(Reading time: 15 - 29 minutes)

அது..அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்.”

கொஞ்சம் தலைவலியா இருக்கு வாங்களேன் ஒரு காபி சாப்ட்டு வரலாம்?”

“!!”

உங்களுக்கு வேண்டாம்னா பரவால்ல எனக்கு கம்பனி கொடுக்கலாமே!”

ம் போலாம் சார்.”

டெரரர்ஸில் அமைக்கப்பட்டிருந்த பேன்ட்ரியில் சென்று இருவருக்குமாய் காபி வாங்கிக் கொண்டு அங்கிருந்த டேபிளில் அமர்ந்தனர்.பொதுவாய் ஆத்விக் இதுபோல வருவான் என்பதால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாக தோன்றவில்லை.

அப்பறம்..உங்களைப் பத்தி எதாவது சொல்லுங்களேன் ஷான்யா

பெருசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல சார்.நா அப்பா அம்மா.கூடபொறந்தது ஒரு அக்கா மேரேஜ் ஆகி மலேசியால செட்டில் ஆய்ட்டா.என்னோட எய்ம் ஐஏஎஸ் தான்.பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்.இன்னும் இரண்டு மாசத்துல எக்ஸாம்.கண்டிப்பா க்ளிக் ஆய்டும் அதுவரை புதுசா எதாவது கத்துக்கலாம்னு தான் ஜாப்ல சேர்ந்துருக்கேன்.”

ஓ தட்ஸ் நைஸ்.அமைதியா இருக்குறவங்களை நம்பக் கூடாதுனு சொல்றது சரியா தான் இருக்கு.சரியான படிப்பாளியா நீங்க!”

ஐயோ அப்படியெல்லாம் இல்ல.இது சின்ன வயசுல இருந்தே என்னோட பேஷன்.”

ஜஸ்ட் கிட்டிங்.கண்டிப்பா செலெக்ட் ஆய்டுவீங்க டோண்ட் வொரி.எனக்கு கூட சில வருஷமா ஒரு ஆசை இருக்கு தெரியுமா!”

“??”

என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு ஒருத்தி இருக்கா அவளை கல்யாணம் பண்ணிகிட்டா லைப் ரொம்ப நல்லாயிருக்கும்னு தோணுது

..வாழ்த்துக்கள் சார்.அப்போ சீக்கிரமே கல்யாண சாப்பாடு போட போறீங்க?”

எங்கங்க இன்னும் அவகிட்ட லவ்வே சொல்லல..”

என்ன இன்னும் சொல்லலையா சில வருஷ ட்ரீம்னு சொன்னீங்க அப்பறம்?”

சொல்லலாம் தான் ஆனா நெகட்டிவா பதில் வந்துட்டா அதானால தான்..”

உங்களை போய் ரிஜெக்ட் பண்ணுவாங்களா சார்..தனக்காக இத்தனை வருஷம் காத்துட்டு இருக்குறது தெரிஞ்சா எந்த பொண்ணும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க…”

அப்படிங்குறீங்க..ஐஏஎஸ் எல்லாம் படிக்குறீங்க நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்”,என்ன் ஒரு கப் காபியை பருகியவாறே அவளைப் பார்த்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அஹெம்..ஷான்யா ஐ அம் இன் லவ் வித் யூ.நீ என் லைப் பார்ட்னரா வந்தா நல்லாயிருக்கும்னு பீல் பண்றேன்.இப்போ இல்ல உன்னை முதன்முதலா பார்த்தப்போவே.ஆனாலும் படிக்குற வயசுல எதுவும் வேண்டாமேனு உன்கிட்ட சொல்லல.அப்பறம் உன்னைத் தேடி வந்தப்போ நீ ஊரைவிட்டு போய்ட்டதா சொன்னாங்க.

உனக்காக மட்டுமே இத்தனை வருஷமா காத்துட்டு இருந்தேன்.இதை குருட்டு நம்பிக்கைனும் சொல்லலாம்,பைத்தியகாரத்தனம்னும் சொல்லலாம்.ஆனா எல்லாத்தையும் மீறி இப்போ இந்த செகண்ட் நீ என் கண் முன்னாடி இருக்க இந்த ஒரு விஷயமே போதும் நீ எனக்காக பொறந்தவ தான்னு சொல்றதுக்கு.

அல்ரெடி ரொம்ப நாள் வேஸ்ட் பண்ணிட்டேன்.இப்போகூட ப்ளான் பண்ணியெல்லாம் உன்கிட்ட சொல்லல.எதார்த்தமா சொல்ல தோணிச்சு சொல்லிட்டேன்.என் பேரண்ட்ஸுக்கும் தெரியும்.நா ஒரே பையன் சோ என் விருப்பத்துக்கு மாறா யோசிக்க அவங்ககிட்ட ஒண்ணும் இல்ல.நீ இப்போவே பதில் சொல்லணும்னு கூட இல்ல யோசிச்சு பொறுமையா சொல்லு ஆனா நாளைக்குள்ள ஓ.கே வா?”

மூச்சு விடாமல் பேசி முடித்தவனை பார்த்து பயத்தோடு அமர்ந்திருந்தாள் ஷான்யா.அவன் தன்னை பார்த்திருப்பதைக் கூட மறந்து அமர்ந்திருந்தாள்.

ஷான்யா ஆர் யூ ஓ.கே?”

ஆங்..சார் இது கண்டிப்பா எனக்கு பெரிய ஷாக் தான்.இப்படி ஒரு விஷயத்தை நா கண்டிப்பா எதிர்பார்க்கல.அதே நேரம் இது எப்பவுமே நடக்க போறதில்ல சார்..ப்ளீஸ் இந்த விஷயத்தை இதோட விட்டுருங்க.”

அவசரத்துலயோ பதட்டத்துலயோ எந்த முடிவும் எடுக்காத ஷான்யா..நா ஒண்ணும் ரோட் சைட் ரோமியோ கிடையாது.இப்போ கூட உன்னோட என் லைபபை ஷேர் பண்ணிக்கணும்னு தான் சொல்றனே தவீர உன்னை லவ் பண்றேன்னு சொல்லல.”

ஐயோ ஆத்விக் ப்ளீஸ்.இந்த பேச்சை இதோட விட்டுருங்க.என் அப்பாக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது.”

நா உன்னை தான கல்யாணம் பண்ணிக்க போறேன் உன் சம்மதத்தையே சொல்லாம உங்கப்பாவை பத்தி ஏன் பேசுற?”

ப்ச்ச் நா ஊரைவிட்டு போனதுக்கு காரணம் டீரான்ஸ்பர் மட்டுமில்ல.ஒரு பையன் என்னை லவ் பண்றேன்னு சொல்லி பின்னாடி சுத்தி அப்பாக்கு விஷயம் தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆய்டுச்சு.அதுக்காகவே டிரான்ஸ்பர் அப்ளை பண்ணி என்னை இங்க இருந்து அழைச்சுட்டு போய்ட்டார்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.