Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (9 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 9 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

மதுரை

லேடீஸ் ஹாஸ்டல் முன்பு ஆட்டோ நிற்க அதில் இருந்து இறங்கினாள் வைஷ்ணவி. அந்த ஹாஸ்டலையே வேடிக்கைப் பார்த்தாள். பார்த்த உடனே வைஷ்ணவிக்கு அந்த ஹாஸ்டல் மிகவும் பிடித்திருந்த்து. அதனால் முகம் மலர சிரித்தவள் ஆட்டோ டிரைவர் இறங்கி நின்றதும் அவரிடம்

அப்பா எவ்ளோ பணம் ஆச்சின்னு சொல்லுங்க, கொடுக்கறேன்என தனது கைபையில் கையை விட

உன் விருப்பம் எவ்ளோ கொடுத்தாலும் சரி

இப்படி சொன்னா எப்படிப்பா மீட்டர் வேற இல்லையே, எப்படி நானா சரியான பணம் கொடுக்கறது இங்க எப்படி சார்ஜ் போடுவாங்கன்னு தெரியாதே

நீ அப்பான்னு சொன்னதே சந்தோஷமா இருக்கு, ஒண்ணு தெரியுமா என் பொண்ணும் சாகற வரைக்கும் மூச்சுக்கு முந்நூறு முறை அப்பா அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்தாஎன சொல்லி கண் கலங்கவே வைஷ்ணவியோ அதிர்ந்தாள் மெல்ல அவரை ஆறுதல் படுத்த முனைந்தாள்.

அப்பா என்னாச்சிப்பா, ஏன் அழறீங்கஎன கேட்க

ஒண்ணுமில்லைம்மா உன்னை பார்த்ததும் எனக்கு என் பொண்ணு ஞாபகம் வந்துடுச்சி

ஏன் என்னாச்சி அவங்களுக்கு, அவங்க இப்ப உயிரோட இல்லையா

ஆமாம்மாஎன சொல்லி மேலும் கண்கள் கலங்கவே அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

ஏன்பா என்னாச்சி

நாங்க இந்த ஊர்க்காரங்களே இல்லைம்மா, வேளாங்கண்ணியை சேர்ந்தவங்க அங்கதான் நான் ஆட்டோ ஓட்டி பிழைச்சிட்டு இருந்தேன். என் பொண்ணு ஸ்போர்ட்ஸ் ப்ளேயர், ஓட்டப்பந்தயத்தில எப்பவும் அவள்தான் முதல் பரிசு வாங்குவா, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில நாங்க குடும்பமா சர்ச்க்கு போயிட்டு பீச்சுக்குப் போயிருந்தோம். அப்ப கடல் அலைகள் ஓரமா நின்னுட்டிருந்த என் பொண்ணை சுனாமி வந்து அவளை கடலுக்குள்ள இழுத்துக்கிட்டு போயிடுச்சி. எனக்குன்னு இருந்த ஒரே சொந்தம் அவள்தான், அவள் போனதுக்கப்புறம் என் சம்சாரமும் அந்த துக்கத்திலயே நோய்வாய்ப்பட்டு இறந்து போனா,  யாரும் இல்லாம தனியா அங்க வாழ விரும்பாம இங்க வந்துட்டேன், இப்ப நீ வாயாற என்னை அப்பான்னு கூப்பிடவும் என் பொண்ணு ஞாபகம்தான் வந்திச்சி.” என குரல் உடைந்து சொல்ல இம்முறை வைஷ்ணவியின் கண்கள் குளமாகின. அதைக்கண்டவர்

அட என்னம்மா நீ அழற, வேணாம்மா அழாத

உங்களுக்கு உங்க பொண்ணோட இழப்பு, எனக்கு என் அப்பா அம்மாவோட இழப்பு அப்பநான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். என் அப்பா அம்மா நான் எல்லாரும் வேளாங்கண்ணிக்கு டூர் போனப்ப கடல் அலைங்க கிட்ட மாட்டிக்கிட்டோம், நானும் அலையில மாட்டினேன் நல்லவேளை ஒருத்தர் என்னை காப்பாத்தினாரு, அவர் இல்லைன்னா இப்படி உங்க முன்னாடி நான் நின்னு பேசியிருக்க மாட்டேன்.”

