன் என்று ஏதோ யோசித்தபடியே பேசினார் ம்ம்ம் மேலே சொல்லுங்கள் மாமா என்ற பார்வை அவர் மீது செலுத்தினாள் மருமகள்

இப்போது நான் கிளம்பவில்லை என்றால் பெரிய அளவில் அவனுக்கு இழப்பு. பணம் மட்டும் இல்லம் மா, மானம் மரியாதை அப்புறம் மனதளவிலும் பெரிய கஷ்டம் தான். அவர் வருத்த குரலைக் கேட்டு அவள் உள்ளே ஏதோ சய்ய

மாமா என்று அழைத்தவள் நீங்கச் சாப்பிடக் கொஞ்சமா புலாவ் அப்புறம் பொட்டேட்டோ கறி பேக் செய்து வைக்கிறேன் 4 days தேவையான பொருட்களை பேக் பண்ணினாள் போதும் இல்லையா என்றாள் சிரிப்புடன்.

சரி தான் டா ஆனால் அத்தையைத் தணியாக  என்று அவர் தோய்ந்த குரலில் கூற அட மாமா நான் டூ வீக் விடுமுறை போட்டுவிட்டு என் அத்தை கூட நேரம் ஸ்பென்ட் பண்ணலாமென்று வந்தால் இப்படி என்னை ஒரு மனுஷியாகக் கூட consider பண்ண  மாட்ரீங்களே.

அவள் தலையை வருடி விட்டு இடத்தை விட்டு வந்தார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

 ராணி அக்கா அத்தைக்கு என்ன ஆயிற்று ஏன் இவ்வளவு மாத்திரை வாங்கிட்டு வந்தீர்கள் டாக்டர் வந்து பார்த்தாரா இல்லையா. மாமா கண்டிப்பா வர வைத்திருப்பார்கள், ஆனாலும் ஏன் அவர்கள் இன்னும் சரி ஆகவில்லை. எப்போதும் நான் உள்ள வந்ததும் அத்தை என்னை வாசலிலே வந்து வரவேற்பார்கள் இப்போது அவர்களை பார்க்காமல் உள்ள வந்தது ஏதோ ஒரு மாதிரி இருக்கிறது அக்கா. அவரிடமே முழுமையாக விவரங்களை அறிந்து கொண்டால்் மாத்திரைகள் போடும் அலவும் எந்த எந்த நேரத்திற்குப் போட வேண்டும் என்பதும் அப்படி ஏதாவது அவசரம் என்றால் மருத்துவர் என்னையும் வாங்கிக்கொண்டு வேலையைத் தொடங்கினாள்.

பத்து நிமிடத்தில் தேவையான பொருட்களால் நிரம்பி அதனை ஒரு சீட்டில் எழுதி எது எது எங்கே இருக்கிறது என்று பட்டியலிட்டு அந்த காகிதத்தை அலைப்பேசியில் படம் எடுத்து அவர் தொலைப்பேசிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தாள். வந்தவர்களைக் கவனித்து அவர்களைப் பேசி அனுப்பிவிட்டு உள்ளே வந்தவர் சோஃபாவில் அவர் பொருட்கள் மற்றும் உணவு அடங்கிய பையும் இருப்பது தெரிந்தது. இப்போது தான் வந்தால் பேசிவிட்டு வருவதர்கு முன் எல்லாமே தயாராாக இருக்கிறது அப்படியே என் அம்மா  மாதிரியே. எல்லாத்தையும் விட்டுவிட்டு எங்கே சென்றாள் அதர்க்குள்ளே ஆளை காணோம் என்று யோசிக்கச் சமையலறையிலிருந்து பேச்சு சத்தம் கேட்டது.

சமையலறையில் அடுப்பில் அவள் ஏதோ கிளற ராணி அவளிடம் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமல் அவள் முகத்தைப் பார்க்க அவள் சிரித்த முகமாகக் கஞ்சி காட்சி எடுத்தாள்.

மாமன் தன் பெண்ணை பார்த்துக் கொண்டிருப்பதை வேலை முடிந்ததும் கவனித்தவள் மாமா வாங்க வாங்க அத்தைக்குச்  சாப்பிடக் காஞ்சி கொடுத்து விட்டு அப்படியே நீங்க ஊருக்குப் போர விஷயத்தைச் சொல்லி டாட்டா பாய் போய் சொல்லிவிட்டு வாங்க என்று அவரும் உடன் அழைத்துக்கொண்டு சென்றாள்.  கணி அம்மாவின் அறையினுள் பொறுமையாகச் சென்றவற்றை  மாமா சீக்கிரம் கஞ்சி கொடுத்துவிட்டு தான் மாத்திரை கொடுக்க முடியும் கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்று சிறு குழந்தையாக ஓடினாள்  அத்தையைக் காண..

அப்போதுதான் தன் அத்தையைக் கண்டவள் மனம் வருந்தினார் எப்போதும் சிரித்த முகமாக இங்கும் அங்கும் ஒரு இடத்தில் நிலை இல்லாமல் ஓடி வரும் அத்தை இன்று காய்ச்சலின் பாதிப்பால் உடலைக் குறுகிய படி கட்டிலில் படுத்திருந்தார் பார்க்க மிகவும் மனம் வருந்தினாள் மருமகள். மருமகள் இந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை அவர் இரண்டு நாள் தொடர்ச்சியாக  அடித்த காய்ச்சலால் எழ முடியாமல் எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தபடி இருந்தார் சரி கஞ்சி கொடுத்து விடுவோம் அப்போது தான் உடலில் கொஞ்சமேனும் பலம் இருக்கும். மாமா வரும்வரை அத்தையின் பொறுப்பு எண்ணுடையது என்று மனதில் உறுதி கொண்டாள். அவள் எதுவுமே சாப்பிடவில்லைமா எது சாப்பிட்டாலும் வாந்தி வருதுனு சாப்பிடலை. ஆனாலும் வாந்தி எடுக்கிறாள். சரி மாமா பாத்துக்கலாம் விடுங்கள் என்று கொண்டு வந்த கஞ்சியைப் பக்கத்தில் இருக்கும் மேஜையின் மீது வைத்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.