Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா

Kaanum idamellam neeye

ண்ணா இப்ப எப்படி இருக்கீங்க பரவாயில்லையா” என நிரஞ்சன் கவலையாகக் கேட்க ஈஸ்வரனோ தனக்கு எதிரே பார்க்கில் இருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்துக் கொண்டே

”ம்” என்றான்.

”க்ளீனிக்ல நீங்க செஞ்சதை நினைச்சி சுவாதி ரொம்பவே பயந்துட்டா”

”ம்”

”அதான் உங்களை வீட்டுக்கு கூட கூட்டிட்டு போகாம பார்க்குக்கு கூட்டிட்டு வரவேண்டியதா போச்சி” என சொல்ல ஈஸ்வரனோ

”நிரஞ்சா அங்க பாரேன் அந்த குழந்தைங்க எவ்ளோ அழகா விளையாடறாங்கல்ல” என கைகாட்ட நிரஞ்சனும் பார்த்தான். குழந்தைகளின் விளையாட்டைக் கண்டு மகிழ்ந்தான்.

”ஆமாம்ணா அவங்களை பார்க்கறப்ப மனசு லேசாகுது”

”எனக்கு என்னடா ஆச்சி”

”ஒண்ணும் இல்லைண்ணா வெறும் கனவுதான்”

“இந்த கனவு நிஜமாவே நடந்திருக்குமா”

“இருக்கலாம் இல்லாமலும் போகலாம்”

“என்னடா சொல்ற”

“அண்ணா நீங்க சொல்ற கனவு கதையில முடிவே இல்லையே, முடிவு என்னாச்சின்னு சொன்னாதானே அதை வைச்சி ஏதாவது தேடிப் பார்க்கலாம்”

என சொல்ல ஈஸ்வரனோ

”நிரஞ்சா போதும்டா என்னால இங்க இருக்க முடியலை வா போலாம்”

“வீட்டுக்குத்தானே தாராளமா போகலாம்”

”வீட்டுக்கு இல்லை வேற ஊருக்குப் போலாம்”

“லண்டனுக்கா”

“இல்லை கொஞ்ச நாள் வேற ஊர்ல தங்கியிருக்கலாம், என்னோட இந்த பிரச்சனை முடிஞ்சதும் திரும்பி வரலாம்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் " காதோடுதான் நான் பாடுவேன்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

”சரிண்ணா அப்படியே எங்க போலாம், ஊட்டி, கொடைக்கானல் இல்லை டெல்லி, ஆக்ரா, சிம்லா அப்படி போலாமா”

”ஓகே உன் விருப்பம்”

”சரிண்ணா இப்ப வாங்க கிளம்பலாம் நேரமாகுது” என சொல்ல ஈஸ்வரன் எழுந்து நின்றான். தான் அணிந்திருந்த உடையைக் கண்டு வியந்தான்

”என்னடா இது நான் வேட்டியை கட்டியிருந்தேன், இப்ப பேன்ட் சர்ட்ல இருக்கேன் எப்படி”

”சுவாதி வீட்ல உங்க பழைய ட்ரஸ் இருந்திச்சே அதை அவள் பத்திரமா வைச்சிருந்தா அதை உங்களுக்கு நான் போட்டுவிட்டேன்”

”அப்ப வேட்டி என்னாச்சி”

“கார்ல இருக்கு”

“மீனா கேட்பாடா”

“இந்த கலவரத்திலயும் மீனாவை மறக்கலையாண்ணா நீ”

“பாவம்டா நான் அவள்ட்ட ரொம்பவே தப்பா நடந்துக்கிட்டேன், தப்பா பேசிட்டேன்”

“தெரியும்ணா”

“அவள்ட்ட நான் மன்னிப்பு கேட்கனும்”

“இன்னிக்கு வேணாம் நாளைக்குப் போலாம்”

“சரி காலையில முதல் வேலையா அவள்ட்ட மன்னிப்பு கேட்கனும்”

“சரிண்ணா இப்ப வாங்க போலாம்” என சொல்லி கையோடு ஈஸ்வரனை அழைத்துக் கொண்டு ஆனந்தி வீட்டுக்குச் சென்றான் நிரஞ்சன்.