அப்படியா ரொம்ப சந்தோஷம்மா, நீயாவது உயிர் பிழைச்சியேஎன கலங்குவதை விடுத்து பெருமூச்சுவிட்டார்.

ஆமாம் அப்பா அம்மா போனது வருத்தம்தான், என்ன சொந்தம் பந்தம் என்கூட இருந்த காரணத்தால அப்பாவோட சொத்தும் இருந்ததால எனக்கு பணப்பிரச்சனை வராம இருந்துச்சி, இருந்தாலும் என்னிக்காவது உங்களை போல ஒருத்தரை பார்க்கறப்ப சட்டுன்னு எங்கப்பா நினைப்பு வந்துடும். அவருக்கும் உங்க வயசுதான் இருக்கும், எங்கம்மா அப்படியே என்னை மாதிரி இருப்பாங்க, அதனால அம்மாவை பத்தின நினைப்பு வரும் போதெல்லாம் கண்ணாடி முன்னாடி நின்னு அம்மா கூட பேசற மாதிரி எனக்கு நானே பேசிக்குவேன், கொஞ்சம் ஆறுதலா இருக்கும், இன்னிக்கு உங்களை பார்த்தப்ப எனக்கு எங்கப்பா ஞாபகம் வந்துடுச்சிப்பா அதான் தானாவே அழுகை வருதுஎன சொல்ல அவரோ

அழாதம்மா நான் இருக்கேன் அழாத, இங்க நீ இருக்கறவரைக்கும் உனக்கு உதவியா நான் இருப்பேன், என் ஃபோன் நெம்பர் தரேன், உன் நெம்பரும் கொடு, எங்கயாவது போகனும்னா முன்னாடியே சொல்லிடு, ஆட்டோவோட வந்து இறங்கிடறேன் உனக்கு தேவையான எல்லாத்தையும் நான் உனக்கு செய்றேன், என்கிட்ட பணம் இல்லை ஆனா என்னால முடிஞ்ச உடல் உழைப்பாவது உனக்கு செய்றேன்மா

பரவாயில்லைப்பா, நீங்க பேசற இந்த பேச்சே போதும், எனக்குன்னு யாருமில்லைங்கற எண்ணம் கொஞ்சம் விலகியிருக்குப்பா, என் வேலைகளை நானே பார்த்துக்குவேன் ஒண்ணும் பிரச்சனையில்லைஎன அவள் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி சொல்ல அவரும் கண்களை துடைத்துக் கொண்டு சிரித்தபடியே

நீ கவலையேப்படாதம்மா ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த கடவுள்தான் உன்னையும் என்னையும் சந்திக்க வைச்சிருக்காரு, கண்டிப்பா ஒரு நாள் என் உதவியால உனக்கு பெரிய நன்மை கிடைக்கும்

நல்லதுப்பா சரி நான் உள்ள போறேன், என் நெம்பர் தரேன் எழுதிக்குங்கஎன சொல்லி ஃபோன் நெம்பரை சொல்ல அவரும் தனது செல்போனில் மகள் என்றே வைஷ்ணவியின் ஃபோன் நெம்பரை சேவ் செய்துக் கொண்டதோடு தனது நெம்பரையும் தந்தார்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாராஜேந்திரன் 2019-05-18 18:05
ippa than indha storyoda epi 1 and 2 padichen. romba nalla irukku story good sasi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாsasi 2019-05-17 06:59
Quoting Shanthi S:
good epi Sasireka 👌

Story picking up pace.

Mele epadi eduthutu poreenganu parpom.

நன்றி தோழி சாந்தி நீங்க சரியா சொன்னீங்க கதை தொய்வில்லாமல் நகர்த்துவதுதான் சிரமமாக உள்ளது முடிந்தவரை அனைவருக்கும் பிடிக்கும்படி கதையை நகர்த்துகிறேன். நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாShanthi S 2019-05-17 05:28
good epi Sasireka 👌

Story picking up pace.

