Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

துரையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி வளாகத்தில்

நண்பா இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், இந்த மதுரைக்கு வந்ததிலிருந்து எனக்கு புதுசு புதுசா உறவுகள் கிடைச்சிருக்கு, இதுபோல நான் சென்னையில இருந்தப்பகூட கிடைக்கலை தெரியுமாஎன வைஷ்ணவி மகிழ்ச்சியாக பேச அதைக் கேட்டபடியே அமைதியாக இருந்த முத்துநிலவனோ மெல்ல பேசலானான்.

உனக்கு ப்ரெண்ட்ஸ்ங்க அதிகம் போல

ஆமாம் எப்படி கண்டுபிடிச்சஎன வைஷூ ஆர்வமாக கேட்க

இதுல கண்டுபிடிக்க என்ன இருக்கு, தனியா ரோட்ல அழுதுக்கிட்டு இருந்த, என்ன ஏதுன்னு நான் கேட்டா உன் பிரச்சனையை சொல்லவே தயங்கின, அண்ணனா நினைச்சிட்டு பதில் சொல்லுன்னு சொன்னப்பவும் அமைதியான, ஆனா அதே நண்பன்னு சொன்னதும் உன் பிரச்சனையை சொன்னியே அதான் கேட்டேன்

ஓ அதுவா எனக்கு அண்ணன் தம்பின்னு யாரும் இல்லை, என் வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு இன்னும் சொல்லனும்னா என் குடும்பத்துக்கே ஆண் வாரிசு இல்லைஎன் பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை எல்லாருக்குமே பெண் வாரிசுதான், அவங்களோட பழகினதால இந்த அண்ணன் தங்கை உறவுன்னா என்னன்னு எனக்கு பெரிசா தெரியாது

சரி அப்பாவா நினைச்சிருக்கலாம்ல

யாரு உன்னையா

ஆமாம் ஏன் சொன்னாலும் நீ நம்பியிருக்க மாட்டல்லஎன்றான் சிரிப்புடன்

ஆமாம் எனக்கு இவ்ளோ சின்ன வயசு அப்பாவான்னு நினைச்சி சந்தேகப்பட்டு ஓடியிருப்பேன், இல்லைன்னா கத்தி கூச்சல் போட்டு உனக்கு தர்மஅடி வாங்கி கொடுத்திருப்பேன்

நீ செஞ்சாலும் செய்வஎன சொல்லி அவன் சிரிக்க அவளோ

எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு, பொண்ணுங்க பையன்ங்கன்னு பாரபட்சம் இல்லாம பழகுவேன், என்கூட பழகறவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க எனக்கு துரோகமே செய்யாதவங்க

உன்னோட இந்த குழந்தை பேச்சுக்கும், நல்ல மனசுக்கும் யாராலயும் உனக்கு துரோகம் செய்ய முடியாது வைஷூஎன முத்து சொல்ல அவளோ

உண்மைதான் என் ப்ரெண்ட்ஸ்ங்க கூட இதைத்தான் சொல்வாங்க, நீ என் ப்ரெண்ட்ஸ்களை பார்த்ததில்லைல்ல இரு காட்டறேன்என சொல்லி தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை வரிசையாக அவர்கள் யார், என்ன, அவர்கள் செய்த மறக்க முடியாத சேட்டைகள் வரை கதைகதையாக சொல்லி முடித்தாள்.

மாலை 4 மணியளவில் அவளது பெயர் அழைக்கப்பட்டது

இங்க வைஷ்ணவி யார்மாஎன ப்யூன் அழைக்க வைஷூவோ

ஓ என்னைத்தான் கூப்பிடறாங்க நான் போயிட்டு வரேன்

சரி பார்த்துப் போ

ஆமாம் நீ வரலையா

அதுவா அது வரனும் ஆனா என் பேர் கூப்பிடலையே

ஓ சரி சரி நான் உள்ள போய் உன் பேரை கூப்பிட சொல்லி சொல்றேன்

அதெல்லாம் வேணாம் முதல்ல நீ உன் வேலையை முடிச்சிட்டு வாஎன சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

அவ்விடம் விட்டு மெல்ல வெளியேறி தனது ஜிப்சியில் சென்று அமர்ந்தான்.

வைஷூகிட்ட பேசறப்ப என் மனசு லேசாகுது எனக்கும் நிறைய நண்பர்கள் இருந்தாங்க, இப்ப அவங்க எல்லாம் எங்கன்னே தெரியலை, ஏதோ இப்ப இவளாவது கிடைச்சாளே இது போதும், கொஞ்ச நேரம் என் கவலையெல்லாம் மறந்து வைஷூவோட சிரிப்பில நான் சிரிச்சிட்டேன்.

