Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகா

Unnaiye thodarven naane

 

சித்தூர்

”மாதவி மாதவி” என அவளது தோழி சொப்னா காலையில் 4 மணிக்கு எழுப்பினாள். உறக்கத்தில் இருந்தவள் மெதுவாக கண்கள் திறந்து

”என்னடி” என கேட்க

”கடைசி எக்ஸாம் எழுதாம இன்னும் நீ தூங்கிகிட்டே இருந்தா, உனக்காக உன் புருசன் வந்து எக்சாம் எழுதுவாரோ,  எழு எழு, கெட் ரெடி” என செப்னா சொல்ல சட்டென எழுந்து அமர்ந்த மாதவி

”இப்ப எதுக்கு இல்லாதவரைப் பத்தி பேசற, அவர் எங்க இருக்கிறாரோ என்னவோ” என தூக்க கலக்கத்தில் மாதவி உளற

”என்ன சொன்ன” என சொப்னா கேட்கவும்

”நத்திங் நத்திங்” என வழிந்துக் கொண்டே எழுந்து ரெடியாக ஆரம்பித்தாள்.

போன வருடம் திருப்பதியில் திருமணம் தடைப்பட்டதும் கமலா அத்தைக்கு பயந்து எழுந்து ஓடியவள் மறக்காமல் ஓட்டல் அறையில் இருந்த தனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியே வர எதேச்சையாக தன் தோழிகளைக் கண்டாள்.

”நீ இங்க என்னடி செய்ற” என ஒரு தோழி மாதவியிடம் கேட்க அதற்கு

“ஓ அது வந்து அது” என அவள் பேச திணறினாள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் " உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள்..." - நட்பு கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

மாதவி தெலுங்கு பெண்ணாக இருந்தாலும் காலேஜிலும், பள்ளியிலும் பலரிடம் தமிழ் பேசி பழகியதால் அவளுக்கு இரு மொழியும் நன்றாகவே வரும்

”என்னாச்சி மாதவி”

“ஒண்ணுமில்லை உங்களை பிடிக்கத்தான் வேகமாக வந்தேன், டூர் போலாமா” என கேட்க அவர்களும் அவளை தலை முதல் கால் வரை பார்த்தார்கள். எப்போதுமே அவள் பட்டுத் துணியிலும் அதிக நகைகளுடனும் இருந்த காரணத்தால் அவர்களுக்கு வித்தியாசமே தெரியவில்லை. ஏதோ கோயிலுக்காக அவளது தாத்தா மாதவிக்கு இன்னும் அதிகளவு நகைகளை போட்டு விட்டததாக நினைத்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு பஸ் ஏறி டூர்க்குண்டான ஷெட்யூல் படி முதலில் கொடைக்கானலுக்குச் சென்றார்கள்.

10 நாள் டூர் முடிந்து வந்த கையோடு காஞ்சிபுரத்தில் இருந்த தன் வீட்டுக்குச் சென்றவளுக்கு ஆச்சர்யம், வீடு பூட்டியிருக்கவும் தெரிந்தவர்களிடம் விசாரித்தாள். அவர்களோ தாத்தா ஜனார்த்தனன் தன் பெண் கமலா குடும்பத்துடன் பாரின் சென்று செட்டில் ஆகிவிட்டதாக கூறிவிட்டார்கள். திருமண மண்பத்தை விட்டு தான் ஓடியதால் தாத்தா கோவித்துக் கொண்டு பாரின் சென்றதாகவே நினைத்தாளே தவிர அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த விவரம் கூட தெரியவில்லை. ஆயினும் அவளது பேங்க் அக்கவுண்ட்டில் பணம் இருந்ததாலும் அவளே தனியாக பணம் நகை என அதிகமாக வைத்திருந்ததாலும் தன் தோழியிடம் தஞ்சம் புகுந்தாள். அஸ்வினால் தனக்கு ஏதாவது ஆபத்து வரும் என கூறவே சுந்தரியும் அவளது தோழியான சித்தூரில் வசிக்கும் சொப்னா என்பவள் வீட்டில் தங்க வைக்க மாதவியை ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு அனுப்பிவிட்டாள் சுந்தரி.

சித்தூரில் இருந்தபடியே பி.காம் 3-வது வருடம் படிக்க ஆரம்பித்தாள். அங்கு அவள் தங்கிய வீட்டில் இருந்த சொப்னாவும் சரி அவளது குடும்பத்தாரும் சரி மாதவியை சட்டென ஏற்றுக் கொண்டார்கள் அவளது பணக்கார தோரணை, புத்திசாலித்தனம் முக்கியமாக அவளைப் பற்றிய விபரங்களை விசாரித்து அறிந்துக் கொண்டார்கள். அதில் அவளது தாத்தா பாரினில் இருந்து வரும் வரை மாதவி தங்களுடன் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார்கள். அதனால் பெரிய குடும்பத்து பெண்ணை நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள். மாதவியும் தான் இருக்கும் நாட்களுக்கான பணத்தையும் சொப்னாவின் தந்தைக்கு தந்துவிட்டாள். நிறைய பணம் கொடுத்ததால் அவரும் எதுவும் பேசாமல் இருந்தார். நாட்களும் ஓடியது. கடைசி பரிட்சைக்கான நாளும் வந்துவிட்டது. இந்த பரிட்சை எழுதினால் போதும் அதோடு படிப்பு முடிந்துவிடும். இந்த முறை சொப்னாவின் தந்தை திருமால் என்பவரே டூருக்கு ஏற்பாடு செய்தார். அதற்கான அனைத்து ஷெட்யூல்களையும் மாதவியே தயாரித்தாள்.

