(Reading time: 15 - 29 minutes)

வெரிகுட்..என் மாமனார் எனக்கு நல்லதுதான் பண்ணிருக்காரு அவரைப் போய் குறை சொல்றியே

நீங்க புரியாம பேசுறீங்க..என்னை பார்த்து என் பேமிலியை எடை போடாதீங்க..எப்பவும் கேட்பீங்களே அதிகம் பேச மாட்டியானு..அது எனக்கு எழுதப்படாத ரூல் தேவையில்லாம யார்கிட்டையாவது பேசியோ சிரிச்சோ எதாவது பிரச்சனைனு வந்தா முதல் அடி எனக்குதான் விழும்.”

என்ன அடிப்பாங்களா?!”

எங்கப்பாக்கு எங்க சந்தோஷத்தை விட அவரோட கட்டுப்பாடுகள் தான் முக்கியம்.அதை மீறனும்னு நினைச்சா பெத்த பொண்ணுனு கூட பார்க்கமாட்டார் வெட்டி போட்டுருவார்.எனக்கு கனவு லட்சியம்னு நிறைய இருக்கு ஆத்விக்..

அதையெல்லாம் விட்டுட்டு தனிப்பட்ட பிரச்சனைகளை இழுத்துகிட்டு என்னால ஓட முடியாது.உங்களை கெஞ்சி கேட்குறேன் இந்த விஷயத்தை இப்படியே விட்டுருங்க”,என்றவளின் கண்கள் கூட கலங்க ஆரம்பித்திருந்தது.அதை அவசரமாய் மறைத்தவளாய் எழுந்து வேகமாய் கீழே சென்றுவிட்டாள்.

ஆத்விக்கோ மொத்தமாய் தன் காதலில் லாரி லாரியாய் மண்ணை அள்ளி கொட்டிவிட்டு ஒன்றும் தெரியாதவளைப் போல் செல்பவளைப் பார்த்து மொத்தமாய் கடுப்பாகியிருந்தான்.

ரேஷ்வாவிற்கு ஒவ்வொரு நாளின் ஷுட் முடிந்த பிறகும் அத்தனை திருப்தியாய் இருந்தது. நிச்சயம் படம் நல்லபடியாய் வெளிவரும் என்று நம்பினான்.அதற்கும் மேலாக ரினிஷாவுடனான நட்பு மேலும் மனதை இலகுவாக்கியிருந்தது.

நட்பு என்று கூறுவதை விட அவளிடம் ஒருவித புது உணர்வு தான் தோன்றியிருந்தது.அந்த துரு துரு கண்களும் நட்பான பேச்சும் அவனை வெகுவாய் கவர்ந்தது.மேலும் அவர்கள் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் அத்தனை இயல்யாய் இருப்பதாய் டைரக்டர் கூறிக் கொண்டேயிருந்தார்.

அன்றும் ஷாட் முடிந்து டைரக்டர் அவனோடும் ரினிஷாவோடும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

ரேஷ்வா ஜி மார்க் மை வர்ட்ஸ்..உங்க ரெண்டு பேர் கோம்போ நிச்சயம் க்ளிக் ஆகும்னு தோணுது.நம்ம இன்டஸ்ட்ரீல இந்த மாதிரி ஆன் ஸ்கீரின் பேர் அமையுறது ரொம்ப ரேர் ஆனா ஒன்ஸ் செட் ஆச்சுனா ஆல்வேஸ் க்ரோத் பீக்ல தான் இருக்கும்.”

இருவரும் சம்மதமாய் புன்னகைத்துக் கொள்ள அதற்குள் அவருக்கு வந்த அழைப்பை ஏற்று எழுந்து சென்றார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "சிவகங்காவதி..." - காதல் கலந்த சரித்திரக் தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பட் ரேஷ் ஜி நிஜமாவே எனக்கும் அந்த டிபரன்ஸ் தெரியுது.ஐ கேன் பீ மோர் கம்பர்டபிள் வித் யூ.இப்படி ஒரு கோ ஸ்டார் இதுவரை எனக்கு அமையல.”

