(Reading time: 12 - 24 minutes)

எத்தனை எதிர்பார்ப்பு ஆசை கனவோட ஆரம்பிச்ச வாழ்க்கை அத்தனை ஈசியா தூக்கி போட முடில.ஆனா எல்லாமே கையை மீறி போய்ருந்தது.அவர் மேலே இருந்த வெறி உழைச்சு சாதிக்கணும்னு முடிவு பண்ணேன்.என் பிஸினஸ்ல நம்பர் ஒன் ஆனேன்.ஆனா அதுக்கு நா கொடுத்த விலை உன் மேல காட்ட வேண்டிய அன்பு.

ஒரு மாதிரியான ஸ்ட்ரெஸ் கண்ணா அது.அவரை விட எந்த விதத்துலயும் குறைஞ்சவ இல்லனு நிருபிக்கனும்ங்கிற வெறி.சாதிச்சும் காட்டினேன்.ஆனா எனக்கான உயரத்தை அடைஞ்சதுக்கு அப்பறம் தான் உன்னை பத்தி யோசிச்சேன்.ஆனா அதுகுள்ள நீ என்னை விட்டு ரொம்ப தூரம் போயிருந்த.

என் நிலைமையை வெளி சொல்லவும் முடில.உள்ளுக்குள்ளேயே வச்சுருக்கவும் முடில.எதிர்பார்க்காத அளவு டிப்ரஷன்.அப்போ தான் உன் நிலைமை இன்னும் என்னை குற்வாளியா நிக்க வச்சது.

அப்போ தான் நீ சினி இன்டஸ்ட்ரிகுள்ள நுழைஞ்ச நேரம் எதையும் பேசி உன்னை குழப்ப வேண்டாமேனு அமைதியா இருந்துட்டேன்.ஆனா நா பண்ணின தப்பு ரொம்ப பெரிசு டா.

என்னோட எங்களோட சுயநலத்துக்காக பிடிவாதத்துக்காக உன் வாழ்க்கையை பலி கொடுத்துட்டோம்.நான் மட்டுமில்ல என்னை மாதிரி அவசரத்துல ஆத்திரத்துல முடிவு எடுத்து விவாகரத்து பண்றவங்க எல்லோருடைய குழந்தைகளின் நிலைமையும் இது தான்.

எந்தவித தப்பும் பண்ணாம தண்டனை அனுபவிக்குறது ரொம்பவே கொடுமை.எங்களை மாதிரியான பெத்தவங்களுக்கு பிறந்ததை தவிர.. அதுக்காக யாரும் தப்பு பண்ணிணா அதை பொறுத்துட்டு வாழணும்னு கிடையாது.அதே நேரம் சின்ன சின்ன ஈகோ சண்டை பிடிவாதத்துக்காக விட்டு கொடுக்க மனசில்லாம குழந்தைகளை பந்தாடுறது ரொம்ப தப்புனு புரிஞ்சுகிட்டேன் ரேஷ்.

ஆனா கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணிண கதை தான்.ஆனா அத்தனையும் கடந்து இன்னைக்கு நீ அம்மானு கூப்பிட்ட அப்போ மனசு அவ்ளோ லேசா ஆய்டுச்சு கண்ணா.என்னைக்காவது இந்த அம்மாவை மன்னிக்க தோணிணா மன்னிச்சுரு டா!”

என்னும்போதே லேசாய் மூச்சடைப்பதைப் போல் அவர் அசுவுகரியத்தை முகத்தில் காட்ட பதறியவனாய் அவர் அருகில் சென்றவன் செய்வதறியாது தவித்தான்.

செய்கையால் அங்கிருந்த ஒரு டப்பாவை அவர் எடுத்து வரச் சொல்ல எடுத்து வந்து கையில் கொடுத்தான்.அதை திறந்தவர் அதிலிருந்த இன்ஹெல்லரை எடுத்து பயன்படுத்தி சிறிது நேத்தில் நிதானத்திற்கு வந்திருந்தார்.

அவரையே பதட்டமாய் பார்த்திருந்தவனின் தலை வருடியவர்,”ஒண்ணுமில்ல ரேஷ்வா.கொஞ்ச வருஷமா இந்த ப்ராப்ளம் இருக்கு.அப்பப்போ வரும் அப்பறம் சரி ஆய்டும்.”

அவரையே பார்த்திருந்தவன் சட்டென அவர் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.

சாரி ம்மா..ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..”

“…”

இல்லம்மா நீங்க வாழ்க்கைல எவ்ளோ கஷ்டத்தை கடந்து வந்துருப்பீங்கனு புரிஞ்சுக்காமயே இருந்துருக்கேன்.சின்ன வயசுல பரவால்ல ஆனா என் சொந்த காலில் நிக்குற தைரியம் வந்த அப்பறமாவது நா கொஞ்சம் நிதானமா யோசிச்சு உங்ககிட்ட பேசிருக்கணும்.

தெரிலம்மா ஏன் இப்படி பக்குவமே இல்லாதவனா இருந்துருக்கேன்னு தெரில.உங்களை  மாதிரியே நானும் என் வாழ்க்கையை பத்தி மட்டுமே தான் யோசிச்சுருக்கேன்.அதுவும் ஒருவித சுயநலம் தான.எல்லாத்தையும் வெறுத்து இந்த உலகத்தையே விட்டு போய்ரணும்ங்கிற முடிவையும் கோழை மாதிரி எடுத்தேன் மா..”

ரேஷ் கண்ணா என்ன சொல்ற??!”

பயப்படாதீங்க மா எனக்கு எதுவும் ஆகாம காப்பாத்தீட்டாங்க..என்னை விட வயசுல சின்னவங்க மா ஆனா வாழ்க்கையை பத்தி நிறையவே புரிய வச்சாங்க..அப்பறம் தான் புரிஞ்சுது தற்கொலை எவ்ளோ பெரிய கேவலமான விஷயம்னு.

என்னைவிட எத்தனையோ கஷ்டத்தோடும் மனபாரத்தோடும் எத்தனை பேர் வாழ்க்கையோட போராடி மீண்டு வராங்க.ஆனா நான் இவ்ளோ கீழ்தரமா ஒரு வேலையை செஞ்சனேனு தோணிச்சு.

அதுக்கு அடுத்த இந்த நாலு ஐந்து மாசங்களும் வாழ்க்கைல ரொம்ப லேசா உணர்ந்த நாட்கள்.தேவையில்லாத எந்த எண்ணமும் எனக்குள்ள வரவிடவே இல்லை அவங்க ரெண்டு பேரும்.

ஆத்விக் ஜீவிகா..ரொம்ப நல்ல ப்ரெண்ட்ஸ் மா.இப்பவும் எதோ ஒரு குழப்பத்துல தான் இருந்தேன்.உன்னை நான் மிஸ் பண்றேன்னு கூட புரியாமையே இருந்தேன்.அந்த பொண்ணு ஒரு செகண்ட்ல எல்லாத்தையும் மாத்திட்டா.நானும் என் அம்மாவோட வந்து இப்படி மனசுவிட்டு பேசிட்டு இருக்கேன்.

இனி எந்த காரணத்துக்காகவும் உன்னை தனியா விடமாட்டேன் மா என் கூடவே வந்துரு சென்னை வீட்டுக்கு.”

தன் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தவாறே அவனை கண்களால் வருடியவர்,”இந்த ஜென்மத்துக்கு இது போதும் ரேஷ் கண்ணா.நீ ஆசைப்பட்ட படி உன் வேலையில மிகப் பெரிய இடத்துக்கு வரணும்.அதை பார்த்து நான் சந்தோஷப் படணும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.