(Reading time: 5 - 9 minutes)

தொடர்கதை - தாரிகை - 32 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2004..

கோனியம்மன் திருவிழா அன்று..!! கோவையே கோவிலை நோக்கி படையெடுத்துக்கொண்டிருந்தது..!!

நெருக்கமாய் குடியேறியிருந்த கடைகளில் பெண்களோடு பெண்களாய் தாரிகையும் மொழியும் கண்ணாடி வளையல்களுடன் உரையாடிக்கொண்டிருந்தனர்..!!

“எதுக்கு செல்வி இத்தனை வளையல்..??”, அடுக்கடுக்காய் வளையல்களை போட்டுக்கொண்டிருந்த தாரிகையைக் கண்டு சலித்தவண்ணம் மொழி கேள்வி எழுப்பியிருந்தாள்..!!

“எனக்கில்லைக்கா.. நிஷாக்கு வாங்கறேன்.. அவளுக்கு வளையல்ன்னா ரொம்பப் பிடிக்கும்..”, அன்பில் கனிந்துபோயிருந்தது தாரிகையின் குரல்..

“அடுத்த வாரம் மதுரைக்கு போறன்னு சொன்னீல்ல..?? நான் மறந்தே போயிட்டேன்..”, நெற்றியில் லேசாக அடித்துக்கொண்ட மொழியைக் கண்டு லேசாக புன்னகைத்த தாரிகை, “இந்தாங்க இது உங்களுக்கு..”, என்றபடி மஞ்சள் நிற வளையல்களை அவர் புறமாக நீட்டிட்ட.. அத்தனை மகிழ்ச்சி மொழியின் உள்ளத்துள்..!!

“தாங்க்ஸ் செல்வி.. அழகா இருக்கு.. சமுவுக்கும் வாங்கனும்..”, என்றவள் கடைக்காரரிடம் திரும்பி, “ஆரஞ்சு கலருல இருந்தா கொடுங்களேன்..”, என்க..

“ஆரஞ்சு கலர் எல்லாம் இல்லை..”, பட்டென்று உதிர்த்திருந்தார் அவர்.. ஐந்து நிமிடத்தில் இவர்கள் சென்றுவிடுவார்கள் என அவர் நினைத்திருக்க.. பத்து நிமிடங்களாக நேரம் கடக்க கொஞ்சம் குரலில் கடுப்பு ஏறியிருந்தது..!!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அண்ணா அங்க பாருங்க.. அங்க இருக்கு..”, கடைக்காரரின் பேதம் புரியாமல் தாரிகை சுட்டிக்காட்ட.. வெளிப்படையாய் முறைத்திருந்தார் கடைக்காரர்..!!

“அது சைஸ் பெருசு..”, பட்டுத்தறித்தாற்போல் பேச்சை அவர் கத்திரிக்க.. அதற்குள் தாரிகையின் விரல்களைப் பிடித்து எச்சரித்திருந்தாள் மொழி..!!

முகம் ஒருநொடி மாறுதலைத் தத்தெடுத்துக்கொண்ட பொழுதும் முகமாறாமல் வாங்கிய பொருட்களுக்காக பணத்தை அவரது கையில் திணித்துவிட்டு கூட்டத்தைவிட்டு இருவரும் வெளியே வந்திருந்தனர்..!!

“செல்வி.. லீவ் இட்.. இவரை மாதிரி நாம எத்தனை பேரை பார்த்திருக்கோம்..”, இன்னும் தெளியாத முகத்துடன் உலா வந்தவளிடம் மொழி மொழிந்திட..!!

“பாத்திருக்கோம்க்கா.. இவங்க எல்லாம் இப்படித்தான்னு தெரியுது.. ஆனால் ஏத்துக்க முடியல.. அவ்ளோதான்..”, என்றவளது விழிகளுக்குள் கைநிறைய பைகளுடன் ஆர்த்தி சிக்கிட, “ஆர்த்ஸ்.. கடையையே விலைக்கு வாங்கிட்டபோல..”, மொழியின் ஆராய்ச்சியிலிருந்து தப்ப.. கேலியில் இறங்க..