எத்தனை வருஷமாச்சி இப்படி வாய் விட்டு கலகலன்னு சிரிச்சி நானா இதுன்னு மத்தவங்க கேட்கறது அப்புறம் நானே என்னை அப்படித்தானே கேட்டுக்கிட்டேன் ஆனா, இப்ப எல்லாம் மாறிடுச்சி. இவள் இங்க படிக்கப் போறா படிக்கட்டும், நேரம் கிடைக்கறப்ப அவள் பேசினா பேசட்டும் இல்லைன்னா வேணாம்

 ஆனா, அதுக்கு அவள் போன் நெம்பர் எனக்கு வேணுமே, இன்னிக்குதான் பார்த்தோம் உடனே நெம்பர் கேட்டா தப்பா நினைப்பாளோ, சரி நம்ம நெம்பரை தருவோம் என்னிக்கு அவளுக்கு என் மேல முழு நம்பிக்கை வருதோ அப்ப அவள் போன் பண்ணி பேசட்டும்என நினைத்துக் கொண்டு அக்கம் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

 முழுதாக கால் மணி நேரம் கழித்து துள்ளி குதித்துக் கொண்டு சிரித்தபடியே வந்தாள் வைஷ்ணவி அவளது சந்தோஷத்தை வைத்தே அவளுக்கு சீட் கிடைத்துவிட்டது என புரிந்துக் கொண்ட முத்துவும் அவள் வந்ததும்

வாழ்த்துக்கள்என சொல்ல அவளோ கண்கள் விரிய

எப்படி கண்டுபிடிச்ச நண்பா

உன் முகமே சொல்லுதே இந்த சந்தோஷத்தை பார்த்தா யாரா இருந்தாலும் கண்டுபிடிப்பாங்க, அப்புறம் 4 வருஷம் இந்த மதுரையிலதான் இருக்கப் போற எனக்கும் சந்தோஷமா இருக்குஎன சொல்ல அவளோ

”4 வருஷம் இல்லை நண்பா 1 வருஷம்தான்என அவள் சொன்னதும் அவன் முகம் ஏமாற்றத்தில் சூம்பி போனது.

About the Author

Sasirekha

Sasirekha

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகாsasi 2019-05-25 15:47
நன்றி ஆதர்வ் உங்கள் கமெண்ட் சூப்பர் படிக்க படிக்க ஹாப்பியா இருந்தது. எப்படியோ கதை போர் அடிக்காம இருந்தா எனக்கு திருப்திதான் பிசி ஒர்க்ல என் கதையும் படிச்சி கமெண்ட் தந்ததுக்கு மிக்க நன்றி. தெலுங்கு பொண்ணு யாரு? மாதவியை சொல்றீங்களா பட் வைஷூ இப்படி வெகுளியா ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டாங்க முத்து மாத்திடுவான் இதுக்கு எதுக்குங்க ட்யூசன் பீஸ் கட்ட பணம் இல்லைங்கோ அடுத்த வாரம் நிறைய பக்கங்களுடன் எபி இருக்கும் படிச்சி பார்த்து கமெண்ட் தாங்க நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகாAdharvJo 2019-05-24 20:11
:D cool+ interesting + entertaining epi sasi ma'am :clap: :clap: Yappa ena oru frndship :dance: Vaishu oda innocence is cute but ivalo innocence naladhu illai konjam telugu ponnukitta tuition eduka sollunga :D and Muthu avangalukku etha mathiri irangi varuvadhu superb! But indha family members ellarum sernthu kuttai-a kulapiduvangalo :Q: each one has their own reasons to kakapidichify vaishu :D BTW hero school-ku porara illa college-ku porara :Q: engayo pogattum books kudunga break la naa bind pottu tharen :P ivarukku books clean pana maha thevai but serving-k vendamam :grin:
16 page padichadhey theriyala just went like that :hatsoff: look forward to see how things move around. thank you and keep rocking.

Lastly by any chance unga trade mark style la triangle feelings konduvaradhinga ippadi-a nala irukku ma'am (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகாராணி 2019-05-23 07:11
அருமையான பதிவு முத்துவின் மனமாற்றம் நன்று கார்த்தி மகாவின் சேட்டைகள் கலகலப்பாக உள்ளது வைஷ்ணவியின் தேடல் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதாக உணர்கிறேன்
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகாsasi 2019-05-23 07:21
Quoting ராணி:
அருமையான பதிவு முத்துவின் மனமாற்றம் நன்று கார்த்தி மகாவின் சேட்டைகள் கலகலப்பாக உள்ளது வைஷ்ணவியின் தேடல் முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதாக உணர்கிறேன்

நன்றி :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகாmadhumathi9 2019-05-22 22:24
:clap: :clap: arumaiyaana epi sasi. :clap: (y) interesting agaa viruviruppaaga kathai poguthu.big big :thnkx: 4 big epi.waiting 4 next epi. :GL: aduththa epiyai eppothu padippom endru aarvamaaga irukku. :-) :thnkx: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகாsasi 2019-05-23 07:23
Quoting madhumathi9:
:clap: :clap: arumaiyaana epi sasi. :clap: (y) interesting agaa viruviruppaaga kathai poguthu.big big :thnkx: 4 big epi.waiting 4 next epi. :GL: aduththa epiyai eppothu padippom endru aarvamaaga irukku. :-) :thnkx: (y)

நன்றி மதுமதி எனக்கும் அடுத்த எபியில் தாங்கள் போடும் கமெண்ட் என்னவென்று பார்க்க ஆர்வமாக உள்ளது. நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகாதீபக் 2019-05-22 19:07
Sis today's episode awesome :clap: . vaishnavi innocent character is super (y) . Eagerly waiting for college going episode :lol: . Waiting for next episode eagerly :GL: :grin: :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகாsasi 2019-05-23 07:22
Quoting Deepak:
Sis today's episode awesome :clap: . vaishnavi innocent character is super (y) . Eagerly waiting for college going episode :lol: . Waiting for next episode eagerly :GL: :grin: :dance:

நன்றி தீபக்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top