Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகா

Kaanum idamellam neeye

சிவநாதன் சொன்னதைக் கேட்டதும் ஈஸ்வரனுக்கு மனது வலித்தது. ஆனாலும் தன்னை சுற்றி நிரஞ்சனும் குமரவேலும் இருப்பதைக் கண்டு சற்று சுதாரித்தபடியே

”அப்பா எனக்கு ஒண்ணும் ஆகாது, நான் சீக்கிரமா ப்ரான்ச் ஆரம்பிச்சி வைச்சிட்டு லண்டன் வந்து அங்கிருக்கற பிரச்சனைகளை சரி பண்ணிடறேன், அதுவரைக்கும் நீங்க சமாளிச்சிட்டு இருங்கப்பா சரி நான் ஃபோன் வைச்சிடறேன்” என ஃபோனை கட் செய்த ஈஸ்வரன் நிரஞ்சனிடம்

”கம்பெனியில ஏதோ பிரச்சனை அதைப்பத்தி அப்பா கவலையா இருக்காரு” என சொல்ல நிரஞ்சனோ

”சரிண்ணா அதை விடுங்க, எதுக்கும் நாம ரேகையை காட்டி ஜோசியம் பார்த்தா என்ன”

“டேய் நீ ஒரு டாக்டர் இப்படியா ஜோசியத்தை நம்புவ” என ஈஸ் கத்த அதற்கு நிரஞ்சன்

”அண்ணா நான் டாக்டர்தான் ஆனா கடவுள் கிடையாதே”

“அதுக்கு”

“அண்ணா வந்திருந்த ஜோசியர் ஏறக்குறைய உங்களுக்கு இப்ப நடந்துக்கிட்டு இருக்கறத அப்படியே சொன்னாரே”

“இதப்பாரு நிரஞ்சா எனக்கு இந்த மாதிரி விசயங்கள்ல நம்பிக்கையில்லை”

“எனக்கு இருக்கு” என்றான் நிரஞ்சன் உறுதியாக அதற்கு ஈஸ்

“நீ இங்க வந்து கெட்டுப் போயிட்ட, பேசாம லண்டனுக்கே திரும்பிப் போ”

“முடியாதுண்ணா உங்களோடதான் நான் இருப்பேன்”

“என்னை தொல்லை பண்ணாத நிரஞ்சா, நான் ப்ரான்ச் ஆரம்பிக்கனும்” என சொல்ல அதைக்கேட்ட குமரவேலோ

”ஆனா இப்பதானே மாப்பிள்ளை ஜோசியர் சொன்னாரு அந்த இடம் வேணாம்னு, முதல்ல உங்களுக்கு வந்திருக்கற கண்டத்துக்கு பரிகாரம் செஞ்சிப் பார்க்கலாம் மாப்பிள்ளை” அதற்கு ஈஸ்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“பரிகாரமா என்ன பரிகாரம், அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அவர் சொன்னதை நான் நம்பாதப்ப நான் எதுக்கு பரிகாரம் செய்யனும், அவர் சொல்றதை நீங்க வேணா நம்புங்க என்னை விடுங்க நான் ப்ரான்ச் ஆரம்பிக்கதான் போறேன், சீக்கிரமா நான் லண்டன் போயே ஆகனும், அங்க கம்பெனியில சில பிரச்சனைகள் புதுசா முளைச்சிருக்கு அதை முடிக்கனும்” என சொல்ல நிரஞ்சனோ

”ஆனா அண்ணா நீங்க இனிமேல இங்கதான் இருப்பீங்களாம், லண்டன் போக மாட்டீங்கன்னு ஜோசியர் சொன்னாரே”

“இதப்பாரு நிரஞ்சா எப்படி நீ கடவுள் இல்லையோ, அதே போல அந்த ஜோசியரும் கடவுள் கிடையாது சரியா அவர் சொன்னா அப்படியே நம்பனுமா என்ன, ப்ராக்டிகலா யோசி நம்மால இங்கயே இருக்க முடியாது புரியுதா” என சொல்ல நிரஞ்சனோ அதை ஏற்றுக் கொள்ளாமல் வாக்குவாதம் செய்தான்

“ஆனா அண்ணா”

“பேசாத அமைதியா உன் வேலையை போய் பாரு, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு, நான் போய் ப்ரான்ச் ஆரம்பிக்கற இடத்தைப் பார்த்து பேசி முடிச்சிட்டு வரேன்” என ஈஸ்வரன் சொல்ல நிரஞ்சனோ

