முதலில் விளையாட்டாக நடந்து கொண்டிருந்த வாள் சண்டை, சற்று நேரத்தில் ப்ரித்வியின் வித்தியாசாமான அந்த வாளும், அதற்கு ஏற்ற பயிற்சியும், ரானாவையேத் திணற அடித்தது. ராணா விளையாட்டைக் கை விட்டு சற்று உக்கிரமாக வாள் வீச, சிறிது நேரத்தில் ப்ரித்வியின் வாள் பறந்து விட்டது.
ப்ரித்வி தலை குனிந்து நிற்கவும், தன்னிடத்தில் இருந்த மற்ற வாளை ப்ரித்வியிடத்தில் கொடுக்க, அதை வாங்கியவன் நாற்பது கிலோ எடை கொண்ட அந்த வாளைத் தூக்க முடியாமல் திணறினான்.
இருந்தும் சமாளித்துச் சண்டையிட்டான். அப்போதும் ராணாவை ஜெயிக்க முடியவில்லை. பின் ரானாவே போதும் என்று சொல்ல, எல்லோரும் ஆரவாரம் செய்தனர்.
ப்ரித்வியை அருகில் அழைத்துக் கட்டிக் கொண்டார் ராணா.
“அற்புதமான வாள் வீச்சு இளவரசே. இந்த வயதில் என்னைப் பார்ப்பது போல் இருந்தது உன் போர் முறை” என்று மிகவும் மகிழ்ச்சியோடு கூறவும், ப்ரித்வியும்,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“தங்களோடு போரிட்டது என் பாக்கியம் மகாராஜ். இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமோ என்ற சந்தேகத்தில் சற்று உக்கிரமாக நடந்து கொண்டேன். தங்களைக் காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் மகாராஜ்” என்றான்.
“வீரர்களுக்குக் காயங்கள் தான் பரிசுகள் ப்ரித்வி. அதைப் பற்றிக் கவலைப் படாதே. “ என்றார்.
மற்றவர்களும் ப்ரிதிவிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். அப்போது பிகானர் தலைவர்,
“மகாராஜ், தங்களிடம் ஒரு விஷயம் தெளிவுப் படுத்த வேண்டும்” என்றார்.
“கூறுங்கள்”
“தாங்கள் பயிற்சிக்கு அளித்த அத்தனை ஆயுதங்களும் வீரர்களுக்கு உபயோகப் படுத்தப்பட்டன. ஆனால் அந்தக் குறுவாளை மட்டும் யாரும் தொடவேயில்லை”
“ஏன்?”
“இது கோழைகள் மறைந்து இருந்து தாக்கத் தான் பயன் படும். நாங்கள் வீரர்கள். நேருக்கு நேர் நின்று போராட நீண்ட வாள்களே தேவை என்கிறார்கள் மகாராஜ்”
“ஒஹ். “ என்றவர் இத்தனை நேரம் நடந்தே எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்த ஒரு உபதலைவரைப் பார்க்க, அவர் முன்னால் வந்தார்.
“குருவாளின் உபயோகத்தைக் காட்டு” என , ஒரு வீரனை அழைத்து அருகில் வரச் சொனார்.
அவன் அருகில் வந்ததும் தன் நீண்ட வாளால் அந்த உபதளபதியைத் தாக்க, தன் குறு வாளால் அந்த தாக்குதலைச் சமாளித்தார். பிறகு ஒரு கட்டத்தில், அந்தக் குறுவாளால் அந்த எதிர் வீரரின் உள்ளங்கையில் குத்த, வலி தாளாமல் அவன் வாளை விட்டான். அவன் வாளை விடவும் வீரனைத் தன் உடையில் இருந்து கயிறு போன்ற ஒன்றை எடுத்துக் கட்டிக் கீழே தள்ள, அந்த வேகத்தில் உபதளபதியின் தலைக் கவசத்தைத் தட்டி விட்டான் வீரன்.
அதில் கவசம் கீழே விழ, மிக நீண்ட கூந்தல் விரிந்தது. பார்த்தவர் அனைவரும் திகைத்து நிற்க, அந்த முகத்தைச் சுற்றிலும் முக்காடு போட்டு இருந்தது.
ஆ .. பெண் என்று கூற, அதற்குள் உபதளபதிகள் சுதாரித்து
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மகியின் "வேலன்டைன்ஸ் டே" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“இளவரசி கிரண் தேவி” என்று கூறவும், மேவார் வீரர்கள் அனைவரும்
“ஜெய் பவானி” என்று கூறினர்.
இந்த சந்தோஷக் கூச்சலோடு இளவரசி கிரண் தேவியையும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் ப்ரித்வி ராஜ்.
இத்தோடு கனவு முடிய தற்போது கிருத்திகா தேவி விழித்துக் கொண்டாள்.
இத்தனை நாட்கள் கனவைப் பற்றி ஒரு பயம் இருந்த க்ருதிகாவிற்கு, இப்போது அவளின் கனவு ஆன்லைனில் படிக்கும் தொடர் போல் ஆகிவிட்டது, எப்போதடா அடுத்த அத்தியாயம் வரும் என்று காத்து இருப்பதைப் போல், எப்போது அடுத்தக் கனவு வரும் என்று காத்து இருக்க ஆரம்பித்தாள் கிருத்திகா.
தொடரும்!
Go to Kaanaai kanne story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.