(Reading time: 14 - 27 minutes)

சீடர்களோட இதயச் சிறைல இந்த ரகசியங்கள் ஆயுள் கைதியா இருக்கணும். சீடர்கள் இதை எந்த காரணம் கொண்டும் வெளிப்படுத்த மாட்டேனு சத்தியம் செய்துக் கொடுத்திருக்காங்க.”

இப்ப துரை தரப்புல வாதாடினாலும் எல்லா பழியும் அவன் ஆளுங்க மேலதான் விழும். மலையில இருக்கிற வீட்டுல எடுத்த போட்டோ வீடியோ இதெல்லாம் அந்த ரெண்டு பேரு எடுத்த மாதிரி பேரேம் பண்ணிட்டேன். எல்லா கள்ளகடத்தல் விவகாரமும் வெளி வந்தனால அவன் தப்பிக்கவே முடியாது. நிச்சயமா ஜெயில்தான். அதுவுமில்லாம அவனை காட்டிக் கொடுத்தது. அவனோட ஆளுங்கனு கேசை ஈசியா திருப்பிடலாம்.”

இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம் அவனுக்கு தெரிய வாய்பே இல்லஎன ஆகாஷ் முடித்தான்.

சாருவிற்கு இதைக் கேட்க நிம்மதியாக இருந்தது.

சாரு சூர்யா போன் நம்பர் கொடுஎன்றான் ஆகாஷ்.

தன் நிம்மதிக்கு ஒரு நொடி கூட ஆயுள் இல்லையே என சாரு சூர்யா நம்பரைக் கொடுத்தாள். அடுத்து என்ன கூத்து அரங்கேற போகிறதோ என்கிற கலக்கம் அவளிடம் இருந்தது.

ஹாய் சூர்யா ஆகாஷ் பேசுறேன்என ஆரம்பித்தான்.

கன்கிராட்ஸ் . . எப்படி இருக்கு மேரிட் லைப் . .” என சாதாரணமாகவே பேசினான். சூர்யாவின் பதிலை கேட்டுக் கொண்டான் . . சிரித்தான்.

சாரு மனமோ தவித்தது. இருவருக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என தவித்தாள். சூர்யா ஒருகாலகட்டத்தில் நிறைய உதவி செய்திருக்கிறான். நன்றியை என்றும் அவள் மறக்கவில்லை.

லியா போன் எதாவது பிராப்ளமா . . அவளுக்கு ஒரு மணி நேரமா டிரை பண்றேன் ரீச் ஆகலஆகாஷ் கேட்க

அடப்பாவி என்னமா பொய் சொல்ற . .  எப்படா லியாக்கு போன் பண்ண?” என்பதை போல சாரு கண்களை உருட்ட . .

சும்மா இருஎன கண்ணடித்தவன் . .

நீயே மெசேஜ் கன்வே பண்ணிடு சூர்யா . . லியாவ என் அசிஸ்டெண்ட் போஸ்ட்ல இருந்து பையர் பண்றேன் . . இனிமே எனக்காக லியா வொர்க பண்ண வேண்டாம்என்றான்.

மறுமுனையில் அதிர்ச்சி கலந்த வார்த்தைகள் வெளிவந்தன. அடுத்த இரண்டு நொடிகளில் லியாவே தயக்கத்துடன் பேசியது சாரு காதில் விழுந்தது. சாருவிற்கு ஆகாஷ் மேல் கோபம் வந்தது.

கூல் கூல் லியா . . நீ தனியா பிராக்டிஸ் பண்ணு .. உன் திறமை உலகுக்கு தெரியணும் . . உன் மேல கோபமோ வருத்தமோ ஒரு துளிக கூட இல்லமா . . நான் இத்தன நாள் சுயநலமா இருந்துட்டேன். . . உனக்கு நல்ல பியூச்சர் இருக்கு . . எல்லா உதவியும் செய்ய தயாரா இருக்கேன். கண்டிப்பா நீ பெரிய ஆளா வருவேஎன ஆறுதல் வார்த்தைகள் கூறி போனை கட் செய்தான்.

ஆகாஷிற்கு மனம் நிறைவாக இருந்தது. சாரு சட்டென அவனை அணைத்தவள்நல்ல டிசிஷன்என்றாள். இனி சூர்யா லியா வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது என நம்பினாள்.

பாஸ் நாங்க இன்னும் எத்தன நேரம் கண்ண மூடிக்கிட்டு இருக்கணும்? ரொம்ப நேரம் ரெமேன்ஸ் நடக்குமா . . நோ பிராப்ளம் நடத்துங்கரவி நக்கலாக பேச . .

சாரு அவனைவிட்டு விலகி ந்ன்றாள். அப்போது ராமமூர்த்தியும் பத்ரிநாத்தும் உள்ளே வந்தனர். “ஆகாஷ் நாளைக்கு சென்னை போகணும் . . அம்மா ல்லிதா எல்லாரும் சென்னை வராங்கஎன்றார்

ஏன்பா?”

அடுத்து கல்யாணம் நடக்க வேண்டாமா?” என்றார்

என்ன அவசரம் பா? இப்ப வேண்டாமே

என்னடா  இப்படி சொல்ற?”

பொண்ணுக்கு டைம் வேண்டாமா. . பியூட்டி பார்லர் போகணும் . .புடவை நகை வாங்கணும் . .  எத்தன வேலை இருக்குஎன சாரு அருகில் உரசியவாரு நின்று கேட்டான். அவள் வெட்கத்தோடு நகர முயல

கல்யாண பொண்ணுக்கு புது புடவை இருக்காம் . . நகை வேண்டானு சொல்லிட்டாஎன்றார்

ஏன் சாருஎன கேட்டேவிட்டான்

தான் சொல்லவில்லை என்பதாய் அவள் தலையாட்ட

அப்பா சாரு அப்படி சொல்லவே இல்லஎன்றான்

சாருவ எதுக்கு கேட்கணும்

என்னப்பா குழப்புறிங்க

டேய் எனக்கும் உங்க அம்மாவுக்கும் அறுபதாம் கல்யாணம்என்றார்

இத்தனை பெரிய பல்பை ஆகாஷ் எதிர்பார்க்கவில்லை. அவன் முகம் போன போக்கை பார்த்து அனைவரும் சிரித்துவிட . .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.