Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 02 - பூர்ணிமா செண்பகமூர்த்தி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 02 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

Idho oru kadhal kathai

தையின் முன்னுரை இப்படி இருந்தது:

ஒரு தொடர்கதை  எழுதணும்னு எனக்கு ஒரு ஆசை.அதனால இந்த வெள்ளைத்தாமரை இதழில் என்னோட  கற்பனையில் உருவான ஒரு கதையை எழுதறேன். கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் , யாவும் கற்பனையே. இந்த கதையை நல்லபடியா எழுதி முடிப்பேன்னு தெரியாது. ஆனாலும் முடிந்த அளவு முயற்சி பண்றேன். - எம். ஆர். ஒய் (பி. ஏ. தமிழ் (முதல் ஆண்டு))

முதல் ஆண்டு படிக்கிற கத்துக்குட்டி எழுதுற கதையா இது. வாசிச்சு டைம் வேஸ்ட் பண்ணவேண்டாம்னு தோணுது இன்னொரு கொட்டாவி விட்டவாறே நினைத்தான் அமுதன். இத்தனைப் பக்கம் வாசிச்சாச்சு, இன்னும் ரெண்டு பக்கம் தானே வாசிச்சு வைப்போம் என்று வாசிக்க ஆரம்பித்தான்.

வெள்ளைத்தாமரை இதழ்-1    இதோ ஒரு காதல் கதை  பகுதி-1

"ல்லூரிக் காலங்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது. இதை அடிக்கடி அடிக்கடி எல்லாரும் சொல்லிட்டே இருப்பாங்க இல்லையா? நம்ம வாழ்க்கையிலும் அது மறக்க முடியாத நினைவுகள் தரப்போகுதா?" யோசித்துக் கொண்டே கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தாள் ரம்யா. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது ஏனோ, "இங்க பாரு ரம்யா! இத்தனை நாள் நீ படிச்சது முழுதும் பொண்ணுங்க படிக்கற ஸ்கூல்ல. ஆனால்,  நீ இப்ப படிக்க போற காலேஜ் கோ-எஜுகேசன் காலேஜ். பசங்கலாம் இருப்பாங்க..லவ் கிவ்வுனு எந்த பிரச்சனையிலும் சிக்காமல் படிக்கிற வழிய மட்டும் பாரு. "லவ் ஆ? நானா?  அதெல்லாம் எந்த பிரச்சினையும் வராதும்மா!” தான் சொன்னதை எண்ணி மனதுக்குள் சிரித்து கொண்டாள் ரம்யா.  தன்னுடைய வகுப்பறையைத் தேடி கண்டுபிடித்து போனால், உள்ளே நுழைந்ததும் முதல் பெஞ்ச் மட்டும் காலியாக இருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

"சரி முதல் பெஞ்ச்லயே இனி உக்காரலாம்! நாம ஆரம்பிச்சு வைப்போம். முதல் பெஞ்ச் என்ன அயல்நாட்டு ஆக்கிரமிப்பு பகுதியா, நாம பயப்படுறதுக்கு”.  இன்னும் சில பெண்கள் அவள் அருகில் உக்கார வகுப்பறை முழுதும் மாணவர்களின் முதல் நாள் இன்ஜினியரிங் ஆர்வப்பேச்சுக்கள். ரம்யா நினைத்துக்  கொண்டாள் தனக்குளே, "எனக்கு பெண் தோழிகள் மட்டும் போதும்!யாராவது பையனோட பேசினால் தானே வம்பு. நான் எப்பவுமே பசங்களோட பேசவே மாட்டேன்!". காலை நேர பாடங்கள் முடிந்தது.

சிறு வயதில் இருந்து இன்று வரை உயிருக்கு உயிர்த் தோழியாய் இருக்கும் சத்யா  தன்னிடம்  சொன்னதும்  நினைவுக்கு வந்தது.  " ரம்யா, நீயும் பேசாம என்கூட ஆர்ட்ஸ் காலேஜ் வாடி.! இன்ஜினியரிங்லாம் வேணாம். ரொம்பக் கஷ்டம். ஏற்கனவே நீ பயங்கர ஒல்லி. எட்டு பேப்பர் , பத்து பேப்பர் படிச்சு எழுதறதுக்குள்ள தேய்ஞ்சு  போய்டுவ.  நான் சேர்றது  உமன்ஸ் காலேஜ். அதனால ஸ்கூல்ல  எப்படி இருந்தமோ அப்படியே இருக்கலாம்.  சூப்பரா இருக்கும்டி. யோசிச்சுப் பாரு"

தான் அவளிடம் மிக உறுதியாகச் சொன்னதும்  நினைவுக்கு வந்தது,  “நாம  பத்தாம் வகுப்பு  படிக்கும் போதில் இருந்து  இன்ஜினியரிங் படிக்கணும்னு ரொம்ப ஆசை வந்தது.  அப்பாவும் அதைத் தான் விரும்புறாங்க. படிச்சு நல்ல வேலைக்குப் போகணும்னு சொல்றாங்கடி. நான் இன்ஜினியரிங் தான் பண்ண போறேன் சத்யா!”.

