எக்காரணம் கொண்டும் இனி தப்பான எந்த முடிவுக்கும் போகாத கண்ணா..உனக்காக மட்டும் தான் இந்த அம்மா வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கா..நா இங்கேயே இருக்கேன் ரேஷ்வா.பழகின இடம் இதை விட்டுட்டு புதுசா அங்க வந்து தனியா என்ன பண்ண போறேன்.
அதுமட்டுமில்லாம என்னால முடிஞ்ச வரை நம்ம பிஸினஸை நானே பார்த்துக்குறேன்.நீ உன் கேரியர்ல கவனம் செலுத்து.எப்போ எல்லாம் அம்மாவை பார்க்கணும்னு தோணுதோ கிளம்பி வந்துரு அதே மாதிரி எனக்கும் உன்னை பாக்கணும்னு தோணினா உடனே வந்துருவேன்.சரியா!”
ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அமைதியாய் அவர் மடியில் விழி மூடினான்.மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் தொலைந்து போகும் நேரம் தூக்கம் விழிகளை தழுவாமல் போகுமோ.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து கிளம்பியவனுக்கு அப்படியாய் ஒரு உற்சாகம் எழுந்திருந்திருந்தது.முகம் மொத்தமும் மலர்ந்திருக்க தன் அன்னையிடம் விடைபெற்று கிளம்பத் தயாரானான்.
அங்கு ஆத்விகோ வழக்கம் போல் பூங்காவை அடைந்திருக்க அவனாகவே ஷான்யாவின் தந்தையிடம் பேச்சை வளர்த்தவாறு நடந்து கொண்டிருந்தான்.
“என்ன தான் சொல்லுங்க அங்கிள் உங்க காலம் தான் பெஸ்ட்.இப்போ எல்லாம் ஒண்ணும் சரியேயில்ல”
“ம்ம் நீங்க சொல்றது ரொம்ப சரிதான்.அதுவும் இந்தகால இளவட்ட பசங்களை எல்லாம் பார்த்தாலே அவ்ளோ கோபம் வருது.வீட்டுக்கு அடங்காம ஒரு பைக்கும் போனும் வச்சுருந்தா பெரிய மன்மதன்னு நினைப்பு…கொஞ்ச ஆட்டமா போடுறாங்க..நாங்க எல்லாம் எங்கப்பா முன்னாடி வந்து பேசவே பயப்படுவோம்.”
(எதாவது பேசலாம்னு பார்த்தா இப்படி உளறி வச்சு நானே எனக்கு சொந்த செலவுல சூனியம் வச்சுப்பேன் போலயே!!”)
“அப்படி பொதுவா சொல்லிட முடியாது இல்ல அங்கிள்.எத்தனையோ பசங்க பொறுப்பானவங்களாவும் இருக்காங்க.”
“ம்ம் இருந்துட்டாலும்..பொண்ணுங்க பின்னாடி சுத்துறதை தவிர என்ன பண்றானுங்க?”
“அங்கிள் எல்லா விஷயத்துலயும் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு.இப்போ உங்க காலத்துல எல்லாம் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க பசங்களுக்கு.வீட்டு நிலைமையை அப்படியே சுமூகமா கொண்டு போவீங்க அவ்ளோ தான்.
ஆனா இப்போ பாருங்க கஷ்டப்பட்டு வேலைக்குப் போறவன் சம்மாதிச்சு வீட்டுக்குத் தேவையானதை பண்ணுவான்.தன் வீட்டோட தரத்தை உயர்த்துவான்.தன் சம்பாத்தியத்துல ஒரு வீடுனு வாங்கின அப்பறம் தான் கல்யாணம்னு முடிவு பண்றான்.26-27 வயசுலயே வீடு கார்னு தனக்கான அத்தனையையும் தரத்தில் உயர்த்திட்டுதான் கல்யாணம்ங்கிற ஒரு விஷயத்தை பத்தியே யோசிக்குறாங்க.
தன் அப்பா அம்மா நடுத்தர குடும்பமா இருந்தாலும் அவன் தலையெடுத்த அப்பறம் தன் வீடு அதன் நிலையில் இருந்து ஒரு படியாவது முன்னேறும்னு நினைச்சு உழைக்குற பசங்க தான் இந்த காலத்துல அதிகம் அங்கிள்.”
“ம்ம் நீங்க சொல்றதும் சரிதான்.”,என்றவருக்கு அவன் கூறியதில் இருந்த உண்மை நன்றாகவே புரிந்தது.இருந்தும் அவனிடம் எதையும் வெளிக்காட்ட எண்ணாதவராய் அமைதியாய் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.
ஜீவிகா வேக வேகமாய் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள்.ஜெயந்தின் தாயும் தந்தையும் ஹாலில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது உள்ளே எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.
தூங்கி எழுந்து தனதறையில் இருந்து வெளியே வந்த ஜெயந்தோ அவர்களைப் போலவே உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு மெதுவாய் தாயிடம் வந்து என்னவென்பதாய் செய்கை செய்தான்.
“வா டா மகனே இன்னைக்கு எதுக்கும் கடைக்கு லீவ் விட்டுரு.நம்ம ஜீவி சமைக்குறதை பார்த்தாலே கொஞ்சம் பயமா இருக்குடா..”
“என்னமா சொல்ற?”
“என்னத்த சொல்றது இன்னைக்கு நம்ம ஜீவி சமையல் தான்.அதுவும் முதல் தடவையா சமைக்குறாளாம். நான் சொல்லித் தரேன்னு சொன்னதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டு யூடியூப் பார்த்து சமைக்குறா இன்னும் ஒண்ணும் முடிஞ்ச மாதிரி தெரில.”
“என் மேல உனக்கு பாசமே இல்லமா இப்படி உன் கண்ணு முன்னாடி என்னை கொல்ல பாக்குறா அதை தடுத்து நிறுத்தாம இப்படி இங்க உக்காந்து மழை வருதானு பாக்குற மாதிரி பார்த்துட்டு இருக்க!”
“என்ன இங்க சத்தம்??”
“அடடே ஜீவியே வந்துட்டாளே!எல்லாம் உன் சமையலைப் பத்தி தான் பெருமையா பேசிட்டு இருந்தேன் ஜீவிம்மா..”
“ம்ம் நீங்க பேசின பெருமையை நானும் கேட்டேன்..அப்பறம் கவனிச்சுக்குறேன்.அத்தை நீங்க வாங்க வந்து நா பண்ணிண லெமன் ரைஸையும் சேமியா உப்புமாவையும் டேஸ்ட் பண்ணி சொல்லுங்க..”
“என்னது லென் ரைஸா!!!!!!”
“ஆமா ஏன்??”