Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினி - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

நிகிலன் ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைய, அவன் பின்னே வந்தவள், உள்ளே கண்டதும் உள்ளம் துள்ளி குதிக்க, கண்களை அகல விரித்தாள் மதுவந்தினி....

அது ஒரு பேட்மின்டன் பயிற்சி மையம்...

உள்ளே நுழைந்ததும் சிறிய வரவேற்பறையும் வந்தவர்கள் அமர்ந்திருக்க ஒரு சில  சோபாக்கள் மட்டுமே போடப்பட்டு இருந்தது.. மீதி இடமெல்லாம் பேட்மின்டன் கோர்ட்டுகளாக மாற்ற பட்டிருந்தன..

ஆண்களும் பெண்களுமாக சிறுவயது முதல் பெரியவர்கள் வரை பல பிரிவினர் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்....

அவர்களை பார்க்கும் பொழுது மதுவுக்கும் உள்ளுக்குள் ஆசையாக இருந்தது...

அவளுக்குமே இந்த மாதிரி விளையாட வேண்டும் போல இருந்தது....

ஆனால் எப்பவும் போல அவளின் பயம் வந்து ஒட்டிக் கொள்ள அங்கு இருப்பர்கள் எல்லாம் அவளையே பார்ப்பதை போல இருக்க, அருகில் நின்று கொண்டிருந்த தன் கணவன் அருகில் இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்று கொண்டாள்...

அப்பொழுது தான் நினைவு வந்தது..

“எதற்காக என்னை இங்க வரச் சொன்னான்??  ஒரு வேளை அகிலா இங்க இருக்காளோ?? அவளை கூட்டி போகத்தான் வந்திருக்கானா?? அப்ப என்னை எதுக்கு வரச் சொன்னான்?? “ என்று யோசித்து கொண்டிருந்தாள்..

ஆனால் அவள் கண்கள் மீண்டும் தானாக  அருகில் இருந்த கோர்ட் டையும் அதில் விளையாடுபவர்களையும் ஆசையாக நாடி சென்றன...

தன் கண்களை சுழல விட்டவள் அருகில் இருந்த மற்றொரு கோர்ட்டில் இருந்து யாரோ தன்னை பார்த்து கை அசைப்பதை போல இருக்க, உற்று பார்த்தாள்...

அகிலாதான் அங்கு பிராக்டிஷ் பண்ணி கொண்டிருந்தாள்... தன் அண்ணியை  அங்கு கண்டதும் ஆச்சர்யத்தில் கை அசைத்து

“நீங்க எங்க இங்க?? “ என்று கண்ணால் ஜாடை காட்டி கேட்டாள்..

மதுவும் அதை புரிந்து கொண்டு

“எனக்கு தெரியாது...” என்று உதட்டை பிதுக்கியவள்

“ இவர்தான்...” என்று பக்கத்தில் இருந்தவனை கையால் சுட்டி காட்டி ஜாடை காட்ட, அப்பொழுது தான் அருகில் நின்று கொண்டிருந்த  தன் அண்ணனை கண்டாள் அகிலா...

அவளுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை... தன் அண்ணன் இப்படி  அண்ணியிடம் ஜோடியாக நிக்கறானே.. என்று..

அவர்களின் ஜோடி பொருத்தத்தை ரசித்தவள் மனம் இங்கு ஓடி வர துடித்தது...

ஆனால் பாதி விளையாட்டில் விட்டு விட்டு வந்தால் அது அந்த விளையாட்டை அவமதிப்பதாக ஆகும் என்று விளையாட்டு ரூல்ஷ் ஐ பற்றி தன் அண்ணனிடம் ஒரு குட்டி லெக்சர் கேட்க வேண்டி இருக்குமே.. என்று அஞ்சி அங்கயே நின்று கொண்டிருந்தாள்..

ஆனால் அவள் கவனம் எல்லாம் இங்கயே இருந்தது...

நிகிலன் தன் அலைபேசி யில் வந்திருந்த அழைப்பை பேசி முடித்து தன் அலைபேசியை வைக்க, அதே நேரம் நிகிலன் வயதை  ஒத்த ஒருவன் நிகிலனை பார்த்து சிரித்து கொண்டே அவன் அருகில் வந்தான்...

“வாடா.. புது மாப்பிள்ளை... எப்படி இருக்க?? மேரேஜ் லைப் எப்படி போய்கிட்டிருக்கு?? “ என்று அவனை கட்டி கொண்டான்..

“ஹ்ம்ம்ம் ஐம் பைன் டா.. நீ எப்படி இருக்க?? “ என்று நலம் விசாரித்தான் நிகிலன்...