அங்கு குமரவேலும் வள்ளியும் காத்திருந்தார்கள். இருவரும் வரவே வள்ளி எதிர்பட்டாள்

”என்னாச்சி மாப்பிள்ளை, எங்க போயிருந்தீங்க” என கேட்க

”வெளிய ஊர் சுத்திப் பார்க்க போயிருந்தேன்” என ஈஸ்வரன் சொல்லவும் அதை நம்பாமல் நிரஞ்சனிடம்

”இதப்பாருங்க தம்பி இப்படி மாப்பிள்ளையை கூட்டிட்டு அலைஞ்சா எப்படி, அவர் இங்க வந்தது பிசினஸ் செய்யத்தானே”

“ஆமாம் அத்தை சும்மா ஜாலிக்காகத்தான்” என நிரஞ்சன் சொல்ல குமரவேலோ

”சரிங்க மாப்பிள்ளை வாங்க சாப்பிடுவீங்க” என ஈஸ்வரனை அழைக்க அவனோ ரோபோ போல இயந்திரதனமாக நடந்து அவருடன் செல்ல தனியாக இருந்த நிரஞ்சனை பிடித்து உலுக்கினாள் வள்ளி

”இதப்பாருங்க தம்பி, நீங்க செய்றது சரியில்லை உங்களுக்கு மீனாவை பிடிச்சிருக்குன்னா அவளை தேடி நீங்க போங்க, எதுக்காக மாப்பிள்ளையையும் இழுத்துக்கிட்டுப் போறீங்க”

“அய்யோ அத்தை சத்தியமா சொல்றேன் நாங்க வெளிய போயிட்டு வரோம், மீனாகிட்ட போகலை”

“இந்த தெருவில இருக்கறவங்க என்கிட்ட சொல்லிட்டாங்க தம்பி, மாப்பிள்ளை மீனா வீட்டுக்கு போயிருக்காரு அப்புறம் நீங்க போனீங்க அப்புறம் ரெண்டு பேரா எங்கயோ போய் இப்பதான் வர்றீங்க என்ன இதெல்லாம்”

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகாvijayalakshmi 2019-04-12 19:10
oh god eshku ennacho? pavam niranjan
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகாAdharvJo 2019-04-10 20:06
facepalm haiyoda sasi ma'am ninga twist kudukuren solli ena enamo panuringale :sad: Telugu movie range-ku going :D viruvirupana update :clap: :clap:
ninga sudden ah esh 25-ku irukatti ippo indha baby bro-va baby-a mathitinga.Niranja is one of the stable and supportive character n my favrt one. ninga avroda score irakki vida try panuringale :Q: compared to Esh sure ah sollalam Niranjan is matured so far!! andha valli aunty enamo avanga payana vittutu pondra mathiri scene poduranga 3:) and Esh oda depressed state purinjikalam but how can he forget how caring his baby bro is steam if esh firmly express his interest towrds meens pavam indha sweet bro vitukudupan adhaiyum solli tholaima…..niranja is so strong abt his bonding n his love towards esh is vry clear bt esh is not ready to accept steam sema irritate panuraru pa ivaru :P mothathula ivarukku meen's vitta vera yarum vendam pole irukku ji.. enanu konjam parunga :cool: waiting for next epi. thank u n keep rocking
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகாராணி 2019-04-10 19:19
இது என்ன ஈஸ்வரோட நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சா பாவம் மீனாவோட அப்பாவுக்கு ஆன மாதிரி இவருக்கு ஏதாவது ஆயிடுமா என்ன :sigh:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகாmadhumathi9 2019-04-10 18:56
:Q: Eesvaranai vida niranjanin nilaiparithaabamaaga irukkirathu.than annanin nilaiyai yaaridamum solla mudiyaamal thindaaduthu ena niranjanukku sodhanaiyaaga irukku.eesvaran engu poga mudiyum :Q: kanavu kandu thaane ezhunthu nadanthu poyirukkalaam ena thonuthu.egarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :GL: sasi.
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top