(Reading time: 18 - 36 minutes)

ருள் பேசியதில் வருத்தம் கொண்ட சுடர், அந்த மண்டபத்தில் அதிகம் உபயோகிக்காத மொட்டை மாடிக்குச் செல்லும் இன்னொரு படிக்கட்டு இருக்க, அங்கே சென்று அமர்ந்துக் கொண்டாள்.

அருள் எப்போதும் இப்படித்தான், அதனால் அதில் அவள் வருத்தம் கொள்ளவில்லை, ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் தான் அவளை அதிகம் காயப்படுத்தியது.

ஏதோ மகிழ் இவளது கழுத்தில் தாலி கட்டியதால் மட்டுமே இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் இவளை மருமகளாக ஏற்றுக் கொள்ள ஒத்துக் கொண்டார்களாமே, ஏன் அப்படியில்லையென்றால் இவளுக்கு இந்த குடும்பத்தின் மருமகளாகும் தகுதியில்லையா? ஏன்?

வெளிநாட்டில் வளர்ந்ததாலா? இல்லை கணவனை விட்டு ஓடிப் போன அன்னைக்கு பிறந்ததாலா? எதனால்? ஒருவேளை வெள்ளையாக இவளின் அன்னை போல் பிறந்ததாலா? அதனாலேயே இவளே அந்த அழகை வெறுக்கிறாளே, அதேபோல் தான் மற்றவர்களும் வெறுக்கிறார்களா? இல்லை இவள் செய்து வைத்த குளறுபடிகள் இவர்களுக்கெல்லாம் பிடிக்கவில்லையே அதனாலா? அப்போது இந்த வீட்டிற்கு மருமகளாக இருக்க இவளுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பது புரியவில்லை.

அவளை போலவே மகிழும் அவளை நேசித்தால் போதுமென்று நினைத்தாலே, ஆனால் அருள் சொல்வதை பார்த்தால் மகிழுக்கே இவள் மீது காதல் இல்லை போலும், ஆரம்பத்தில் அவனும் இவளிடம் பாராமுகமாக நடந்துக் கொண்டவன் தானே, அவன் அப்படியே இருந்திருக்கக் கூடாதா? அதற்குப்பின் ஏன் அவன் இவளிடம் அன்புக் காட்ட வேண்டும்?

ஆரம்பத்தில் அந்த தீம் பார்க்கில் நடந்த சம்பவத்திற்கு பிறகு தான் அவள் மேல் இரக்கம் கொண்டு அவளிடம் நல்லப்படியாக பழக ஆரம்பித்திருக்கிறான் என்பது அவளது புரிதலாக இருந்தது. ஆனால் கழுத்தில் தாலிக் கட்டியதிலிருந்து அவன் பழகும் முறையை வைத்து அவனுக்குமே அவள் மேல் காதல் இருக்கிறது என்று புரிந்து வைத்திருந்தாள்.

இப்போது அருள் சொன்னதை வைத்து பார்த்தால் அப்படியில்லை போலவே, அவன் செய்த காரியமே தவறு என்று சொன்னானாமே என்று யோசித்து பார்த்தவளுக்கு ஒன்று புரிந்தது.

அன்று அவனது வண்டியிலேயே அவளது டைரியை விட்டுவிட்டு வந்தாளே, அதை மறுநாள் கொண்டு வந்த போது “அழகா படம் வரைஞ்சிருக்க..” என்று சொன்னானே, அப்போது அதில் இருப்பதை படிக்காமலா இருந்திருப்பான். அதில் இருந்து இவள் மீது ஒரு இரக்கம் சுரந்திருக்கும், அது இவள் கழுத்தில் தாலிக்கட்டும் வரை சென்றிருக்கிறது என்பது போல் புரிந்துக் கொண்டவளுக்கு,

இரக்கத்தால் யாராவது தனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் அத்தனை பேர் பார்க்கும் விமான நிலையத்தில் தாலிக் கட்டுவார்களா? என்பது போல் யோசித்து பார்க்க முடியவில்லை. இதை அருள்மொழியே யோசித்துப் பார்த்திருந்தாள், முதலில் இவளிடம் இப்படி பேசியிருப்பாளா?

அவன் தப்பு செய்ததாக சொன்னது அவள் கழுத்தில் தாலிக் கட்டியதை இல்லை, தாலிக் கட்டிய முறையையும் அதனால் இன்னும் பிரச்சனைகளை இழுத்துவிட்டதையும் தான், அதை இருப் பெண்களுமே உணர்ந்துக் கொள்ளவில்லை.

வந்த விருந்தினர்களெல்லாம் சாப்பிட்டு முடித்து சென்றிருக்க, அருள், அமுதனோடு குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து சாப்பிடலாம் என்று அனைவரும் உணவு கூடத்திற்கு வந்த போது தான், அங்கே சுடர் வராததை கவனித்து மகி அவளை தேடிக் கொண்டு சென்றான்.

