(Reading time: 15 - 29 minutes)

ம்ம் வாய்ப்புகள் வரும்போது நாம பயன்படுத்திக்காம போய்ட்டோம்னா அப்பறம் நாமளே தேடி போனா கூட கிடைக்காம போய்யடலாம்.நா இதான் என் ப்ரொபஷன்னு முடிவு பண்ணி தான் வந்தது. அம்மாக்கு இஷ்டம் இல்ல தான் இருந்தாலும் ஒண்ணும் சொல்லல.”

ம்ம் எனக்கு இன்டஸ்ட்ரீல ப்ரெண்ட்ஸ் ரொம்ப கம்மி..சொல்ல போனா யாருமே கிடையாது.யார் மேலயும் பெருசா நம்பிக்கை இருந்ததில்ல.பர்ஸ்ட் டைம் இப்படி ஒரு ப்ரெண்ட்.நா நானா இருந்து ரொம்ப நாள் ஆச்சு.முகத்துக்கு போடுற மேக்கப்பை மனசுக்கும் போட்டுதான் வெளில வரணும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் " எதிர் எதிரே நீயும் நானும்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

பட் உங்ககிட்ட அப்படி ஒரு மாஸ்க் அவசியமில்லனு தோணுது..கண்டிப்பா இன்டஸ்ட்ரீல எனக்கு இருக்கப் போற பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ப்ரெண்ட் நீங்க தான்னு நினைக்குறேன்.

எல்லார்கிட்டேயும் அந்த கம்போர்ட் பீல் வந்துராது இல்லையா?சாரி ரொம்ப பேசுறேனோ?”

நீங்க சொல்ற எல்லாமே உண்மைதான்.நானும் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப் தான் எல்லார்கிட்டேயும்.மெயின் ரீசன் இந்த சினிமா உலகம் நாம உயரத்துல இருக்கும்போது தலைமேல தூக்கி வச்சு கொண்டாடும் ஆனா கொஞ்சம் மார்க்கெட் குறைஞ்சாலும் குப்பைல தூக்கி போட்டுட்டு போய்டும்.நா ரெண்டு சைடையுமே பார்த்தவன் அதனாலயே அளவா பழகுவேன்.

ஆனா இப்போ கொஞ்ச நாளா லைப்ல நிறைய மேஜிக் நடந்துட்டு இருக்கு என்னோடா இரண்டு ப்ரெண்ட்ஸ் தான் அதுக்கு காரணம்.இப்போ நீங்களும்.”,என்றவன் சிநேகமாய் சிரித்தான்.

ப்ரெண்ட்னு சொல்லிட்டீங்க இன்னும் ஏன் வாங்க போங்கனு வா போனே சொல்லலாம்ப்ரெண்ட்ஸ்?”,என்றவள் நீட்டிய கரத்தைப் பற்றி குலுக்கியவாறே பயணத்தை தொடர்ந்தான்

தொடரும்...

Episode # 06

Episode # 08

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.