என்  இதயமே! நீ என் மூளை சொல்றதை மட்டும் கேளு. என்  மூளையே, என் இதயம் சொல்றதையோ, என் கண்கள் சொல்றதையோ கேட்காத. சரியா . எந்த தடுமாற்றமும் இல்லாமல் என் படிப்பை மட்டும் கண்டுக்கோ! தனது மூளைக்கு உத்தரவிட்டுக் கொண்டாள் ரம்யா.“படிக்க மட்டும் தான் போறேன். படிக்க மட்டும் தான் போறேன். வேற எந்த விஷயத்திற்கும் இடம் இல்லை!” தனக்குள்ளே சொல்லி கொண்டாள் ரம்யா.

உணவு இடைவேளை.

ரம்யா சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்டு வகுப்பில் சென்று உக்கார்ந்தாள். வகுப்பில் ஒருத்தரும் இல்லை.  சும்மா தான் காலையில் எழுதிய வகுப்புகளின் நோட்ஸ் பார்த்துக்கொண்டு இருந்தாள். "ஏங்க கீதா இருக்காங்களா?"னு ஒரு ஆண் குரல், நிமிர்ந்தாள் ரம்யா.. "ஐயோ சாமி நான் பசங்களோட பேசவே மாட்டேன்". காது கேட்காதது போல் குனிந்து கொண்டாள். அவன் மறுபடியும் "ஏங்க கீதா இந்த கிளாஸ் தானே? எங்கேனு தெரியுமா?" ரம்யா பதில் பேசவே இல்லை.

பின்னால் இன்னொரு குரல், " என்ன தினேஷ்? என்ன வேணும்? என்னைத் தேடி வந்திருக்க?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதி நிலாவின் "தாரிகை..." - சமூக தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பேசியது கீதாவே தான்!

“ஹாய் கீதா! முதல் நாள் கிளாஸ்ல எப்படி போச்சுனு கேப்போம்னு வந்தேன்."

ரம்யா தனக்குள்ளே  "பொறுக்கி, பொறுக்கி.இப்படி தான் எதையாவது பேசி பொண்ணுங்க கிட்ட கடலை போடுவானுங்க" தனக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லி கொண்டாள்.

"கீதா உன்கிட்ட ஒன்னு கேட்கணும். உன் கிளாஸ்ல ஒரு பொண்ணு உக்கார்ந்திருக்கே. அதுக்கு காது கேட்காதா? நீ இந்த கிளாஸ்ல தான் இருக்கியா? எங்கே போய் இருக்கனு ரெண்டு வாட்டி கேட்டேன்,  பதிலே இல்ல..காது கேட்கல பாவம்னு நினைச்சிட்டு இருந்தேன்." வேண்டுமென்றே ரம்யாவின் காதில் கேட்கும் படி சொன்னான். ரம்யாவுக்குக் கோபம் தான். ஆனாலும் பேசாமல் இருந்தாள். தினேஷ் போய் விட்டான்.

கீதா கிளாஸூக்குள்ளே வந்தாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Poornima ShenbagaMoorthy

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 02 - பூர்ணிமா செண்பகமூர்த்திAdharvJo 2019-03-24 15:32
:D cute update with mild humor ma'am 👏 👏👏 👏 I liked the way Ramya said " naan undu Ena velai undun irukalam...anal nane undu..." :lol:
thamarai Oda hero.heroin-a unga kadhaikkum hero heroin aga ethukitingalo :Q: waiting to see who the caller is and how mom and daughter are going to give back 😜
thank you for this interesting update. Keep rocking.
Reply | Reply with quote | Quote
# நன்றி!PoornimaShenbagaMoorthy 2019-03-26 12:14
நன்றி! உங்களுக்கு எனது வரிகளில் இருக்கும் மெல்லிய wow நகைச்சுவை பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 02 - பூர்ணிமா செண்பகமூர்த்திmadhumathi9 2019-03-24 15:07
:clap: nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# நன்றி!PoornimaShenbagaMoorthy 2019-03-26 12:14
ஊக்கத்திற்கு நன்றிகள் பல :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 02 - பூர்ணிமா செண்பகமூர்த்திJebamalar 2019-03-24 10:07
Thodarukul ஒரு தொடர் கதை.... Very interesting... Waiting for nxt epi
Reply | Reply with quote | Quote
# நன்றி!PoornimaShenbagaMoorthy 2019-03-26 12:15
ஆர்வத்திற்கும் ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றிகள் பல தோழி! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top