Mele epadi eduthutu poreenganu parpom.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாAdharvJo 2019-05-16 20:55
Sema senti shower sasi ma'am :dance: umakka umakka-nu sollurangale rendu ummakangala :D entertaining screen play :clap: :clap: vaishu is oru peculiar character ma'am :D sentiment-a pesi pesi-a aala kavuthuduranga,indha baby heroin oda innocence chance-a illa...ellar kittayum thanoda history geography solluravanga solla vendiyvar kitta sollama vittutangale ji facepalm (series athoda mudinjudmo ;-) ) anyway let them celebrate the biriyani moment :grin: so hero sir padika vandhudu varo??
Maha and karthi oda moments wer also nice ma'am...waiting to see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாsasi 2019-05-17 07:06
Quoting AdharvJo:
Sema senti shower baby heroin oda innocence chance-a illa...ellar kittayum thanoda history geography solluravanga solla vendiyvar kitta sollama vittutangale ji facepalm (series athoda mudinjudmo ;-) ) anyway let them celebrate the biriyani moment :grin: so hero sir padika vandhudu varo??
Maha and karthi oda moments wer also nice ma'am...waiting to see what happens next. thank you and keep rocking.

நன்றி ஆதர்வ் அப்ப வைஷூ யாரை தேடறாள்ன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா சூப்பர் ஆனா உண்மையை சொல்லி கதையை சீக்கிரமா முடிச்சிக்க விருப்பமில்லை கொஞ்சம் வாரங்கள் போகட்டும் அதுக்குள்ள அவங்க நட்பும் செழிப்பா வளரட்டும் நான் இதுவரைக்கும்தான் யோசிச்சேன். உண்மை முத்துவுக்கு தெரிஞ்ச பின்னாடி என்ன செய்யலாம்னு அப்புறமா யோசிக்கிறேன் இப்போதைக்கு கதையை விறுவிறுப்பாக்க முயற்சி செய்றேன் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாvijayalakshmi 2019-05-16 19:17
nice epi vaishnavi chinna pulla thanama irukka romba pidichirku. good sasi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாsasi 2019-05-17 07:00
Quoting vijayalakshmi:
nice epi vaishnavi chinna pulla thanama irukka romba pidichirku. good sasi

நன்றி விஜி :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாராணி 2019-05-16 07:46
அருமையான பதிவு வைஷ்ணவியின் செயல்கள் அனைத்தும் சூப்பர். கார்த்தி படும் பாடு படிக்க படிக்க சிரிப்பாக வருகிறது. முத்துவின் பகுதியும் அருமை
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாsasi 2019-05-17 07:00
Quoting ராணி:
அருமையான பதிவு வைஷ்ணவியின் செயல்கள் அனைத்தும் சூப்பர். கார்த்தி படும் பாடு படிக்க படிக்க சிரிப்பாக வருகிறது. முத்துவின் பகுதியும் அருமை

:grin: நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாmadhumathi9 2019-05-16 06:45
:clap: fantastic epi.vaishnavi elloridamum veguliyaaga oazhaguvthu pidichirukku. :clap: egarly waiting 4 next epi. :GL: sasi.interesting aaga poguthu kathai. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாsasi 2019-05-17 07:01
Quoting madhumathi9:
:clap: fantastic epi.vaishnavi elloridamum veguliyaaga oazhaguvthu pidichirukku. :clap: egarly waiting 4 next epi. :GL: sasi.interesting aaga poguthu kathai. (y)

ரொம்ப நன்றி மது எப்படியோ கதை விறுவிறுப்பா போனா சரிதான் ஏதாவது குறை இருந்தா சொல்லுங்க மாத்திக்கிறேன் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாதீபக் 2019-05-15 20:45
Super episode sis :clap: . Great going (y) . Eagerly waiting for next episode :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகாsasi 2019-05-17 06:59
Quoting Deepak:
Super episode sis :clap: . Great going (y) . Eagerly waiting for next episode :GL:

நன்றி தீபக்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top