பின் அந்த இளைஞன் மதுவை பார்த்து

“ஹாய் சிஷ்டர்...ஐம்  வசந்த்.. உங்க ஹஷ்பன்ட் ஓட  பிரெண்ட்.. “என்று புன்னகைக்க, மதுவும் அவள் கைகளை கூப்பி வணக்கம் சொன்னாள் புன்னகைத்தவாறு..

அதை கண்டு வசந்த் க்கு ஆச்சர்யம் ஆனது..

இந்த காலத்துல கூட பொண்ணுங்க கை கூப்பி வணக்கம் சொல்றாங்களே.. என்று..

“அப்புறம் சிஷ்டர்... எப்படியோ இந்த சாமியாரையும் சம்சாரியாக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. “ என்று சிரிக்க, மதுவும் இலேசாக புன்னகைத்தாள்...

“ஓகே சிஷ்டர்.. அப்ப இன்னையிலயிருந்தே பிராக்டிஷ் ஷ்டார்ட் பண்ணிடலாம்... “ என்றான் வசந்த்..

அதை கேட்டு திடுக்கிட்ட மது என்ன பிராக்டிஷ்??  என்று புரியாத பார்வை பார்க்க, அவளின் பார்வையை கண்ட வசந்த்

“என்ன சிஷ்டர் அப்படி முழிக்கறீங்க??  என்ன உங்க ஹஷ்பன்ட் எதுவும் சொல்லலையா??  ஓ...  சர்ப்ரைஷ் ஆ நிகில்?? “என்று குறும்பாக சிரிக்க,

“டேய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா... டைம் இல்ல சொல்ல... அவ நேரா வேற கிளாஷ்ல இருந்து வர்ரா... சோ நீயே சொல்லு.. “ என்று புன்னகைத்தான் நிகிலன்..

“ஓகே  சிஷ்டர்.. நீங்க சூப்பரா பேட்மின்டன் விளைடாடறீங்களாம்..  அதனால் இன்னும் கொஞ்சம் ட்ரெயினீங் கொடுத்தா நீங்க சேம்பியன் ஆகலாமாம்..

அதனால உங்கள சேம்பியன் ஆக்கனும்னு ஒரு முடிவோட உங்க புருஷன் உங்கள கொண்டு வந்து இங்க விட்டிருக்கான்... “ என்று சிரித்தான் வசந்த்....

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிsaaru 2019-05-27 20:09
Super dear.. Vela aatam heavy ah irukapodu
Madhu pulla thangadu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிShanthi S 2019-05-17 05:20
good epi Padmini 👌

Niraiya twist, turnskana expectation koduthirukinga. Enna ellam nadaka poguthunu parpom.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிmadhumathi9 2019-05-16 05:33
:clap: nice epi.egarly waiting 4 this epi. :thnkx: 4 this epi. :GL: mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிPadmini 2019-05-16 10:10
Thanks Madhu!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிAbiMahesh 2019-05-15 21:40
Nice Update Mam! Madhu competition la win panrathu :clap: But orey shocking lines ah irukae.. Vels move ah next epi la pakkalam :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிPadmini 2019-05-15 22:50
Thanks Abi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிAdharv 2019-05-15 15:52
Abaya sangugal adhigamaga irundhalum ninga feel good board la irupadhal shock kuda sweet moments aga thaan irukkumnu namburen ;-) (indha ice podhumnu ninaikuren padimini ma'am :P vels siva aunty oda plan-ku pawn move pana kandipa adhu sweet twist aga than irukkum :yes: )

Cool and interesting update ma'am :clap: :clap: viral aga spread ana news Jayanth ku mattum reach agalayo :Q: Nikki, Madhu-va encourage panuradhum silent aga sight adipadhum cute aga irukku :dance: but nama baby heroin ku idhu ellam eppo puriya vaipinga :D

Madhu oda transition rombha nala portray panuringa (y) Waiting to read next update. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிPadmini 2019-05-15 22:50
:-) romba ice... Adharv!! Unga ice kku namma vels mayangaraanu paarkkalaam... Thanks for your comments :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிVarshitha 2019-05-15 13:40
Vels Oda next game kaga eagerly waiting :clap: nice update padmini :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிPadmini 2019-05-15 22:46
Thanks Varshitha!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிதீபக் 2019-05-15 11:33
super episode sis :clap: . eagerly waiting for vel's game in further episodes. (y) :GL: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினிPadmini 2019-05-15 22:46
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top