(Reading time: 10 - 20 minutes)

“நீங்க சொல்றது சரிதான் சார். ஆனால் நம்ம நாட்டுச் சட்டம் அப்படி. அதை மாற்றவும் விடமாட்டாங்க. ரெட் ஹன்ட்டா பிடிக்கிற வரைக்கும் நாம தான் சார் சேப்டியா இருக்கணும். ப்ளீஸ் அலட்சியமா இருந்துராதீங்க. எங்க வீட்டிலும் பெண் பிள்ளைகள் இருக்காங்க. அதனால் தான் சொல்றேன்”

“சாரி சார். நீங்க இவ்ளோ தூரம் எங்களைக் கூப்பிட்டு சொல்றதே பெரிசு. எனக்குப் புரியுது. ஆனால் படிக்கிற பொண்ணு. இப்போ அவங்க காலேஜ்லேர்ந்து கல்விச் சுற்றுலா வேறே போறாங்க. அதுக்கு அனுப்பாமலும் இருக்க முடியாது. அதான் என்ன செய்யலாம்னு யோசிக்கறேன்”

அவர் சொல்லுவதில் உள்ள விஷயங்களும் இன்ஸ்பெக்டருக்குப் புரிந்தது, சற்று நேரம் யோசித்தவர்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மகியின் "வேலன்டைன்ஸ் டே" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“சார் , உங்க வீட்டுப் பொண்ணுக்கு ஷேடோ போட்டுடுங்களேன்” என்றார்.

“அது சரிதான் சார். அவளே கூட சமாளிச்சுருவா. ஆனால் எத்தனை நாளைக்குன்னு ஒரு வரைமுறை வேணுமே. அதற்கு அந்த செல்வத்த அர்ரெஸ்ட் பண்ணினால் எல்லா ப்ரோப்ளமும் சால்வ் ஆகிடுமே”

மேலும் சற்று யோசித்த இன்ஸ்பெக்டர்

“சார், எனக்கு ஒரு யோசனை. ஒருத்தர் மேலே குற்றவாளின்னு சந்தேகம் வந்துட்டா, அவரைப் பிடிக்க கார்னர் பண்ணுவோம். அது டிபார்ட்மென்ட் மட்டும் பண்ண முடியாது. சில கேஸ்களுக்கு வெளி ஆட்களும் சேர்த்துப்போம். ப்ரைவேட் டிடெக்டிவ்சும் இருக்காங்க. அதில் ஒருத்தர் எனக்கு ரொம்ப தெரிஞ்சவர். அவரை உங்க பொண்ணுக்கு ஷேடோவாவும் , அதே சமயம் செல்வம் நெருங்கினால் அதை சமாளித்து எங்களிடம் ஆதாரத்தோடு ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்தால் என்ன?” என்று கேட்டார்.

“ஹ்ம்ம்.. உங்க யோசனை சரிதான். ஆனால் எங்க வீட்டுப் பொண்ணுகிட்டே இப்போ இதைப் பற்றிச் சொன்னால் வேண்டாம்பா. இளங்கன்று பயமறியாதுன்னு சொல்ற மாதிரி, மறுத்து விடுவாள். அதையும் மீறி ஏற்பாடு செய்தால் அவளின் நடவடிக்கைகளே எதிரிக்கு காட்டிக் கொடுத்துடும்” என்ற பிரதாப்,

“சார், நீங்களே அவர் கிட்டே பேசி, க்ருத்திகாவிற்கு ஷேடோவாவும், வாய்ப்புக் கிடைத்தால் அந்த செல்வத்தைப் பிடிக்கவும் ஏற்பாடு செய்யுங்கள். நாங்களும் தெரியாத மாதிரியே நடந்து கொள்கிறோம். “ என்று கேட்கவே, இன்ஸ்பெக்டரும் ஒத்துக் கொண்டார்.

பிரதாப் மேலும் சில விவரங்கள் பேசிவிட்டு, அந்த டிடெக்டிவிற்கு கிருத்திகா போட்டோவும் அனுப்பச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அந்த இன்ஸ்பெக்டர் ப்ரித்வியை அழைத்துச் சுருக்கமாக விவரம் சொல்லி கிருத்திகாவின் போட்டோவும் அனுப்பி வைத்தார். அந்தப் போட்டோவில் தான் கிருத்திகாவை முதல் முதலில் பார்த்தான் ப்ரித்வி.

ப்ரித்வியிடம் இந்த அசைன்மென்ட் வந்த போது அவன் ட்ராவல் அரேஞ்ச்மென்ட் விஷயத்தில் பிஸியாக இருந்தான். விவரம் கேட்டுக் கொண்டவன், இதே டூர் தான் அவன் பாலோ பண்ண வேண்டிய கேஸ் என்று அறிந்த பின் தான் அவனே இந்த டூர் கைட்டாக மாறி, கிருத்திகாவை பாதுகாத்தான்.

ஹாய் பிரெண்ட்ஸ்.. இந்த வீக், நெக்ஸ்ட் வீக் கொஞ்சம் பர்சனல் வொர்க் இருக்கு. சோ ஹிஸ்டரி பார்ட் அதற்குப் பிறகு ஸ்டார்ட் ஆகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களோட ஆதரவிற்கு மிக்க நன்றிகள் பிரெண்ட்ஸ்.

தொடரும்!

Episode # 12

Episode # 14

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.