தாத்தாவைவிட்டு வந்த இந்த 1 வருடத்தில் வெளி உலகத்தில் நன்றாகவே புழங்கினாள் மாதவி. யாரிடம் எப்படி பேசுவது? எப்படி பழகுவது வரை அனைத்தும் அறிந்துக் கொண்டாள். எந்தளவிற்கு அவளை தாத்தா வீட்டிற்குள்ளே வைத்து வளர்த்தாரோ அந்தளவு அவள் சித்தூர், ஹைதராபாத் என ஆந்திராவில் இருந்த பல சுற்றுலா தலங்களுக்கு தன் கல்லூரி தோழிகளுடன் சுற்றித் திரிந்தாள். தன்னுடைய பல வருட ஆசைகளை 1 வருடத்தில் நிறைவேற்றிக் கொண்டாள்.

எந்த கெட்டப் பழக்கத்திற்கும் தன்னை அடிமையாக்காமல் எந்த பிரச்சனையிலும் தான் மாட்டிக்கொள்ளாமல் புத்திசாலியாக இருந்தாள். படிப்பிலும் கெட்டிக்காரி என பெயர் எடுத்தாள். என்ன வெளி உலகை சுற்றினாலும் சரி, அவளது உடை இன்னும் மாறவில்லை அதே பட்டுத்துணியால் தைக்கப்பட்ட சுடிதாரும், பாவாடை தாவணியும் சேலையும்தான். நகைகளும் அதேபோல அதிகமாகவே அணிந்திருந்தாள். அவளுக்கு அது வித்தியாசமாகவோ கஷ்டமாகவோ இல்லை.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாAdharvJo 2019-04-08 17:56
Itinerary-k oru booklet ah :eek:
:dance: hero sir blush panikittu marubadiyum kottaiya vittuda poringa….fire on the mountain run run run :D

Sasi ma'am chance illai ninga mattume indha mathiri ellam imagine panuvingan ninaikiren.

Saravanan sounds like your trade mark hero :cool: interesting flow :clap: :clap: So ivaroda kalayanamum climax la thaan varumo? Masi's counters are simply entertaining :grin: why this vaidhegi kathirukal facepalm aalaukku oru plan oda suthuranga pa...

Pavam saravanan pesama vaidhegiye kalaynam panikalam...driver-a ippadi torture panurangale!!
yavv driver unakku ippadi oru kashtamana customer thevaiya........yappppppppppppppppaaaaaaaaaaaaaa steam yara irundhalum odi poiduvanga!! 10 nimisham late panadhukku ippadi oru blade ah :eek: thangadhuda sami :D

will ashwin remain good even after knowing abt saravanan? waiting.

thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாViji. P 2019-04-08 17:54
:grin: supera irukkuppa.adutha episode kkaga waiting :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாsaaru 2019-04-08 12:31
Pathutan Saravanan ha ha
Madhavi Nalla telivagita
Nice update sasi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாsasi 2019-04-08 11:31
Quoting madhumathi9:
:grin: haha corecta arumaiyaana idathil niruthivitteergale sasi :Q: amaam maadhavillu saravananai theriyuma?
:clap: (y) nice epi.egarly waiting 4 next epi. :clap: :thnkx: 4 this epi. :GL:

ஹிஹிஹிஹி அடுத்த எபியில ரெண்டு பேரையும் மீட் பண்ண வைச்சிடறேன் ஆனா மாதவி மனசுல என்ன இருக்கும்னு எனக்கும் தெரியாதுப்பா சோ சரவணன் என்ன பண்ணுவார்ன்னு இனிமேதான் யோசிச்சி கதை எழுதனும் நன்றி மது
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாvijayalakshmi 2019-04-08 11:15
nice epi madhavi so cute :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாsasi 2019-04-08 11:32
Quoting vijayalakshmi:
nice epi madhavi so cute :clap:

ஐ தாங்ஸ் விஜிக்கா
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாராணி 2019-04-08 07:58
மாதவியோட புத்திசாலித்தனம் சூப்பர் எப்படியெல்லாம் ப்ளான் பண்றாங்க சரவணனுக்கு மாதவி கிடைச்சிட்டா இனி மாதவி சரவணன் விசயத்தில என்ன முடிவு எடுப்பாளோ அடுத்த எபியில முடிவு இருக்கும்னு வெயிட் பண்றேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாsasi 2019-04-08 11:32
Quoting ராணி:
மாதவியோட புத்திசாலித்தனம் சூப்பர் எப்படியெல்லாம் ப்ளான் பண்றாங்க சரவணனுக்கு மாதவி கிடைச்சிட்டா இனி மாதவி சரவணன் விசயத்தில என்ன முடிவு எடுப்பாளோ அடுத்த எபியில முடிவு இருக்கும்னு வெயிட் பண்றேன்

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 03 - சசிரேகாmadhumathi9 2019-04-08 06:08
:grin: haha corecta arumaiyaana idathil niruthivitteergale sasi :Q: amaam maadhavillu saravananai theriyuma?
:clap: (y) nice epi.egarly waiting 4 next epi. :clap: :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top