(Reading time: 12 - 23 minutes)

அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து பரிசோதனைகளும் முடிந்து பூபாலின் கிட்னி அவன் தந்தையின் கிட்னியுடன் பொருந்தி வர கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்....

“ஹாய் சந்தோஷ் வந்து ரொம்ப நேரம் ஆச்சா....”

“ஹேய் சக்தி நீயாடா இது... ஒரு ஒரு வாட்டியும் வேற வேற கெட்அப்ல வந்து மயக்கறடா... RayBan கிளாஸு, பிரெஞ்சு பியர்ட் கலக்கற சக்தி....”

“என்னடா பண்றது... எங்கப்பா என்னை இப்படி அலைய விட்டுட்டாரு... ஆள் அடையாளம் தெரியாம கேஸ் ஹான்டல் பண்ணு... இல்லை எல்லாத்தையும் விட்டுடுன்னு சொல்லிட்டாரு...”

“அவர் சொல்லுறதும் சரிதானே சக்தி... அமைச்சர் புள்ளையா போய்ட்ட... நீ உக்கார்ந்தாலும், நின்னாலும் நியூஸ்தான்....”

“அது மட்டும் இல்லைடா... என் கூட உங்களை எல்லாம் பார்த்தாலும் கஷ்டம்தான்... நீங்க அப்பறம் சுதந்திரமா நடமாட முடியாது....”

“இப்போ சொன்னியே அது நூத்துக்கு நூறு உண்மை... அமைச்சரை விட அமைச்சர் கூட இருக்கறவங்களுக்குத்தான் தொந்தரவு அதிகம்... சரி இப்போ எங்க இருந்து ஆரம்பிக்கலாம்....”

“நாம மொதல்ல மணியோட பெற்றோர்  போனதா சொன்ன அந்த கோவிலுக்கு போய் பார்க்கலாம்... அவங்க பஸ்ல போனதா சொன்னாங்க... ஸோ அந்த பஸ் கோவில்கிட்ட எங்க நின்னுதோ அங்க இருந்து கோவில் வரைக்கும் ஒரு ரவுண்டு வரலாம்... அது முடிச்சுட்டு அந்த கொலை நடந்த இடத்துக்கு வரலாம்... அந்த பொண்ணு காலேஜ்லேர்ந்து அந்த இடம் வர்ற வரை பார்க்கலாம்... கண்டிப்பா ஏதானும் ஒரு க்ளு கிடைக்கும்ன்னு தோணுது....”

“ஏண்டா சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஏழெட்டு மாசம் ஆகிடுச்சு... இன்னுமா அங்க ஏதானும் தடயம் கிடைக்கும்ன்னு நினைக்கற....”

“போய் பார்க்கலாம்டா.... மத்தவங்க கண்ணுல படாதது ஏதாவது நம்ம கண்ணுல படலாம் இல்லையா....”

சக்தி சொல்ல இருவரும் அந்த பேருந்து நிலையத்தை நோக்கி சென்றார்கள்... அங்கிருந்து கோவில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது... முதலில் இருவரும் வண்டியில் சென்று கோவில் அருகில் பார்க் செய்துவிட்டு, அங்கிருந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்...

கோவிலுக்கு போகும் வழி சற்று கூட்டம் நிறைந்த பகுதியாக இருந்தது... நிறைய கடைகளும், குடியிருப்புகளும் இருக்கும் பகுதியாக காணப்பட்டது...

“சக்தி பயங்கர பிஸி ஏரியாவா இருக்குடா... இங்க யார்க்கிட்ட கேக்க...”

“இவ்ளோ பிஸி ஏரியான்னா கண்டிப்பா எந்தக் கடைலயானும் CCTV இருக்கும்டா... செக் பண்ணி பார்க்கலாம்...”

“ஏண்டா அது எல்லாம் போலீஸ் பார்க்காமயா இருக்கும்....”

“இல்லை சந்தோஷ்... இந்த கேஸ்ல போலீஸ் ரொம்ப தீவிரமா விசாரணை பண்ணினா மாதிரி தெரியலை... கொலையான பொண்ணோட தோழி சொன்ன உடனே மணியை அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க... அவனும் தற்கொலை பண்ணிட்டதால அப்படியே கேசை இழுத்து மூடிட்டாங்க....”

“ஹ்ம்ம் சரி இப்போ மணி பத்தி விசாரிக்க போறோமா....”

“இல்லைடா மணியோட அம்மா போட்டோ எடுத்துட்டு வந்துருக்கேன்... இங்க எந்த கடைலயானும் CCTV இருந்துச்சுன்னா அங்க போய் கேட்டு பார்க்கலாம்....”

இருவரும் சென்று அங்கிருந்த இரண்டு கடைகளில் சந்தோஷ் தன்னை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சக்தியின்  தாயாரை சில மாதங்களுக்கு முன் இந்த கோவிலுக்கு வரும்போது அவரை சிலர் மிரட்டியதாகவும், நேற்றிலிருந்து அவரைக் காணவில்லை என்றும் மிரட்டியவர்களை அடையாளம் காண CCTV பதிவுகளை பார்க்க அனுமதி வேண்டும் என்று கூறி தன் அடையாள அட்டையை காட்டினான்...

கடைகளின் முதலாளி அனுமதியுடன் சக்தியும், சந்தோஷும் அந்த நாளின் CCTV பதிவுகளை பார்த்தார்கள்... அதில் மணியின் பெற்றோர் கோவிலை நோக்கி நடப்பது பதிவாகி இருந்தது.... கூட ஒருவன் வருவது தெரிந்தாலும் அவன் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை... தோளில் பையைத் தூக்கி வைத்திருந்ததால் அவன் முகம் தெரியவில்லை... அதுவும் தவிர அவன் சற்று தள்ளி நடந்து வந்து கொண்டிருந்தான்...

“சக்தி இந்த பையன் பார்க்க மணி போலத்தாண்டா இருக்கான்... அவன் அர்ரெஸ்ட் ஆகும்போது போட்டுட்டு இருந்த அதே டிரஸ்தான்... ஆனா அவன்தான்னு நாம நிரூபிக்கறது ரொம்ப கஷ்டம்...”

“கரெக்ட்தாண்டா... ஒரே மாதிரி ஷர்ட் நிறைய பேர்க்கிட்ட இருக்காதா அப்படின்னு கேள்வி வரும்... எதுக்கும் இந்த காப்பி நாம எடுத்துப்போம்... கொலை நடந்த இடத்துக்கு போய் பார்க்கலாம்... இங்க கிடைச்சா மாதிரியே அங்கயும் ஏதேனும் துப்பு கிடைக்கலாம்....”

“சரிடா போகலாம்... அப்படியே அந்த காலேஜ் விஷயம் பார்க்கணும்... இன்னைக்கு நைட் போகலாமா...”

“இன்னைக்கு நைட்டா... பிரச்சனை வராதே...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.