அவள் அங்கே படிக்கட்டில் அமர்ந்திருந்ததை பார்த்தவன், “சுடர் இங்க தான் இருக்கியா? உன்னை எங்கெல்லாம் தேட்றது.. வா எல்லோரும் சாப்பிட வந்தாச்சு.. வா சாப்பிட போகலாம்..” என்று அழைத்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இப்போ தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்துச்சா.. நான் சாப்பிட வரல.. எனக்கு பசிக்கல.. நீ போய் சாப்பிடு.. என்னை தொந்தரவு பண்ணாத போ..” என்று கோபமாக கூறினாள்.

இங்கு வந்ததிலிருந்து அவளோடு இல்லாமல் தனியாக விட்டுவிட்டு வேலையில் மூழ்கிவிட்ட்தற்கு கோபமாக இருக்கிறாள் போல என்று புரிந்துக் கொண்டவன், “சாரி டா.. வந்ததும் விருந்தாளி போல நான் உட்கார்ந்துக்க முடியுமா சொல்லு.. இது நம்ம வீட்டு விசேஷம் சுடர்.. வேலையெல்லாம் நாம தான் இழுத்து போட்டு செய்யணும்..” என்று அவளையும் அவனோடு இணைத்துக் கொண்டவன்,

“சரி அதனால நோ கோபம்.. இப்போ எனக்கு ரொம்ப பசிக்குது.. உனக்கும் தான், அதனால வா போய் சாப்பிடலாம்..” என்ற போதும் அவள் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க,

“நீயா வர்றியா.. இல்லை நான் உன்னை தூக்கிட்டு போகட்டுமா?” என்றுக் கேட்கவும்,

மனதால் அவனை விட்டு விலக வேண்டும் என்று முடிவெடுத்தவளாக, அவன் தொடுதலை விரும்பாமல், எழுந்து நேராக சாப்பிடும் இடத்திற்குச் சென்றாள்.

அங்கே சென்றதுமே, “எங்கம்மா போயிட்ட ஆளை காணும்..” என்று பூங்கொடி விசாரிக்க,

“மகிழ் இருந்தா தான் நான் இவங்க கண்ணுக்கெல்லாம் தெரியுறேன் போல..” என்று நினைத்தவள்,

“சும்மா அங்க உட்கார்ந்திருந்தேன்..” என்று சொல்லிவிட்டு சென்றவள், பேருக்கு எதையோ சாப்பிட்டு வைத்தாள்.

இங்கு இலக்கியா பேசியதில் கொஞ்சம் தெளிவான அமுதனோ, “இதை சாப்பிட்டு பாரு மொழி, இது நல்லா இருக்கும் பாரு.. இன்னும் கொஞ்சம் சாப்பிடு..” என்று அவளை அவளை பார்த்து பார்த்து கவனிக்க, அருளே அவனது செய்கையில் வியப்படைந்தாள்.

அடுத்து சாப்பிட்டு முடித்ததும், “அருள் கல்யாணத்துக்கு அடுத்தது உங்க கல்யாணம் தான் மகி.. இப்பவே விசேஷத்துக்கு வந்தவங்க என்னென்னமோ பேசறாங்க.. அதனால் உங்க கல்யாணம் முடியற வரை நீங்க தனித்தனியா அவங்கவங்க வீட்ல இருக்கிறது தான் சரி..” என்று எழில் சொல்லவும்,

சுடரை தனியாக விட யோசித்தவன், “வேண்டாம் அத்தை சுடர் தான் அங்க இருக்க விருப்ப படல இல்லை.. அதனால் நாங்க இப்போ இருக்கறது போலேயே இருக்கோம்..” என்று கூற,

“இல்ல சித்தி நீங்க சொல்றதும் சரி தான்.. அதனால் நான் உங்க கூட வீட்டுக்கு வரேன்..” என்று சுடர் கூறினாள்.

“சுடர் நீ சும்மாயிரு..” என்று மகி அடக்கப் பார்க்க,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அவளே வர ஒத்துக்கிட்டதுக்கு பிறகும் என்ன மகி.. இதுதான் இப்போதைக்கு சரி புரிஞ்சுதா..” என்ற எழில்,

“சுடர் நீ கிளம்பு..” என்று கூறிவிட்டு செல்ல,

“நீ அங்க போய்த்தான் ஆகணுமா சுடர்.. உனக்கு விருப்பம் இல்லைத்தானே, என்கிட்ட சொல்லு.. நான் அத்தைக்கிட்ட பேசறேன்..” என்று மகி கேட்க,

“எனக்கு ஏன் பிடிக்கல.. என்ன இருந்தாலும் அது என்னோட வீடு தானே.. நான் அங்க தான் இருக்கணும்..” என்று அவனுக்கு புரியாதது போல் பேசியவள், அவனது ஏக்கப் பார்வையை புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டே கதிர், எழிலோடு வீட்டுக்கு கிளம்பினாள்.

இங்கு அமுதனோ, “உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் ஹனி.. பை ஸ்வீட் ட்ரீம்ஸ்..” என்றவன், அவளது கையில் முத்தமிட்டு விடைபெற, அருள்மொழி திகைத்து நின்றாள்.

உறவு வளரும்...

Episode # 51

Episode # 53

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.