(Reading time: 25 - 50 minutes)

நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் யார் யாரை பத்தி எடுத்துவிட்டாலும் யார் யார் தலையை ஒடச்சாலும் சீக்கிரமா முடிச்சிட்டு ரெடியா இருங்க. நான் கெளம்பனும் சரியா என்று சீரியஸாக சொல்லிவிட்டு அலுவலக ஓய்வு அறையை நாடினால். ஹொவ் cute ல என்றாள் காமாட்சி. சொல்லும் வார்த்தை லக்ஸ்ஸின் காதில் விழுந்து விட ஐயோ அவளா நீ....  என்று வடிவேல் பாணியில் கூறி காமாட்சியை கலாய்த்தாள். அவர்கள் பேச்சு கலாய்த்தல் எல்லாம் ஒருவழியாக முடியும் தருவாயில் பௌவ்வின் கைபேசி நான் இங்கு தான் உள்ளேன் என்று ஒரு அட்டெண்டன்ஸ் போட ஓய்வு அறையில் இருந்து வெளியே வந்தவள் அதை எடுத்தாள். அழைத்தது அவள் அன்னை பார்வதி, உரையாடல் அவர்களுடன் இப்படித்தான் இருந்தது

சொல்லுங்கம்மா....

இப்போ குழந்தை எப்படி இருக்கிறது

சாந்தினியின் உடல் தேறி விட்டதா...

அப்பா என்ன சொன்னார்..

ம்ம்ம்....

நான் உங்களுக்குத் தேவையான எல்லா பொருளையும் அனுப்பி வைத்திருக்கிறேன் நாளை அனேகமாக உங்கள் கையில் கிடைத்து விடும்

 அப்பா பத்திரம் அம்மா சரி அம்மா

நான் இன்றைக்குக் கொஞ்சம் வெளியே போகிறேன் அதனால் அப்புறமா பேசுகிறேன் நீங்களும் உடம்பைப் பாரத்துக்கோங்க பாய் மா லவ் யூ டேக் கோர் ஆஃப் மை டாட் டூ...

அவள் அழைப்பை ஏற்றவுடன் இவர்களின் பேச்சு நிறுத்தப்பட்டு அவளின் உரையாடலைக் கவனிக்கத் தொடங்கினர். அவள் முகம் வாடி இருந்தது கண்கள் கூட மேகம் மழை மூட்டத்துடன் காணும் அளவிற்குக் கண்ணீர் திரண்டு வந்தது முகம் சுருங்கியது. ஆனால் இவை அனைத்தும் இரண்டு நிமிடம் தான் அதற்குப் பின் அவள் முகத்தில் வழக்கமாகப் பூசப்படும் புன்னகை வழக்கமான முகபாவம். என் மனதில் உள்ளதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று நாங்கள் கூறுகிறோம்  என்று கூறும் கண்கள்.

இது சரியில்லை என்பது இவ்வளவு வருடங்கள் உடன் வளர்ந்த தோழி அறியாததா என்ன? எனவே சரி வா போகலாம் என்று அவளை அழைத்துச் சென்றாள். புன்னகையுடன் காமாட்சியிடம் மறுமுறை அனைத்தையும் ஞாபகப்படுத்தி அவள் உன் மேலும் கவனம் இருக்கட்டும் எங்குச் சென்றாலும் நம் வாகனத்தில் தான் செல்ல வேண்டும் என்று அவரை மிரட்டி விட்டுத் தான் சென்றால் அன்பான முதலாளி.