”அண்ணா வேணாம்னா கொஞ்சம் பொறுங்க, நல்ல நாள் பார்க்காம எதுக்கு அந்த இடத்தை வாங்கி பில்டிங் கட்டனும் அதனால உங்களுக்கு ஏதாவது கெடுதல் நடக்கப் போகுது”

“முட்டாள் இப்படியே ஒவ்வொண்ணா பார்த்துக்கிட்டு இருந்தா, நம்மால எதையும் செய்ய முடியாது எந்த உலகத்தில இருக்க நீ ஜோசியமாம், கண்டமாம் போதும் போதும் இதுக்கு மேல அதைப்பத்தி பேசாத” என உரக்க கத்த

“ஆனா அண்ணா அவர் சொன்ன மாதிரிதானே உங்களுக்கு கடந்த கால நிகழ்வுகள் தெரியுது”

“ப்ளீஸ் நிரஞ்சா இதுக்கு மேல எதையும் பேசாத, நான் லண்டன்ல இருந்தப்ப கூட ஒரு கனவுதான் வந்திச்சி, இந்த ஊருக்கு வந்த பின்னாடிதான் எனக்கு நிறைய கனவுகள் வருது. நான் திரும்பவும் லண்டன் போயிட்டா இந்த கனவுகள் வராது, நான் சீக்கிரமாவே ப்ரான்ச் ஆரம்பிக்கனும் அதுக்காக நான் பணத்தை நிறைய கொட்டியிருக்கேன். இப்ப நான் எதையும் செய்யலைன்னா போட்ட பணம் மொத்தம் வீணாகும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”ஆனா அண்ணா”

“பேசாத நிரஞ்சா போ உன் ரூமுக்கு போ” என கத்த அவனும் என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாக சென்றுவிட அவர்கள் பேசியது எதுவும் புரியாத குமரவேலோ தன் பங்குக்கு ஈஸ்வரனை சமாதானம் செய்ய முயன்றார்

”மாப்பிள்ளை கொஞ்சம் அமைதியா இருங்க, இந்த இடம் வேணாம் வேற இடம் பார்க்கலாம்”

”நான் ஏற்கனவே ஒரு இடம் பார்த்து பாஸ்கரிடம் சொன்னேன். அவன் வந்ததும் எனக்கு சொல்லுங்க, அந்த இடத்தைப் பத்தி விசாரிக்க சொல்லி எத்தனை நாளாச்சி இன்னும் என்ன அவரு செய்றாரு”

“நீங்க சொன்னதை செஞ்சிக்கிட்டுதான் இருப்பான் மாப்பிள்ளை, ஏன் நீங்க இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க அமைதியா இருங்க, ஒரு முறை ஜோசியர் சொல்றதையும் நீங்க யோசிச்சிப் பாருங்களேன்” என சொல்ல அவரையே கோபமாக முறைத்தான் ஈஸ்வரன், அதோடு அவர் வாய் மூடிக் கொள்ளவும் அமைதியாக திரும்பி அறையை விட்டு வெளியேறினான். வாசலில் ஆனந்தி நிற்பதைக் கண்டு

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாராணி 2019-03-29 13:02
அவனியும் நாகேந்தரனும் ஒன்று சேர்வார்களா அடுத்த அத்தியாத்திற்காக காத்திருக்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாvijayalakshmi 2019-03-28 19:47
super eppadiyo avaniyum nagendiranum sernthuthanga inimela enna problem vara poguthu theriyalaye nice epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாJebamalar 2019-03-28 18:53
அவனி நாகேந்திரனுக்கு என்னவாகியிருக்கும்... Waiting for nxt epi mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாsasi 2019-03-28 10:14
Quoting madhumathi9:
wow nice epi.egarly waiting 4 next epi. :GL:

என்னாச்சி்ங்க மது ரொம்ப வேலையா பரவாயில்லை இந்த கமெண்ட் போதும் எனக்கு இதுவே எனக்கு உற்சாகத்தை தரும் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாmadhumathi9 2019-03-28 20:38
:yes: irandu naatkkalaaga veliyil alaivathaal perithaaga kodukka mudiyavillai.tired.sila nerangalil kathai padikkum pothey thoongi viduven.rest edukkaamal padippathaal. Kathaiyinaal alla :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாதீபக் 2019-03-28 09:48
Sis story going very interestingly :hatsoff: . Eagerly waiting for next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாSrivi 2019-03-27 23:34
Nice update sis
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாmadhumathi9 2019-03-27 21:02
wow nice epi.egarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 20 - சசிரேகாViji. P 2019-03-27 18:13
Super episode sasi. Congratulations. I am waiting for next episode. :clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top