தேங்க்ஸ் ரினிஷா பட் நீங்களும் ரொம்பவே ஸ்போர்டிவ்வா சப்போர்ட் பண்றீங்க.எந்த ஒரு சீனையும் நீங்க மட்டும் நல்லா பண்ணணும்னு நினைக்காம,கோ அக்டரை டாமினேட் பண்ண நினைக்காம ப்பலண்ஸ்டா கொண்டு போறீங்க ரியலி க்ரேட்..”

ஜி உங்ககிட்ட இப்படி ஒருகாம்ப்ளிமெண்ட் கிடைக்குது அம் ஹானர்ட் தேங்க் யூ சோ மச்

அல்மோஸ்ட் இன்னைக்கு வொர்க் ஓவர் பேக்கப் தான்னு நினைக்குறேன்.என்ன பிளான்?”

இப்போ வர ஒண்ணுமில்ல ஜி.எனக்கு இந்த கூட்டம்னாலே அலர்ஜி அதனாலேயே எங்கேயும் போக மட்டேன்.அதுவும் அவுட்டோர் ஷீட்னா கேக்கவே வேணாம்.பட் இன்னைக்கு வெதர் நல்லா இருக்கு இங்க..எனக்கு பிடிச்ச டெம்பிள் ஒண்ணு இருக்கு அங்க போகலாமானு தோணுது

ஓ நைஸ்..”

உங்களுக்கு வேற ப்ளான் இல்லைனா வாங்களேன் சேர்ந்தே போய்ட்டு வரலாம்.சீக்கிரமா போனா கூட்டம் இருக்காது.அட் தசேம் டைம் ப்ளசண்டா இருக்கும்.”

என்ன சொல்வதென யோசித்தவன் அவள் தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்து சரி என்று கூறியிருந்தான்.இருவருமே ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததால் கிளம்பித் தயாராகி ரேஷ்வாவின் காரிலேயே கிளம்பினர்.

ரினிஷா இயல்பாய் அவள்போக்கில் பேசிக் கொண்டே வந்தாள்.அவளைப் பற்றி அவள் திரைத்துறைக்கு வந்ததைப் பற்றி என என்னென்னவோ.

அக்சுவலி நா ரொம்ப மிடில்க்ளாஸ் பேமிலி பேக்ரவுண்ட்தான்.சோ சினிமா பத்தியெல்லாம் ஐடியாவே இல்ல.காலேஜ் படிக்கும்போது மிஸ் கேரளா ஆடிஷன் நடந்தப்போ சரி நாமளும் ட்ரை பண்ணிப் பார்ப்போமேனு அட்டெண்ட் பண்ணேன்.

அந்த இயர் டைட்டில் வின்னர் நான்தான்.அந்த போட்டோஸ் பாத்துட்டு தான் பர்ஸ்ட் மலையாளம் மூவி ஆபர் வந்தது.என் அண்ணாக்கு இதுல இஷ்டமே இல்ல.அதனால வேண்டாம்னு சொல்லிட்டான்.

அப்பறம் லைப் எப்பவும் போல நார்மலா தான் போச்சு சடனா ஒரு கால் தமிழ் இன்டஸ்ட்ரியோட லெஜென்ட் டைரக்டர்கிட்ட இருந்து.என்னால நம்பவே முடில.நம்மளால முடியும்னு தோணிணதுனால தான கூப்டுறாங்க நாம ஏன் ட்ரை பண்ணக் கூடாதுனு நினைச்சேன்.

அண்ணாவையும் அம்மா அப்பாவையும் கன்வின்ஸ் பண்ணி பர்ஸ்ட் படம் சைன் பண்ணேன்.தட்ஸ் ஹவ் மை ஜெர்னி ஸ்டார்டட்.இப்போ வரையும் அப்படியே போய்ட்டு இருக்கு.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.