வாகனத்தில் ஏறிய முதல் எதுவும் பேசாமல் அமைதியாகத் தலையைச் சீட்டில் சாய்த்துக் கண்மூடி படுத்து வந்தாள். இதோ இதோ வந்துவிட்டது இன்னும் இரண்டு நிமிடத்தில் என் தோழி காப்பி கேட்கப் போடுகிறாள் இதோ இன்னும் இரண்டு நிமிடம் இப்போது கேட்டு விடுவாள் இந்த ஹோட்டல் என் தோழியின் காப்பி பைத்தியத்தின் பைத்தியத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒன்று என்று வரும் வழியெல்லாம் அவள் பேசும் தருணத்திற்காகக் காத்து காரை ஓட்டியபடி லக்ஸ் வந்தாள். ஆனால் பௌவ்வியின் அத்தை வீடான கனிமொழி மேன்ஷன் வரும் வரை கூட அவள் வாய் திறக்கவில்லை.  இது இன்னும் பாடாய்ப்படுத்தியது ஏச்சும் பேசு காபி குடிக்கலாமா என்று அவள் கேட்கச் சத்தமாகச் சிரித்தாள் பௌவ் நானே கேட்டால் தர மாட்டீர்களா கொஞ்சம் அமைதியா இருந்தால் நீங்களாக வாங்கி தருவீர்களா என்றவளைத் தாவி அணைத்து உனக்கு எல்லாமே நல்லா தாண்டி நடக்கும்.  உனக்கு எந்த குறையும் வராது. எதையும் மனசில் போட்டுக் குழப்பிக்காதேடி. என்று பாசமாக அவள் தலையை வருடினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "இதயச் சிறையில் ஆயுள் கைதி..." - காதலும் மர்மமும் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

 ஒன்றும் இல்லையடி சந்தீஷுக்கு குழந்தை பிறந்து இறுக்கல்லவா அவள் பார்க்க என்னை மாதிரியே இருக்காலாம்.  பாப்பா மாதிரியே இல்லை பார்வதி அப்படியென்று அப்பா சின்ன பிள்ளை மாதிரி பேசினாரென்று அம்மா சொன்னார்கள். மனசு ஒரு மாதிரியா இருக்கிறது.  இவர்கள் எல்லாரையும் நான் நிறையப் படுத்தி வைக்கிறேன். ஆனால் என்னாலும் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது பா இன்னும் அதை மட்டும் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள் .  நான் இழந்தது போதாதா எனக்கு அப்பா வேண்டும் லக்ஸ் அவர் எப்போது என்னை திரும்பவும்  மன்னித்து ஏற்றுகொல்வாறோ தெரியவில்லை.

அடடா ஒன்றும் இல்லையடீ எல்லாம் சரி ஆகிவிடும்.

 ம்ம்ம்ம்.. நானும் அப்படி தான் டி நம்புகிறேன்.  சரிப்பா நான் போய்விட்டு வரேன் அத்தைக்குக் கொஞ்சம் உடம்பு சரி இல்லையா அதனால் நான் அவர்களை பார்த்துகோல்லப் போகிறேன். நான் இங்கே இல்லை என்றால் கண்டிப்பா நீவிடா அம்மா கிட்டத் திட்டு வாங்குவாள். உடம்பு சரியில்லாத மாமியாரை விட்டுவிட்டு ஊர் சுத்துகிறாள் அப்படியென்று வள்ளி அம்மா ஏற்கனவே பெண்டு எடுக்கிறார்கள் அதனால் நான் போய் தான் ஆகவேண்டும்.

அவர்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் நமது ஊரிலேயே best doctor வைத்து நாம் பார்த்துக்கொள்ளலாம் நீ ஏண்டி போகவேண்டும் தேவையில்லாமல் மனசைைக் கஷ்டப்படுத்திக்கொள்ளாதே .

இல்லப்பா எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல அத்தை மாமாவும் நான் கூட இருந்தால் கொஞ்சம் தெளிவா இருப்பார்கள் அவர்கள் வீட்டில் யாருமே இல்ல. மாமா அத்தை மட்டும் தான் இருக்கிறார்கள் மாமாவும் தனியா அத்தையைப் பார்த்துக்கொல்ல கஷ்டப்படுவார்கள். கொஞ்ச நாள் எனக்கு மைண்ட் ரிலாக்ஸ்டா ஒரு சேஞ்ச் இருக்கும் போய்விட்டு வந்துவிடவாமா.... என்றாள் முகத்்தை பாவமாக வைத்துக்கொண்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.