(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 07 - ஸ்ரீ

Unnodu naanirukkum mani thuligal

மயிலிறகே... மயிலிறகே

வருடுகிறாய் மெல்ல...

மழை நிலவே... மழை நிலவே

விழியில் எல்லாம் உன் உலா...

 

உயிரை தொடர்ந்து வரும்

நீதானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே...

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கண் எழுத்து அன்பே...

மயிலிறகாய் மயிலிறகாய்

வருடுகிறாய் மெல்ல

 

மழை நிலவே மழை நிலவே

விழியில் எல்லாம் உன் உலா...

ஓர் இலக்கியம் நம் காதல்..

வான் உள்ள வரை வாழும் பாடல்

காலையில் ஜெயந்திற்கு முன் எழுந்திருந்தவள் அவனுக்கான காபியோடு தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.

“குட்மார்னிங் மாப்பிள்ளை சார்!”

“எழுந்தவுடனே ஆரம்பிச்சாச்சா!குட்மார்னிங்..”என்றவாறே அவள் கையிலிருந்த  காபியை வாங்கிக் கொண்டவன்,

“என்ன பேப்பர் இது?”

“நேத்து ஆத்விக் கிப்ட் அம்மாகிட்ட கொடுக்குறேன்னு சொன்னானே அதுதான் அம்மா குடுத்துவிட்டாங்க.இந்தாங்க நீங்களே பிரிங்க..எப்படியும் எதாவது மொக்கை கிப்டா தான் இருக்கும்”,என்றவள் அவனருகில் அமர்ந்தாள்.

உள்ளே பிரித்துப் பார்த்தவன் ஆத்விக் ரேஷ் என்ற பெயர்களில் இரு கவர்கள் இருப்பதை கண்டான்.

“இது யாரு ரேஷ்?”

“இதுவும் என்னோட ப்ரெண்ட்தான்..ஆனா எங்களைவிட பெரியவர்.”

“பெரியவரா??”

இவரைப் பத்தி நா எந்த டீடெயிலும் சொல்ல மாட்டேன்.சீக்கிரமே நேர்ல மீட் பண்ணுவோம் அப்போ தெரிஞ்சுக்கோங்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சந்யோகிதாவின் "வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

சரி தான்”,என்றவன் ஆத்விக் கவரைப் பிரித்துப் பார்க்க அதனுள் சிங்கப்பூர் சென்று வருவதற்கான பிளைட் டிக்கெட் இருவரின் பெயரிலும் இருந்தது.

ஹே என்ன இது இவ்ளோ காஸ்ட்லியா!!”

பாரேன்..பாசக்கார பயபுள்ளை ரொம்ப பீல் பண்ணி வாங்கிருக்கான் சரி விடுங்க இன்னொரு கவரை பிரிங்க..”

ரேஷ்ஷின் கவரைப் பார்த்தவனுக்கு ஆச்சரியம் அதிர்ச்சியாகி இருந்தது.ஒரு வாரம் அவர்கள் அங்கு தங்குவதற்கான ஹோட்டல் விவரங்கள் இருந்தன.

ஜீவி!!!”

சரி சரி வொய் டென்ஷன்..விடுங்க இப்போவே இரண்டு பேரையும் ஒரு காட்டு காட்டிருவோம்”,என்றவள் ரேஷ்ஷை அழைத்து ஆத்விக்கையும் அழைத்து கான்ப்ரன்ஸ் கால் செய்து ஸ்பீக்கரில் போட்டாள்..

ஹலோ ஜீ!”

இரண்டு ஈர வெங்காயமும் என்கிட்ட என்ன அடி வாங்க போறீங்கனு மட்டும் பாருங்க.”

ஹா ஹா மொக்கை ஜோக் தான் இருந்தாலும் சிரிச்சுட்டேன்..எரும மாடு போனை வைச்சுரு இல்ல கொன்றுருவேன்.மனுசன தூங்க விடுறியா?”

டேய் தடிமாடு என் மாமா முன்னாடியே என்னை திட்டுறியா கண்ல பட்றாத சொல்லிட்டேன்.”

மறுமுனையில் அடித்து பிடித்து எழுந்தவனுக்கு அப்போது தான் அவளுக்கு திருமணமான நினைவே வந்தது.

ஏய் நேத்து தான கல்யாணம் ஆச்சு காலங்காத்தாலேயே கால் பண்ணிருக்க என்னாச்சு?”

என்னாச்சா நீங்க ரெண்டு பேரும் கிப்ட்ங்கிற பேர்ல பண்ணி வச்சுருக்குற காமெடியை பார்த்து மச்சான் ஷாக்ல இருக்காங்க..நீங்களே பேசுங்க..”

பேசுமாறு சைகை செய்தவளை பாவமாய் பார்த்தவாறு “ஹலோ”,என்றான்.

ஹாய் மிஸ்டர் ஜெயந்த்..நா ரேஷ்….விஷ் யூ அ ஹாப்பி மேரிட் லைப்..”

தேங்க் யூ..”

மச்சான் அடுத்த நாளே வேலையை ஆரம்பிச்சுட்டா பாத்தீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.