(Reading time: 12 - 23 minutes)

“அது என்ன அமைச்சரே உங்கள் மனைவி பண்ணினால் அது காதல் மத்தவங்க பண்ணினால் கூதல்(ஊழல்).... இதெல்லாம் ஒத்துக்க முடியாது... நாங்க பண்ணுறதும் தெய்வீக காதல்தான்....”

“காயத்ரி அப்படி ஒண்ணும் சொல்லலையே தம்பி... அப்பறம் அது எப்படி காதல்.... உன்னது ஒரு தலைக் காதல்... வெயிட் பண்ணித்தான் ஆகணும்....”

“உங்க கதைலயும் அம்மாதானே உங்ககிட்ட காதல் சொன்னாங்க... நீங்க ஒண்ணும் சொல்லலையே.... அப்போ அதுவும் ஒருதலைக் காதல்தானே நைனா...”

“அவதான் முதல்ல  சொன்னா... ஆனா நான்தான் உடனே அதுக்கு ஒத்துக்கிட்டேனேடா... அப்போ அது ஒரு தலைலேர்ந்து ரெண்டு தலை ஆகிடுச்சே....”, அமைச்சர் சொல்ல சக்தி பல்லை கடித்தபடியே அவரை முறைத்தான் சக்தி....

“சரி சரி விடுடா.... அந்த புள்ளை படிச்சு முடிக்கற வரை உனக்கு டைம் இருக்குது... அதுக்குள்ளே அது மனசுல இடம் பிடிக்கற வழியைப் பாரு.... சரி எல்லா கேஸும் எந்த அளவுல இருக்கு...”

“மணி கேஸ் கொஞ்சம் சுத்துதுப்பா.... அந்த பொண்ணுக்கு ஒரு காதலன் இருந்து இருக்கான்... அவன் யாருன்னு நானும் சாரங்கன் சாரும் தீவிரமா தேடிட்டு இருக்கோம்..... அந்த காலேஜ் பொண்ணு கொலையும் ஓரளவுக்கு எதுனாலன்னு கண்டுபிடிச்சாச்சு... அதுக்குரிய ஆதாரங்களை திரட்டணும்....”

“ஹ்ம்ம் சரி சக்தி... எது பண்ணினாலும் நீ நேரடியா வராம பார்த்துக்கோ... தப்பு அவங்க பக்கம் இருந்தாலும் ஆளுங்கட்சி அமைச்சர் அதனால பொய் கேஸ் போட்டுட்டாங்கன்னு மக்களுக்கு நடுவுல வதந்தியை பரப்பி வெளிய வந்துடுவானுங்க...”

“இல்லைப்பா நான் கவனமா இருக்கேன்... இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல நானும், சந்தோஷும் கிளம்பி மணி விஷயமா ஆதாரம் திரட்டத்தான் போறோம்...”

“அவசரமா எந்த விஷயத்தையும் பண்ணாதீங்க... உங்களோட ஒரு ஒரு ஸ்டெப்பும் எச்சரிக்கையா இருக்கட்டும்... எந்த ஒரு சின்ன விஷயமும் வெளிய தெரியாம இருக்கணும்...”

“கண்டிப்பாப்பா அதுனாலதான் இதுல நாங்க ஒரு ஐந்து பேர் தவிர வேற யாரையும் சேர்க்கலை... சரிப்பா நான் கிளம்பறேன்... சந்தோஷ் காத்துட்டு இருப்பான்....”, சக்தி தந்தையிடம் விடை பெற்று கிளம்பினான்....

“வாங்க பூபால்... டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் வந்துடுச்சு... உங்கப்பாக்கு கிட்னி, லிவர் ரெண்டுமே ரொம்ப வீக்கா இருக்கு... நீங்க ரெண்டாவது வருஷம் படிக்கறீங்க... இந்த ரிப்போர்ட் பாருங்க... ஓரளவுக்கு உங்களுக்கே புரியும்....”, மருத்துவர் பூபாலிடம் அவனின் தந்தையின் மருத்துவ அறிக்கையை கொடுத்தார்....