“இன்னும் லிப்ஸ்டிக் பாக்கி இருக்கு..”, அவசரமாய் பைகளை இருவரிடமும் ஒப்படைத்தவள் கேலியிலிருந்து தப்பித்திட ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டிருந்தாள்..!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா வெயின் "நெஞ்சோடு கலந்திடு உறவாலே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“எனக்கு ஏன் இவளை மாதிரி மேக் அப் போடறுதுல ஒரு ஆசை வரமாட்டேங்குது..??”, தனது நெடுநாளைய சந்தேகத்தை ஆர்த்தியைப் பார்த்தபடி தாரிகை முன்வைத்திட.. மொழியின் முகத்தினில் அழகானதோர் மென்னகை..!!

“பொதுவா திருநங்கையா மாறுற எல்லாருக்கும் தன்னைத் தானே அழகு படுத்திக்கனும்.. யார் தன்னைப் பார்த்தாலும் திருநங்கைன்னு சொல்லாம பெண்ணுன்னு சொல்லனும்னு ஆசை உண்டாகும்.. அதோட வெளிப்பாடுதான் தன்னைத் தானே அழகு படுத்திக்கறதுங்கறது.. நெறைய பேர் அதை ரொம்ப அதிகமா பண்ணுவாங்க.. அதுதான் அழகு அப்படீங்கற மாதிரி.. அது ஒரு ஓவர் எக்சைட்மென்ட் ஸ்டேட்.. அவ்ளோ வருஷமா தனக்குள் அடக்கிவெச்சிருக்க பெண்மை வெளிப்படும்போது அதை எப்படி மத்தவங்கக்கிட்ட எக்போஸ் பன்றதுன்னு தெரியாம பன்றது.. அது தப்பெல்லாம் கிடையாது.. ரொம்பவே இயல்பு.. எப்படி இதுவரைக்கும் மேக் அப்பே போடத் தெரியாத குழந்தை மூஞ்சி முழுக்க க்ரீம் எடுத்துப் பூசிக்குமே.. அது மாதி ஒரு மனநிலை..பட் நீ கொஞ்சம் வித்சாயம் செல்வி.. இங்க இருக்க எல்லாரையும் விட நீ தனியாத் தெரியற.. மே பி.. உன்னோட கோணம் வேற மாதிரின்னு கூட சொல்லலாம்.. நிச்சயமா நீ இப்படி இருக்கறது தப்பில்லை..”

“நான் சில சமயம் ரொம்ப அப்நார்மலா பீல் பண்ணிருக்கேன்க்கா.. எல்லாரும் இப்படி என்னென்னவோ போடறாங்க.. நமக்கு மட்டும் ஏன் இந்த ஆசை எல்லாம் இல்லைன்னு..”, தெளிந்த குரலில்..

“செல்வி நான் ஒன்னு சொல்றேன்.. தப்பா நெனச்சுக்காதே..”, மொழி பீடிகை போட.. என்ன என்பதாய் கேள்வி தங்கியது பெண்ணின் முகத்தினில்..!!

“நீ மனசுவிட்டு யார்ட்டயாவுது பேசு செல்வி.. உன் இறுக்கம் குறையும்.. உனக்குள்ள இருக்க இறுக்கத்தை தளர்த்திக்கோ கொஞ்சம்.. இல்லைன்னா வாழ்க்கை எப்பவும் ஒரு அழுத்தத்தை மட்டுமே உனக்குக் கொடுக்கும்.. இந்த உலகுத்துல எல்லாருக்குமே பிரச்சனைன்னு ஒன்னு இருக்கு.. பிரச்சனை இல்லாத ஒரு மனுஷனைப் பார்க்கவே முடியாது உன்னால.. பிரச்சனை அப்படீங்கற ஒன்னு நம்ம சுத்துதுங்கறதுக்ககாக அதை போட்டு மனசுல அழுத்திட்டே இருந்தா வாழக்கையை அனுபவிக்க முடியாது..”, என்ற மொழி கொஞ்சம் இடைவெளிவிட.. நந்தியாய் ஒலித்தது அவரது புதிய தொலைப்பேசி..!!

 

வணக்கம் தோழமைகளே..

கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்துகொண்டிருக்கும் தோழமைகளுக்கும் லைக்ஸ் கொடுக்கும் தோழமைகளுக்கும் நன்றிகளும் சாரிகளும்..!! சில பல பெர்சனல் வேளைகளில் சிக்கிக்கொண்டமையால் சரிவர உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை..!!

அடுத்து வரும் சில அத்தியாயங்களும் சிறியதாகவே இருக்கும்..!! கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்..!!

நன்றி..!! 

உருவெடுப்பாள்..!!

Episode # 31

Episode # 33

{kunena_discuss:1168}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.