(Reading time: 18 - 36 minutes)

கொஞ்சம் தள்ளிச் சென்றதுமே, “இலக்கியா மொழி பேசினதை கேட்டல்ல.. அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை போல.. ஆனா அப்படியிருக்கும்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல..” என்றான்.

“ம்ம் இதே வேதனை அப்போ நீங்க அருளை வேண்டாம்னு சொன்னப்ப அவளுக்கும் இருந்திருக்கும்னு உங்களுக்கு புரியலையா?”

“என்ன சொல்ற இலக்கியா?”

“இங்கப்பாருங்க நீங்க ஆரம்பத்தில் அருள்க்கிட்ட பார்த்தது தான் அவளோட இயற்கையான குணம்.. அம்மா எது சொன்னாலும் அப்படியே செய்ய தான் பார்ப்பா.. ஆனா அதுக்காக அவ ஒன்னும் பழைய பஞ்சாங்கம் கிடையாது..”

“நான் என்னைக்கும் அப்படி சொன்னது கிடையாது இலக்கியா.. அவளோட அந்த குணம் எனக்கு செட் ஆகாதுன்னு தான் நான் நினைச்சேன்.. ஆனா அது கூட இப்போ எனக்கு அப்படி தோனல.. அந்த அளவுக்கு நான் அவளை காதலிக்கிறேன்..”

“ஆனா அதை அவக்கிட்ட நீங்க சொன்னீங்களா? உங்களுக்கு தெரியுமா அருளுக்கும் உங்க மேல காதல் இருக்கு.. ஆனா அதை உணர்ந்தாளான்னு தெரியல.. உங்க மேல அவளுக்கு காதல் இருக்கவே தான் நீங்க கூப்பிட்டதும் அவ ரெசார்ட்டுக்கு வந்தா.. அங்க உங்க ரெண்டுப்பேரையும் சேர்த்து வச்சு தப்பா பேசினதும், அதை வச்சு அவங்க அம்மா உங்க கல்யாணத்தை பத்தி பேசினப்பவும்,

அந்த இடத்தில் வேற ஒரு ஆள் இருந்திருந்தா கண்டிப்பா அவளே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்டா.. ஆனா அது நீங்கன்னு தான் அவ கல்யாணத்துக்கு சம்மதிச்சா.. ஆனா சாதாரணமா அவளை வேண்டாம்னு சொல்லிட்டீங்க.. அப்போ அவளுக்கு எப்படி இருந்திருக்கும்?

அடுத்து அவளை அமைதியா விட்டாங்களா? மகி அண்ணாவோட கல்யாணம் பேசினாங்க.. நீங்க வேண்டாம்னு சொல்லிட்டு போனதும், அவ வேற என்ன செய்வா.. வீட்டுக்காகன்ன்னு சம்மதிச்சா.. அதுல என்னென்னமோ நடந்துச்சு.. ஒருப்பக்கம் கல்யாணம் நின்னதுக்கு சந்தோஷப்பட்டாலும், தன் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தின சுடரை கல்யாணம் செஞ்சதுல மகி அண்ணா மேல கோபம்..

திரும்ப நீங்க வந்தீங்க.. அப்போயாச்சும் உங்க மனசை அவக்கிட்ட சொன்னீங்களா? வேண்டாம்னு சொல்லிட்டு போன ஆள் திரும்ப அம்மாவை அனுப்பி வச்சா அவ என்ன பதில் சொல்வா? நீங்க பேசினது அவ ஞாபகத்தில் அப்படியே இருக்கும்.. ஆனா அதுக்காக அவ உங்களை வேண்டாம்னு மறுக்க மாட்டா.. ஆனா அது கண்டிப்பா உங்க ரெண்டுப்பேரோட அம்மாக்களுக்காக மட்டுமில்ல..

இப்போ உங்க மேல இருக்க கோபத்தில் உங்களை வேண்டாம்னு சொல்லிட்டா.. திரும்ப அவளுக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்தாங்கன்னா வீட்டுக்காக அம்மாவுக்கான்னு கூட அவளால சம்மதம்னு சொல்ல முடியாது.. அதான் உங்களுக்கு பிடிக்கலன்னாலும் அம்மாவுக்காக ஓகே சொல்றீங்க.. அதேபோல அவளும் சரின்னு சொல்லி வச்சிருக்கா.. ஆனா அவ மனசை அவளே இன்னும் உணராம குழப்பத்தில் இருந்திருக்கணும்.. அதான் இப்போ நடந்துக்கிறா..”

“இப்போ அதுக்கு என்ன செய்ய இலக்கியா.. நான் குளறுபடி செஞ்சு வச்சதால.. நான் அதை சரி செய்றேன்னு அம்மா சொன்னதால தான் நானும் அமைதியா இருந்தேன்.. ஆனா அப்போதிலிருந்தே மொழிக்கிட்ட பேசணும்னு நினைக்கிறேன்.. ஆனா அவ என்கூட பேச கூட விருப்பப்படலையே.. இப்போ என்ன செய்றது…”

“இப்போ நீங்க செய்ய வேண்டிய முக்கியமானது உங்க மனசுல இருக்க காதலை அவக்கிட்ட சொல்றது.. ஆனா இப்போ இல்ல, இன்னும் 4 நாளில் அருளோட பிறந்தநாள் வருது.. அதான் உங்களுக்கான வாய்ப்பு.. அதை நீங்க பயன்படுத்திக்கோங்க.. இப்போ நீங்க டைனிங் ஹாலுக்கு போங்க.. நான் அவளை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரேன்..”

“தேங்க்ஸ் இலக்கியா..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கண்ணம்மாவின் " உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லலாமா ப்ரோ.. உங்க ரெண்டுப்பேருக்கும் தெரியலன்னாலும் ஆரம்பத்தில் இருந்து உங்க ரெண்டுப்பேருக்கு நடுவில் லவ் இருக்குன்னு நான் சொல்லிக்கிட்டே இருப்பேன்.. அதனால இதை செய்ய வேண்டியது என் கடமை..” என்றதும் புன்னகைத்தவன்,

“ஆமாம் அது என்ன சார்லஸ்ல இருந்து ப்ரோக்கு மாறிட்ட..” என்றுக் கேட்டான்.

“ம்ம்  நீங்க இப்போ இந்த வீட்டு மாப்பிள்ளை.. இனி உங்களை முறை வச்சு கூப்பிடலன்னா எங்க வீட்டு பெரியவங்க திட்டுவாங்க அதான்..”

“நீ இப்படி கூப்பிட்றது தான் நமக்குள்ள இன்னும் நெருக்கமான ஃபீல் கொடுக்குது..” என்று அவள் தலையை தடவி தன் அன்பை வெளிப்படுத்தி சென்றவனுக்கு, இப்போது சுடர் பற்றிய ஞாபகம் தான்,

அருள் அவனை மட்டும் புரிந்துக் கொண்டால் மட்டும் போதாது, சுடரையும் அவள் புரிந்துக் கொள்ள வேண்டும், அப்போது தான் திருமணத்திற்கு பின் அனைத்தும் சுமூகமாக இருக்கும் என்பதை உணர்ந்தவன், இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை சரியானதும் அருளிடம் சுடரைப் பற்றியும் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.