அதை வாங்கி பார்த்த பூபால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து விட்டான்...

“ரிப்போர்ட் பார்த்தா கண்டிஷன் சீரியஸ்ஸாதான் தெரியுது டாக்டர்... மருந்துல குணப்படுத்த முடியுமா...”

“லிவர் ஓரளவு மருந்து, மாத்திரைல சரிப்படுத்தலாம் பூபால்.... ஆனா ரெண்டு கிட்னியுமே பழுதடைஞ்சு இருக்கு... கண்டிப்பா ட்ரான்ஸ்பிளான்ட் பண்ணித்தான் ஆகணும்...”

“செலவு நிறைய ஆகுமா டாக்டர்...”

“கண்டிப்பா ஆகத்தான் செய்யும் பூபால்... ஆபரேஷன் இதர செலவுகள் எல்லாம் சேர்த்து ஒரு மூணுலேர்ந்து நாலு லட்சம் வரை ஆகும்... இது நான் உனக்கு எல்லா சலுகையும் போட்டப்பிறகு சொல்லுறேன்... அதைத் தவிர இங்க ஒரு பத்துலேர்ந்து பதினைந்து நாள் வரைக்கும் இருக்கணும்.... அதுக்கு தனியா ஆகும்.... மொத்தமா ஆறு லட்சம் வரை ஆகலாம்... கிட்னிக்கு என்ன பண்ண போறீங்க... டோனர் கிடைக்க கொஞ்ச நாள் ஆகும்...”

“டாக்டர் அது நானோ, எங்கம்மாவோ கொடுக்கலாம் இல்லையா டாக்டர்... தம்பி ரொம்ப சின்னவன்....”

“கண்டிப்பா உங்களோடது பொருந்தி வந்தா கொடுக்கலாம்...”

“டாக்டர் ஆறு லட்சம் அப்படிங்கறது ரொம்ப பெரிய தொகை... கண்டிப்பா ஏற்பாடு பண்ண முடியாது... உங்களுக்கு தெரிஞ்ச யாராவது உதவி பண்ணுவாங்களா...”

“நீ இங்க படிக்கற பையன் அதுவும் தவிர கஷ்டப்படறவன் அப்படிங்கறதால உனக்கு நான் உதவறேன் பூபால்... வெளிய யார்க்கிட்டையும் சொல்லாத... நான் ஒரு அட்ரஸ் தர்றேன்... அவரைப் போய் பாரு... வருஷத்துக்கு ஒரு நாலைந்து பேருக்கு அறுவை சிகிச்சைக்கு அவர் பணம் தர்றாரு... ஆனா அவர் அப்படி உதவுறது வெளிய யாருக்கும் தெரியாது... உனக்கேத் தெரியும் நிஜமா கஷ்டப்படறவங்க பாதி பேருன்னா மீதி பேர் ஏமாத்தி பணம் பறிக்கறாங்க... அதனால அவர் டாக்டர்ஸ் வழியாத்தான் இந்த ஹெல்ப் பண்றாரு... அதுக்கு முன்ன நீயும், உங்கம்மாவும் நாளைக்கு வந்து full டெஸ்ட் பண்ணிடுங்க... உங்க ரெண்டு பேரோட கிட்னில எது பொருந்தும் அப்படின்னு செக் பண்ணிடலாம்....”

“கண்டிப்பா டாக்டர்... வெளிய யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்... நாளைக்கு எப்போ வர டாக்டர்...”

“காலைல ஒரு ஆறு மணிக்கு வந்துடுங்க... நைட் சாப்பிட்ட பிறகு எதுவும் சாப்பிட வேண்டாம்.... வயிறு காலியா இருக்கணும்...”, டாக்டர் மறுநாள் பூபாலும் அவன் தாயும் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளை எழுதி அவனை ரிப்போர்ட் வந்த பிறகு சந்திப்பதாக கூறி அனுப்பினார்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.