(Reading time: 15 - 29 minutes)

நீங்க சொன்னதோட அர்த்தம் நேத்து புரியல இப்போ புரியுது”,என்றவன் லேசாய் சிரித்துவிட ஆத்விக் நடந்ததை ரேஷ்வாவிடம் விளக்கினான்.இருவருமாய் சேர்ந்து சிரிக்க ஜீவிகா ஜெயந்தை முறைத்தாள்.

எதுக்கு போன் பண்ணா எதை பேசிட்டு இருக்கீங்க!”

ஜீ எங்க ப்ரண்ட் கல்யாணத்துக்கு எங்களோட கிப்ட் இதுல என்ன பிரச்சனை உனக்கு?”

..சார்க்கு இந்த ஐந்நூறு ஆயிரத்துக்கெல்லாம் கிப்ட் கிடைக்காது..நடிச்சா ஹீரோவா தான் நடிப்பீங்க?”

அப்கோர்ஸ் எஸ் ஜீ!”,என்றவன் சிரிக்க ஆத்விக் இடையிட்டான்,

ஜீ கரெக்ட் டயலாக் பட்தப்பான ஆள்கிட்ட சொல்லிட்ட

டேய் நீ அடங்கு ஏன் டா இப்படி பண்ற!”

லூசு இரண்டு பேரோட மெமரபிள் டேஸ் அது நாங்க கிப்ட் பண்ணதா இருக்கட்டும்னு நினைச்சோம்..ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வருவியா அதை விட்டுட்டு..”

அப்படிங்குற!!சரி ஆனா இதே மாதிரி உங்க கல்யாணத்துக்கு நா வாங்கி குடுப்பேன்னு தப்பா நினைச்சுறாதீங்க..சாப்ட மட்டும் தான் வருவேன் மொய் எல்லாம் வைக்க முடியாது சொல்லிட்டேன்.”

அதான..இருந்தாலும் நீ மச்சான் அக்கவுண்டை தான காலி பண்ணுவ அதனால வேணாம்..சரி சொல்லு ரேஷ் பத்தி சொல்லிட்டியா?”

ஹா ஹா இல்லயே நேர்ல மீட் பண்ணுங்கனு சொல்லிருக்கேன்.”

சூப்பர் நீங்க ஒன் வீக் ட்ரிப் முடிச்சுட்டு வந்தப்பறம் சொல்லுங்க நா சென்னை வரேன் பக்காவா ஒரு கெட் டு கெதர் ப்ளான் பண்ணலாம்.”

கண்டிப்பா சொல்றேன்.அண்ட் தேங்க் யூ சோ மச் பார் தி கிப்ட்..மை மாம்ஸ் என்னை வேற்று கிரகவாசி மாதிரி பாக்குற காரணத்தினால் போனை வைக்குறேன் மை லார்ட்..பைஎன்றவள் போனை வைத்துவிட்டு அவனைப் பார்க்க அவனோ,

பொண்ணுக்கு அதிர்ந்து கூட பேசத் தெரியாதுனு உங்கம்மா சொன்னாங்களாம்.நீ என்னனா இந்த வாய் பேசிட்டு இருக்க

உங்க மாமியார் சொன்னதுக்கெல்லாம் நா எப்படி மாம்ஸ் பொறுப்பாக முடியும்.”

ம்ம் நீ நடத்து

உங்களுக்கு இந்த கிப்ட்ல எதுவும் வருத்தமில்லையே!”

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல இந்தகாலத்துல இப்படி ப்ரெண்ட்ஸ் கூட இருக்காங்களானு ஆச்சரியமா இருக்கு.”

அழகாய் சிரித்தவள் ஏதோ நினைவு வந்தவளாய்,”நா நேத்தே உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்னு நினைச்சேன் கேட்கலாமா?”

என்ன ஜீவி சொல்லு

இல்ல நீங்களும் சரி நானும் சரி வீட்டுக்கு ஒரே பசங்க.உங்க அப்பா அம்மாவை பாத்துகுறது இனி காலம் முழுக்க என் கடமை.கடமைனு சொல்றதை விட எனக்கான உரிமைனு தான் சொல்லனும்.உங்களை ஏத்துக்க சம்மதிக்கும் போதே அதில் அவங்களும் அடக்கம் தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூர்ணிமா செண்பகமூர்த்தியின் "இதோ ஒரு காதல் கதை..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அதே மாதிரி என் அம்மாவையும் அவங்க கடைசி காலம் வரை நா தான் பாத்துக்கணும்.அப்பா இருந்துருந்தாலும் அது என் வேலை தான்.இப்போ என்னோட பொறுப்பு இன்னும் அதிகம் இல்லையா?”

ஜீவி நீ சொல்ல வர்றது புரியுது கண்டிப்பா உங்க அம்மாவும் இனி என் பொறுப்பு.நீ எங்க வீட்டு பொண்ணு னா நா இந்த வீட்டு பையன் அவ்ளோ தான்.கவலையேபடாத

தேங்க்ஸ் ஜெய் அம்மா ரொம்ப இன்டிபெண்டன்ட்தான் எல்லா நேரத்துலயும் நம்மளை கண்டிப்பா எதிர்பார்க்க மாட்டாங்க தான்  இருந்தாலும் சில விஷயங்களை உங்ககிட்ட இப்போவே ஷேர் பண்ணிரணும்னு தோணிச்சு அதனால தான் சொன்னேன்.”

ஜீவி நீ இவ்ளோ தயங்குறதுக்கு ஒண்ணும் இல்ல.இந்த குடும்பத்துக்கு உன் அப்பாவோட இடத்துல இனி நான் இருக்கேன்.நீ நீயா இரு எப்பவும் நீசந்தோஷமா இருந்தா நம்ம ரெண்டு குடும்பமும் சந்தோஷமா இருக்கும்.”

ஜெய் நிஜமா நீங்க இவ்ளோ ப்ராக்டிகலானா ஒருத்தரா இருப்பீங்கனு நா நினைக்கவே இல்ல.நா ரொம்பவே லக்கி..தேங்க் யூ ஜெய்.”

நானும்தான்.”,என்றவன் எழுந்து மறுவீட்டு அழைப்பிற்குச் செல்ல தயாரானான்.

ஆத்விக்  அலுவலகத்தை அடைந்தநேரம் ஷான்யா அவளது அறையில் மும்முரமாய் எதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள்.அவனைக் கண்டதும் ஐந்துநிமிடம் கழித்து அவனது அறைக்குள் நுழைந்தாள்.

ஹாய் ஷான்யா சொல்லுங்க இன்னைக்கு மீட்டிங்ஸ் எதுவும் இருக்கா?”

இல்ல சார்..பட் இந்த ஆர்டர் எக்ஸ்போர்ட்ஸ்ல அமௌண்ட் டேலி ஆகல அதை கவனிக்காமயே அப்ரூவ் பண்ணிருக்கோம்.நானும் நாலஞ்சு தடவை செக் பண்ணிட்டேன்.”

அவள் கொடுத்த பைலை வாங்கிப் பார்த்தவனுக்கு அதிலிருந்த தவறு புரிய சம்மந்தப்பட்டவரை அழைத்து வேண்டிய நடவடிக்கையை எடுக்க வைத்தான்.

குட் ஷான்யா கொஞ்ச நாள்ளயே நல்ல பிக் பண்ணிருக்கீங்க..”

தேங்க் யூ சார்.”

இந்த ஒன் லைன் அன்சரை விடவே மாட்டீங்க போலயே!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.